சுளுக்கை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் | Home remedies to cure sprain
டிசம்பர் 24, 2020 Bone Health 1627 Viewsசுளுக்கு என்றால் என்ன? (What is meant by sprain in Tamil?)
உடலில் திடீரென எதாவது காயங்கள் உண்டாகும் சமயங்களில், உடல் தசையின் லிகமென்ட் (தசைநார்) விரிவடைகிறது அல்லது லிகமென்ட் கிழிய நேரிடுகிறது. இத்தகைய சிக்கலை சுளுக்கு என்று அழைக்கின்றனர். ஒரு நபரின் உடலில் சுளுக்கு ஏற்படும் போது அந்த நபர் தீவிர வலியை உணர் தொடங்குகிறார். மற்றும் திசுக்கள் ஒன்றோடொன்று இணைந்திருப்பதால் சுளுக்கு ஏற்படும் பகுதியில் உள்ள எலும்புகளுக்கும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. உடலில் சுளுக்கு உண்டாவது தீவிரமான சிக்கல் இல்லை. எனினும், இதற்கு சிகிச்சை அளிப்பதற்கு தாமதமாகும் சமயங்களில், இது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. கால்சியம் மற்றும் பொட்டாசியம் குறைபாடுகளினாலும் சுளுக்கு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தினசரி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் தசைகளில் உண்டாகும் காயங்கள் போன்றவை சுளுக்கு ஏற்படுவதற்கான பிற காரணங்களாகும். தசை வலி மற்றும் தசை பிடிப்பு ஆகியவை சுளுக்கு ஏற்படுள்ளதை உணர்த்தும் சில பொதுவான அறிகுறிகளாகும். சுளுக்கு வலியிலிருந்து மீள நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். வலி குறையும் வரை எந்த வேலையும் செய்யக்கூடாது. பொதுவாக, சுளுக்கு அனைத்து வயதினருக்கும் ஏற்படுகிறது. எனவே, இன்றையப் பதிவில் சுளுக்கு நீங்க துணை புரியும் சுளுக்கிற்கான வீட்டு வைத்தியம் குறித்து அறிந்து கொள்வோம்.
சுளுக்கை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் யாவை? (What are the home remedies to cure sprain in Tamil?)
பொதுவாக ஒரு நபருக்கு சுளுக்கு உண்டாகும் போது சில வீட்டு வைத்தியங்களை மேற்கொண்டு சுளுக்கை நீக்க, வீட்டிலேயே சிகிச்சையளிக்க முடியும், அவை:
- கல் உப்பின் பயன்பாடு (Uses of rock salt): கல் உப்பு தசை வலி மற்றும் தசைப் பிடிப்பைக் குறைக்க உதவுகிறது. கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் நிறைந்திருப்பதால், இது வீக்கத்தை நீக்குகிறது. வெதுவெதுபான நீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து குளிப்பதன் மூலம் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் பான்டேஜ் பயன்படுத்துவதன் மூலம் சுளுக்கிலிருந்து விரைவில் விடுப இயலும்.
- ஆமணக்கு எண்ணெயின் பயன்பாடு (Uses of castor oil): ஆமணக்கு எண்ணெய் எலும்புகளில் உண்டாகும் வீக்கம், சுளுக்கு மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. ஆமணக்கு எண்ணெயை சுத்தமான துணியில் ஊற்றி சுளுக்கினால் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவவும். பின்னர் சூடான நீரில் துணியை நனைத்து சுளுக்கு உள்ள பகுதியில் ஒத்தனம் கொடுப்பதும் நன்மை அளிக்கும். இந்த செயல்முறையை சுளுக்கு நீங்கும் வரை தினசரி செய்யவும். (மேலும் படிக்க- ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்).
- ஆப்பிள் வினிகரின் நன்மைகள் (Benefits of apple vinegar): ஆப்பிள் வினிகரில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை நீக்குகிறது. வெதுவெதுபான தண்ணீரில் இரண்டு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை சேர்த்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அந்ந நீரைப் பயன்படுத்தி ஒத்தனம் அளிப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைக்க இயலும். சுளுக்கு நீங்கும் வரை நாள் ஒன்றுக்கு ஒருமுறை இந்த செயல்முறையை மேற்கொள்ளவும்.
- ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு (Uses of olive oil): ஆலிவ் எண்ணெயில் வீக்கத்தைக் குறைக்கும் Anti inflammatory பண்புகள் உள்ளன, இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெய் இட்டு லேசாக மசாஜ் செய்வதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. மேலும், ஆலிவ் எண்ணெய் பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து முறை இதனை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் நன்மை பயக்கிறது.
- கிராம்பு எண்ணெயின் நன்மை (Benefits of clove oil): பெரும்பாலும் கிராம்பு எண்ணெயை பற்கள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கவே பயன்படுத்துகின்றனர். எனினும், இதனை சுளுக்கிலிருந்து விடுபடவும் பயன்படுத்தலாம் என நிரூபிக்க பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிதளவு கிராம்பு எண்ணெயை தடவி மசாஜ் செய்வது வலியைக் குறைக்க உதவுகிறது. நாள் ஒன்றுக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை இந்த செயல்பாட்டை மேற்கொள்ளவும்.
- வெங்காயத்தின் பயன்பாடு (Uses of onion): வெங்காயம் கணுக்கால் காயங்களில் உண்டாகும் வலியைக் குறைக்க உதவுகிறது. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி துணியில் மடித்து அதனைப் பாதிக்கப்பட்ட பகுதியில் பயன்படுத்தவும். வெங்காயத் துண்டுகள் உள்ள துணியைக் குறைந்தது இரண்டு மணி நேரம் அந்தப் பகுதியில் கட்டவும். இவ்வாறு, நாள் ஒன்றுக்கு ஒருமுறை செய்வதன் மூலம் நல்ல பலனை அடைய இயலும்.
- கற்றாழை ஜெல்லின் பயன்பாடு (Benefits of Aloe Vera gel): பாதிக்கப்பட்ட பகுதியை கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்வது வலி மற்றும் அசௌகரியத்தை குறைக்கிறது. கற்றாழை ஆயுர்வேததில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிவாரணியாகும் மற்றும் இது சுளுக்குலிருந்து விடுபட பெறும் பயனுள்ளதாக இருக்கின்றது. (மேலும் படிக்க – கற்றாழையின் நன்மைகள்)
நீங்கள் முழங்கை வலியால் அவதிப்பட்டால், ஒரு நல்ல எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரைத் தொடர்பு (Orthopedic Surgeon) கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த எழும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
டெல்லியில் சிறந்த எழும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்