கவாசாகி நோய் என்றால் என்ன | Kawasaki disease meaning in Tamil
டிசம்பர் 9, 2020 Bone Health 1514 Viewsகவாசாகி என்பது குழந்தைகளின் தோல், வாய் மற்றும் நிணநீர் மண்டலங்களை அடிக்கடி பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த நோய் முக்கியமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகிறது. இது தவிர, இதய நோய்களும் இதன் காரணமாக ஏற்படுகின்றது. குழந்தைகளில் இந்த நோயின் அறிகுறிகள் விரைவில் கண்டறியப்பட்டால், மருத்துவர் அதற்கான சிகிச்சைகளை அளிக்கின்றன. பச்சிளம் குழந்தைகளில், எந்தவித சிகிச்சையும் இல்லாமல் இந்த நோய் தானாகவே குணமாகின்றது. இதன் விளைவாக தோலில் தட்டை, கழுத்தில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. கவாசாகி நோய் என்றால் என்ன, அது எப்படி ஏற்படுகின்றது என்பது பற்றி பலருக்கும் தெரியாது. இந்தக் கட்டுரையில் கவாசாகி நோய் என்றால் என்ன, என்பது குறித்த தகவல்களை விரிவாகக் கூறி உள்ளோம்.
- கவாசாகி நோய்க்கான காரணங்கள் யாவை? (What are the causes of Kawasaki disease in Tamil?)
- கவாசாகி நோயின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Kawasaki disease in Tamil?)
- கவாசாகி நோய்க்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for Kawasaki disease in Tamil?)
- கவாசாகி நோயை எவ்வாறு தடுப்பது? (How to prevent Kawasaki disease in Tamil?)
- கவாசாகி நோயின் சிக்கல்கள் என்ன? (What are the risks and complications of Kawasaki disease in Tamil?)
கவாசாகி நோய்க்கான காரணங்கள் யாவை? (What are the causes of Kawasaki disease in Tamil?)
கவாசாகி நோய்க்கான முக்கிய காரணம் இன்னும் அறியப்படவில்லை. இருப்பினும், இதற்கான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. சில மருத்துவர்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியின் பலவீனம் காரணமாக, இந்த நோய் ஏற்படுகின்றது என்று கூறுகிறார்கள். எனினும், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
- சில சந்தர்ப்பங்களில் இந்த நோய் மரபணு ரீதியாக ஏற்படுகின்றது.
- ஒருவித வைரஸ் அல்லது பாக்டீரியாவின் தொற்று காரணமாகவும் ஏற்படுகின்றது.
- சில சந்தர்ப்பங்களில் இது ரசாயன பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படுகின்றது.
- பின்வரும் சில ஆபத்து காரணிகளாளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது –
- சிறுமிகளை விட இந்த நோய் சிறுவர்களுக்கு அதிகமாக ஏற்படும் ஆபத்துகள் உள்ளது.
- குளிர் மற்றும் மழைக்காலங்களில், இந்த நோயின் ஆபத்து அதிகமாகிறது. (மேலும் படியுங்கள்- மழைக்காலத்தில் தோல் பராமரிப்பு)
- பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இது ஏற்படுகிறது.
- ஆசிய கண்ட குழந்தைகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கவாசாகி நோயின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Kawasaki disease in Tamil?)
கவாசாகி நோய் குழந்தைகளுக்கு உண்டான பின், அதன் அறிகுறிகள் வெளிவர நேரம் எடுக்கிறது. இந்த நோய் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது மற்றும் இதன் அறிகுறிகள் வெளிபட ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் வரை ஆகலாம். பின்வருவன கவாசாகி நோயின் பிற அறிகுறிகளாகும், அவை :
- குழந்தைக்கு அதிக காய்ச்சல் ஏற்படும்.
- சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல்.
- தோல் வெடிப்பு.
- கை, கால்களின் வீக்கம்.
- தோல் சிவத்தல்.
- நாவில் வீக்கம்.
- மூட்டு வலி. (மற்றும் படிக்க- வைட்டமின் டி குறைபாடு)
- வயிற்றுப்போக்கு.
- வாந்தி.
- கழுத்தில் நிணநீர் முனையின் வீக்கம்.
- தொண்டை வலி.
- வாய் மற்றும் உதடுகளில் வலி. மேலும், உங்கள் குழந்தைக்கு காய்ச்சல் குறையவில்லை என்றால் அல்லது காய்ச்சல் ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். இது தவிர, குழந்தையின் சருமத்தில் பிரச்சினை, கண்கள் சிவத்தல், நிணநீர் சுரப்பிகளின் வீக்கம், போன்றவை இருந்தால், எந்த தாமதமும் இல்லாமல் உடனடியாக சிகிச்சையளிக்க வேண்டும்.
கவாசாகி நோய்க்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for Kawasaki disease in Tamil?)
- கவாசாகி நோயில், குழந்தைக்கு காய்ச்சல், மற்றும் தோலில் அழற்சி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. மருந்துகளை வழங்குவதன் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் ஆஸ்பிரின் போன்ற சில மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன, இது இரத்தம் உறைவதைத் தடுக்கிறது. மேலும், மருத்துவரைக் கேட்காமல் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது.
- சில சந்தர்ப்பங்களில் கார்டிகோஸ்டீராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன, இந்த மருந்தில் உடலை பாதிக்கும் ஹார்மோன்கள் மற்றும் ரசாயனங்கள் உள்ளன. மற்ற மருந்துகள் வேலை செய்யாதபோது இந்த மருந்து பொதுவாக வழங்கப்படுகிறது, கூடுதலாக, குழந்தைக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், குழந்தைக்கு கார்டிகோஸ்டீராய்டு மருந்து வழங்கப்படுகின்றது.
- இன்ட்ரெவனஸ் இம்யூனோகுளோபூலின் மருந்து (ஐ.வி.ஐ.ஜி). இந்த மருந்து ஒரு ஊசி மூலம் நரம்பில் செலுத்தப்படுகிறது. கூடுதலாக, ஆன்டிபாடிகள் வழங்கபடுகின்றன, இது நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. இந்த மருந்துகளை பாதிக்கப்பட்ட குழந்தைகக்கு வழங்கிய பிறகு, உண்டான அறிகுறிகள் 30 முதல் 36 மணி நேரத்திற்குள் குறையத் தொடங்குகின்றன.
- 36 மணி நேரத்திற்குப் பிறகும் குழந்தையிடம் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், மருத்துவர் மற்றொரு டோஸ் கொடுக்கலாம்.
- காய்ச்சலைப் போக்க குழந்தைக்கு ஆஸ்பிரின் மருந்து வழங்கப்படுகிறது, மேலும் இது ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் நோய் தொடர்பான அறிகுறிகளை குறைக்கிறது. இதயத்தை அடையும் இரத்த நாளங்களில் இரத்த உறைவைக் குறைக்க மருந்து வழங்கப்படுகிறது.
கவாசாகி நோயை எவ்வாறு தடுப்பது ? (How to prevent Kawasaki disease in Tamil?)
கவாசாகி நோயைத் தடுக்க குறிப்பிட்ட தீர்வுகள் இன்னும் அறியப்படவில்லை. இது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.
கவாசாகி நோயின் சிக்கல்கள் என்ன? (What are the risks and complications of Kawasaki disease in Tamil?)
கவாசாகி நோய் பின்வரும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அவை :
- அசாதாரண இதய துடிப்பு.
- இதய தசையில் வீக்கம்.
- இரத்த நாளங்களில் அழற்சி ஏற்படும்.
- கரோனரி ஆர்ட்ரி (Coronary artery) விரிவடைதல்.
- இதய வால்வுகள் சேதமடைகின்றன.
- கவாசாகி நோயின் பிற சிக்கல்கள்,
- எழும்புகளில் பாதிப்பு.
- கண்ணின் உள்பகுதியில் பாதிப்பு.
- மூளையைச் சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம்
கவாசாகி நோய் குறித்த கூடுதல் தகவல்களையும் சிகிச்சையையும் நீங்கள் பெற விரும்பினால், எலும்பியல் நிபுணரைத் (Orthopedic Surgeon) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த நரம்பியல் நிபுணர்
டெல்லியில் சிறந்த நரம்பியல் நிபுணர்