மனச்சோர்வு என்றால் என்ன | Depression meaning in Tamil
நவம்பர் 23, 2020 Brain Diseases 4433 ViewsEnglish हिन्दी Bengali Tamil العربية
இன்றைய சூழலில் மக்கள் அனைவரும் தங்கள் பணியில் மிக கடினமாகவும் ஓயாமலும் உழைக்கின்றனர், இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இது ஒரு வகை மனநோயாகும். இதன் பொருட்டு மக்களின் மனதில் வெறுப்பு , துக்கம், விரக்தி போன்றவை நிரப்பப்படுகிறது. இதன் காரணமாக பலர் தங்களது அன்றாட வேலைகளை சரியாக செய்ய இயலாமல் தவிக்கின்றனர். இன்றையக் கட்டுரையில் மனச்சோர்வு என்றால் என்ன ? பற்றி விரிவாக அறிவோம்.
மனச்சோர்வு என்றால் என்ன ? என்பது குறித்து சில ஆராய்ச்சிகளின்படி உலகம் முழுவதும் 34 கோடி மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், எனக் கண்டறியப்பட்டுள்ளது. நிலையான கவலை, கோபம், உடலில் சேதம் ஏற்படுவது மற்றும் தற்கொலைக்கு முயற்சிப்பது போன்ற சில அறிகுறிகள் அவர்களிடத்தில் காணப்படுகின்றன. மேலும், 18 முதல் 34 வயதிலுள்ள இளைஞர்களே அதிக மன அழுத்தத்தை உணர்கிறார்கள்.
மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுபவர்கள் தங்கள் சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல், மாறாக தவறான முடிவினை தேர்வு செய்கின்றனர்.
இதற்கு சான்றாக, அன்மையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், அதிக மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக செய்திகளில் பதிவாகியுள்ளது.
நீங்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், மன அழுத்தத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீங்கள் மனநல மருத்துவரின் உதவியை அணுக வேண்டும்.
- மனச்சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை ?(What are the causes of depression in Tamil)
- மனச்சோர்வு -யின் அறிகுறிகள் யாவை ?(What are the symptoms of depression in Tamil)
- மனச்சோர்வுக்கான பரிசோதனை (Diagnosis of depression in Tamil)
- மனச்சோர்வுக்கான சிகிச்சை என்ன ? (What are the treatments for depression in Tamil)
- மன அழுத்தத்தை எவ்வாறு தடுப்பது ?(How to prevent depression in Tamil)
மனச்சோர்வு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை ?(What are the causes of depression in Tamil)
மனச்சோர்வுக்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை. எனினும், மக்கள் அவற்றின் அறிகுறிகளின் அடிப்படையில் அதற்கான சிகிச்சையை நாடுகின்றனர். பின்வருவன மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பொதுவான காரணங்களாகும். அவை:
- சிலருக்கு மரபணு ரிதியாக மனச்சோர்வு பிரச்சினைகள் உண்டாகின்றது.
- மனதில் ஏற்படும் மாற்றங்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கு தடையாக அமைகிறது, இதன் விளைவாக உடலின் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகிறது. மேலும், உடல் பாதிப்புக்கு உள்ளாகி மனச்சோர்வின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
- குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாக, சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். படிப்பு, வேலை அல்லது திருமணம் போன்றவற்றில் உண்டாகும் சிக்கல்களும் மன அழுத்தத்தை தூண்டுகின்றது.
மனச்சோர்வு -யின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of depression in Tamil?)
மனச்சோர்வின் அறிகுறிகள் அதன் வகையைப் பொறுத்து மாறுபடுகிறது. இந்த அறிகுறிகள் மனிதனின் எண்ணங்களையும், உணர்வுகளையும் மற்றும் மக்களின் அன்றாட செயல்களையும் பாதிக்கிறது. அவை:
- உடல் களைப்பாகுதல்.
- சோகம்.
- ஓய்வின்மை.
- எரிச்சல்.
- கோபம்.
- துக்கம்.
- சிந்தித்தல் மற்றும் முடிவெடுப்பதில் சிரமம்.
- பணி செய்ய இயலாமல் இருத்தல்.
- குற்ற உணர்வை ஏற்படுத்தும் சிந்தனை.
- மருந்து, மாத்திரைகளை அதிகப்படியாக உட்கொள்ளல்.
- தலைவலி மற்றும் உடல் வலி.
- தசை வலி
- மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருப்பது.
- அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை.
- எந்த செயலிலும் பங்கேற்காமல் இருப்பது.
மனச்சோர்வுக்கான பரிசோதனைகள். (Diagnosis of depression in Tamil)
மனச்சோர்வைக் கண்டறிய பின்வரும் பரிசோதனைகளைச் செய்யலாம்.
- முதலாவதாக, மருத்துவர் உடல்நலம் தொடர்பான கேள்விகளை நோயாளிகளிடம் கேட்டு, ஏதேனும் உடல் சார்ந்த பிரச்சினைக்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய முயற்சிக்கிறார்.
- பரிசோதனையின் ஒரு ஆய்வக , அடிப்படை நோயைக் கண்டறிய மருத்துவர்கள் இரத்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர்.
- மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் மனநலம் தொடர்பான கேள்விகளைக் கேட்கிறார்.
மனச்சோர்வுக்கான சிகிச்சை என்ன? (What are the symptoms of depression in Tamil?)
மனச்சோர்வு என்பது ஒரு மனநோயாகும், இதன் வகையின் அடிப்படையில் இதற்கு சிகிச்சையளிக்கப் படுகிறது. இதில் ஆதரவு, உளவியல் சிகிச்சை, மருந்துகள் ஆகியவை அடங்கும். அவை :
- மன அழுத்தத்திலிருந்து வெளியேற, ஒரு நபருக்கு நம்பிக்கையும், நல்ல நடத்தையும் தேவை . இதன் மூலம் அந்த நபரின் மன அழுத்தத்தை குறைக்க இயலும்.
- உளவியல் சிகிச்சையானது ஒருவரின் மன எண்ணங்களை அறிய உதவுகிறது, இதன் பொருட்டு உரையாடல் சிகிச்சை , பிறவி சிகிச்சை, ஒருவருக்கொருவர் உரையாடல் சிகிச்சை மற்றும் பொது சிகிச்சை போன்றவற்றைக் கொண்டுள்ளது. இந்த சிகிச்சைகள் அனைத்தும் மன அழுத்தத்தை குணப்படுத்த செய்யப்படுகின்றன.
- மனச்சோர்வை குணப்படுத்த சில மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படக்கூடாது, அவை இளம் பருவத்தினருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் .
- உங்கள் அன்றாட பழக்கத்தை மேம்படுத்த, உடலை வலிமையாக்க தினமும் உடற்பயிற்சி மற்றும் உணவில் ஒரு சீரான உணவு பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
மனச்சோர்வைத் தடுப்பது எவ்வாறு? (How to prevent depression in Tamil?)
- மனச்சோர்வைத் தடுக்க பின்வரும் சில நடவடிக்கைகள் பின்பற்றவும். மனச்சோர்வைத் தடுக்க நீங்கள் ஒரு நல்ல மெல்லிசையைக் கேட்கலாம். சோகமான பாடல்களைக் கேட்பதை தவிர்க்கவும். மகிழ்ச்சியானவற்றை மட்டுமே கேளுங்கள், இதனால் மனதில் ஏற்படும் மனச்சோர்வைக் குறைக்க முடியும்.
- மனச்சோர்வைத் தவிர்ப்பதற்கு, இரவில் விரைவில் தூங்குவதையும், காலையில் விரைவில் எழுந்திருப்பதையும் ஒரு பழக்கமாக பின்பற்றுங்கள். படுக்கைக்கு முன் மடிக்கணினி மற்றும் மொபைலைப் பார்ப்பதை தவிர்க்கவும், ஏனெனில் இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.
- மனச்சோர்விலிருந்து வெளியேற, நீங்கள் அதிக ஆர்வமுள்ள உங்கள் மனதிற்கு பிடித்த வேலையைச் செய்யுங்கள்.
- மன அழுத்தத்தைக் குறைக்க , சில பக்தி புத்தகங்களைப் படியுங்கள். மற்றும் பஜனைகளைக் கேட்பதன் மூலமும் உங்கள் மனதை அமைதிப்படுத்த இயலும்.
- மன அழுத்தத்தை குறைக்க , ஒரு நபர் தினமும் காலையிலும் மாலையிலும் நடக்க வேண்டும் மற்றும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இவை ஒரு நபரின் ஆரோக்கியத்தையும் மனதையும் அமைதியாக வைத்திருக்க உதவுகிறது.
- மனச்சோர்வைத் தடுக்க சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள். மேலும் பகலில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தேனீர் மற்றும் காபி உட்கொள்ளலைக் குறைத்தல் வேண்டும் . ஆல்கஹால் மற்றும் புகைப் பழக்கத்தை விட்டு விடுங்கள், ஏனென்றால் இவை அனைத்தும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது.
நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், ஒரு மனநல மருத்துவரைத் ( Psychiatrist ) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.