உளவியல் சிகிச்சை | Psychotherapy meaning in Tamil

ஜனவரி 28, 2021 Brain Diseases 623 Views

English हिन्दी Tamil

உளவியல் சிகிச்சை, மனநல பிரச்சினைகள் மற்றும் மன நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த வழி  முறையாக கருதப்படுகிறது. இதன் நோக்கம் நோயாளிகளுக்குபதட்டம் அல்லது மனச்சோர்வை ஏற்படுத்தும் உணர்வுகளை உளவியல் ரீதியாகப் புரிந்துகொள்வதாகும். இது, பல கடினமான சூழ்நிலைகளை மிகவும் எளிமையான முறையில் கையாள உதவுகிறது. பெரும்பாலும், இந்த சிகிச்சையின் காலம் குறைந்தது 1 வருடத்திற்கு நீடிக்கிறது. வாழ்வியல்  மாற்றத்திற்காக ஆர்வமுடன் சிகிச்சையில் ஈடுபடும் நபர்களே, இந்த சிகிச்சையின் பலனை பெறுகின்றனர். மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற மனம் சார்ந்த சிக்கல்கள் முதல் போதைப்பொருள் மற்றும் குடும்ப தகராறு வரையிலான பிரச்சினைகளுக்கு, உளவியல் சிகிச்சை நிவாரணம் அளிக்கிறது. ஒரு நபர் எந்தவித பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவரின்  மன ஆரோக்கியத்தை மேம்படுத்த, இந்த சிகிச்சை முறை  உதவுகிறது. மருத்துவத்துவ ரீதியாக ஏற்படுகின்ற, பைபோலார் டிஸாடர்  மற்றும் ஸ்கைசோஃப்ரினியா (Schizophrenia) போன்ற சிக்கல்களுக்கு சிகிச்சையளிப்பதில் உளவியல் சிகிச்சை பெரும் பங்கினைக்  கொண்டிருக்கிறது. உளவியல் சிகிச்சை என்றால் என்ன, அது எவ்வாறு செய்யப்படுகிறது? அதன் நன்மைகள் என்ன? போன்ற கேள்விகள் தற்போது அனைவரின் மனதிலும் எழுகின்றன. இன்றையப் பதிவில் உளவியல் சிகிச்சை குறித்து சில தகவல்களை விரிவாகக் கூறுகிறோம்.

 • உளவியல் சிகிச்சையின் வகைகள் (Types of psychotherapy in Tamil)
 • உளவியல் சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது? (How is psychotherapy done in Tamil?)
 • உளவியல் சிகிச்சையின் நன்மைகள் யாவை? (What are the benefits of psychotherapy in Tamil?)

உளவியல் சிகிச்சையின் வகைகள் (Types of psychotherapy in Tamil)

உளவியல் சிகிச்சையில் பல வகைகள் உள்ளன, அவை 

 • நடத்தை சிகிச்சை (Behavior therapy) – வாழ்க்கை முறையில் சில நடத்தை மாற்றத்தை மேற்கொள்வதன் விளைவாக நோயாளிகள் எவ்வித பலன்களைப் பெறுகின்றனர், என்பதைப் புரிந்துகொள்ள நடத்தை சிகிச்சை உதவுகிறது. இது ஒரு நபரை நேர்மறையானவராக மாற்றவும், சமூக வலுவான செயல்களில் ஒரு நபரின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் முயற்சிக்கிறது. இதன் அணுகுமுறை நோயாளியின் நடத்தையை மதிப்பிடுகிறது, பின்னர் நோயாளியின் மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க  முயற்சிக்கிறது. இந்த சிகிச்சை முறையானது, நோயாளிகளின் ஈடுபட்டை பொறுத்தே பயனளிக்கிறது
 • அறிவாற்றல் சிகிச்சை (cognitive therapy)- அறிவாற்றல் சிகிச்சையானது, ஒருவரின் மன எண்ணங்களை பொறுத்து தொடங்குகிறது. உதாரணமாக, “நான் பயனற்றவன்அல்லதுநான் அனைத்து செயல்களிலும்  தவறு செய்கிறேன்போன்ற மனதில் எழும் தவறான அவநம்பிக்கைகளின் அடிப்படையில் மனச்சோர்வு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. இந்த அவநம்பிக்கைகளை மாற்ற, ஒருவர்  தன் வாழ்க்கை  நிகழ்வுகள் குறித்த பார்வையை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது. அறிவாற்றல் சிகிச்சை முறை, ஒரு நபரின் கடந்த கால நிகழ்வுகளை மறந்து அவரின் எதிர்காலத்தை பற்றிய சிந்தனைகளில் ஈடுபட வைக்கிறது. அறிவாற்றல் சிகிச்சை முறையானது பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (post traumatic stress disorder) (பி.டி.எஸ்.டி) போன்ற மனம் தொடர்பான கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
 • குடும்ப மருத்துவம் (Family medicine)-  குடும்ப மருத்துவ சிகிச்சை முறையில், ஒரு குடும்ப மருத்துவர் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பச் சூழலை ஆராய்கிறார். சில சமயங்களில், நோயாளிகளுக்கு   குடும்பத்தின் சிகிச்சை (family unit) தேவைப்படுகிறது. திருமண சிக்கல்களின் காரணமாக ஒரு நபர் மனச்சோர்வை அனுபவிக்கும் போது, அறிவாற்றல் சிகிச்சை, நடத்தை சிகிச்சை மற்றும் குறிப்பாக இடைநிலை சிகிச்சை ஆகியவை உதவுகிறது. மருத்துவர்கள் ஒரு நபருக்கு ஏற்படும் நடத்தை கோளாறு அல்லது மனநோய்க்கு பங்களிக்கும் வகையில் குடும்பத்தின் மருத்துவ வரலாறுகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய முற்படுகிறார். இது  குடும்ப உறுப்பினர்களுக்கு உள்ள எதிர்மறையான பழக்கவழக்கங்களையும், வடிவங்களையும் உடைக்க உதவுகிறது. பெரும்பாலும், குடும்ப சிகிச்சை முறையில் குடும்ப உறுப்பினர்களுக்குள் உள்ள தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த சிகிச்சை முறையில் நோயாளிகள் மற்றவர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு வெளிப்படையாக எவ்வாறு பதிலளிப்பது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள். குடும்ப மருத்துவ சிகிச்சையில் பொதுவாக நோயாளி மற்றும் அவரின் குடும்பத்தினருடன் ஒரு குழுவாகவோ, ஜோடிகளாகவோ அல்லது ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடுவதின் மூலம் குடும்ப சிக்கல்களை தீர்க்க உதவுகிறது
 • இடைநிலை சிகிச்சை (Interdisciplinary therapy)- இந்த சிகிச்சையின் அணுகுமுறையானது, ஒருவருக்கு மற்றொருவருடன் உள்ள உறவில் கவனம் செலுத்துகிறது. உதாரணமாக, ஒரு நபருக்கு மற்றவர்களுடனான உறவுகளின்  காரணமாக மனச்சோர்வு ஏற்படலாம். இது போன்ற சமயங்களில், ஒருவருக்கு ஒருவருடனான  தகவல்தொடர்பு முறைகளை மேம்படுத்துவதற்கான திறன்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நோயாளியின் மனச்சோர்வை நிர்வகிக்க உதவும். முதலாவதாக, சிகிச்சையாளர்கள் நோயாளிகளுக்கு  மன சிக்கலுடன் தொடர்புடைய உணர்ச்சிகளை அடையாளம் காண உதவுகின்றனர். மேலும், அவர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகளை ஆரோக்கியமான முறையில் எவ்வாறு  வெளிப்படுத்துவது என்பதை விளக்குகின்றனர். உதாரணமாக, தான் மிகவும் கோபமாகவும், மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டதாகவும் உணரக்கூடிய ஒருவர் எதிர்மறையான நடத்தைகளைக் கொண்டிருக்கலாம். தமக்கு உண்டாகும் மன காயங்களையும், பதட்டத்தையும் அமைதியான முறையில் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வதன் மூலம், மற்றவர்களிடமிருந்து நேர்மறையான பதிலைப் பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இந்த சிகிச்சை முறையில், நோயாளிகள் தங்களுக்கு மனசிக்கல் ஏற்படும்  போது, அவர்களின் அணுகுமுறையை மாற்றியமைக்கவும், அவற்றைப் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொள்கிறார்கள்.
 • மனோதத்துவ சிகிச்சை (Psychodynamic therapy) –  இந்த சிகிச்சை முறையானது, நோயாளியின் மன ஆழத்துடன் தொடர்புடைய நடத்தை மீது கவனம் செலுத்துகிறது. ஒரு நபர், அவரது   குழந்தைப் பருவத்தில் தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், இன்றளவும் தன்னை தொடர்வது போல உணர்கிறார் எனில், அவர் வளர்ச்சியின் போதே இவ்வாறு நடந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார். இந்த சிகிச்சையின் முக்கிய பணியாதெனில், ஒரு நபருக்கு அவரது  நடத்தையைப் பற்றி முற்றிலுமாக அறியப்படுத்துவதாகும். இதனால், குழந்தை பருவத்தில் உள்ள பிரச்சினைகள் தற்போது தம்மை பாதிக்காது என்பதை அந்த நபர் அறிந்து கொள்கிறார்.
 • குழு சிகிச்சை (Group therapy) –  குழு சிகிச்சை முறையில், ஒரு குழ அமர்வில் பொதுவாக 6-12  வாடிக்கையாளர்கள் மற்றும் ஒரு சிகிச்சையாளரை உள்ளடக்கி இருக்கிறது. ஒரே போன்ற பிரச்சினைகளை உடைய பங்கேற்பாளர்களை ஒரு குழுவாக அமைகின்றனர். மேலும், இந்த குழுவிலுள்ள பங்கேற்பாளர்கள் சிகிச்சையாளரிடமிருந்து பயனடைகிறார்கள். குழுவினர் மற்றவர்கள் தங்கள் பிரச்சினைகளை எவ்வாறு கையாளுகிறார்கள் மற்றும் தங்களின் கருத்துகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கிறார்கள். ஒரே போன்ற பிரச்சினைகள் உடைய மற்றவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவது ஒரு புதிய அணுகுமுறையாக கருதப்படுகிறது. மேலும், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மனதளவில் முன்னேற்றத்தையும், மாற்றத்தையும் எளிதில் பெறுகின்றனர். குழு சிகிச்சை முறையானது, தங்களுக்கு உள்ள பிரச்சினைகளின் காரணமாக அந்நியப்பட்டதாக உணரக்கூடியவர்களுக்கு உதவக்கூடும். ஒரு குழுவில் பங்கேற்க முதலில் தயக்கமும், பயமும் இருந்தாலும், நாளடைவில் இது போன்ற உணர்வுகள் சிதறத் தொடங்குகின்றன.

உளவியல் சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது? (How is psychotherapy done in Tamil?)

உளவியல் சிகிச்சை முறை குடும்பம், தனிநபர், வாழ்க்கைத் துணை மற்றும் குழுவாக  செய்யபடுகின்றது. இது குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும், தங்கள் வாழ்வியல் பிரச்சினைகளிலிருந்து நிவாரண பெற உதவுகிறது. இருப்பினும், உளவியல் சிகிச்சையில் சில  முக்கிய நடவடிக்கைகளை  மனதில் கொள்ள வேண்டும், அவை

 • உளவியல் சிகிச்சையின் போது, ​​ஒரு நபர் தனது மருத்துவர் மீது முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும், அத்தகைய எண்ணமுடைய சிகிச்சை மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்
 • பெரும்பாலான, உளவியல் சிகிச்சை அமர்வுகள் 30 முதல் 50 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. வாடிக்கையாளர் மற்றும் சிகிச்சையாளர் என இருவரும் அமர்வில் முழுமையாக ஈடுபட வேண்டும். சில கடுமையான மன உணர்ச்சிகளைத் தீர்க்க சில மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை  ஆகக்கூடும் என்பதால், அவசரகால சிக்கல்களைத் தீர்க்க உளவியல் சிகிச்சைக்கு நீண்ட நேரம் ஆகிறது.
 • வாடிக்கையாளர் தங்கள் மனநல மருத்துவரிடம் அவர்களின் சிகிச்சை எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் எப்போது அமர்வைத் தொடங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும்.
 • உங்கள் அடையாளத்தை மறைத்து வைப்பது மனநல சிகிச்சையில் தவறான செயலாகும்வாடிக்கையாளர் தனது உணர்வுகளையும் எண்ணங்களையும் மனநல மருத்துவரிடம் வெளிப்படையாக வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில், வாடிக்கையாளருக்கு சிகிச்சையாளருடன் ஆழமான தொடர்பு இல்லையெனில், அது பயனுள்ள சிகிச்சையாக கருதப்படுவதில்லை.

உளவியல் சிகிச்சையின் நன்மைகள் என்ன? (What are the benefits of psychotherapy in Tamil?)

உளவியல் சிகிச்சையானது பலருக்கும் பயன்படுகிறது. பின்வரும் மன நிலை உணர்வுகளிடமிருந்து, ஒரு நபர் இந்த வகை சிகிச்சை முறையை மேற்கொள்வதன் மூலம் பயனடையக்கூடும், அவை :  

 • சோகம் அல்லது உதவியற்ற உணர்வுகளை நீக்குவது போன்றவை
 • அன்றாட பிரச்சினைகளை எதிர்கொள்ள  இயலாமல் இருக்கும் உணர்வை அகற்றுவதில் நன்மை பயக்கிறது.
 • பெரும்பாலான நேரங்களில், வேலை அல்லது படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும் போது, உளவியல் சிகிச்சை நன்மை பயக்கிறது.
 • அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்ளல், போதை மருந்து உட்கொள்ளல், மற்றும்  தனக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்கும் அளவிற்கு ஆக்ரோஷமாக இருப்பது, அத்தகையவர்களுக்கு சிகிச்சையளிக்க இது உதவுகிறது
 • நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முயன்ற போதும், மேம்படாத ஒரு உணர்வை மனநல சிகிச்சையால் சரிசெய்ய முடியும்.

உங்களுக்கு மனநலம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், நீங்கள் ஒரு நல்ல மனநல மருத்துவரை தொடர்பு (Psychologist) கொள்ள வேண்டும். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


Psychiatrist 

Best Psychiatrist in Delhi

Best Psychiatrist in Mumbai

Best Psychiatrist in Chennai

Best Psychiatrist in Bangalore 

Psychologist 

Best Psychologist in Delhi

Best Psychologist in Mumbai

Best Psychologist in Chennai

Best Psychologist in Bangalore 


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox