கவலை என்றால் என்ன | What is anxiety in Tamil
டிசம்பர் 28, 2020 Brain Diseases 1627 Viewsகவலை உடல் ஆரோக்கியத்திற்கு ஏன் மோசமானதாக அமைகிறது? (Why is anxiety bad for your health in Tamil?)
தற்போதைய சூழலில் நவீன தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது. எனினும் அதே சமயத்தில், இதன் விளைவாக மக்களுக்கு கவலை அல்லது பதற்றம் அதிகரிக்கிறது. ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களால் கவலைப்படுகின்றனர். மாணவர்கள் பரிட்சையை நினைத்து கவலைப்படுகிறார்கள். உழைக்கும் மக்கள் அவரவர் பணியை சரியான நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற கவலையின் காரணமாக நிலையான மன அழுத்தத்தைக் கொண்டுள்ளனர். குடும்பத்தில் உண்டாகும் குழப்பங்கள் மற்றும் சிக்கல்களினாலும் கவலையின் அறிகுறிகள் தோன்றுகிறது. மனித வாழ்க்கையை பொருத்தமட்டில் மகிழ்ச்சியும் மனச்சோர்வும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக கருதப்படுகிறது. இந்தப் பதிவில் கவலை என்றால் என்ன மற்றும் கவலை ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கவலை என்றால் என்ன? (What is anxiety in Tamil?)
கவலை மற்றும் பதட்டத்தை ஒரு நோயாக வகைப்படுத்த இயலாது. ஏனெனில், இது அனைத்து விதமான மனநலக் கோளாறுகள், ஒன்று இணைந்து உண்டாக்கும் சிக்கலாக கருதப்படுகிறது. கவலை மற்றும் பதட்டம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. கவலையுள்ள மனிதர்களால் எந்த வேலையிலும் வெற்றிபெற இயலாது. மேலும், இதன் விளைவாக மக்கள் சோர்வாகவும், தன்னம்பிக்கையை இழந்தவர்களாகவும் இருக்கின்றனர். கவலை மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது, கவலை உள்ள மக்கள் எப்போதும் பயத்துடனும், பதட்டத்துடனும் இருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக: – நேஹா என்னும் பள்ளி மாணவியின் தந்தை மிகவும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார், இதனால் அவரால் தனது மகளின் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதன் காரணமாய் பள்ளி நிர்வாகம் தன்னை தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்களோ, தன்னை பள்ளியிலிருந்து வெளியேற்றிவிடுவார்களோ என்றெல்லாம் எண்ணி நேஹா தனது கல்வியை நினைத்து அதிக பதட்டமும் மிகுந்த கவலையும் அடைகிறாள்.
கவலை அல்லது பதட்டத்தின் வகைகள் யாவை? (What are the types of anxiety in Tamil?)
கவலை ஆறு வகைப்படும், அவை:
- சமூகத்தினால் கவலை (social anxiety)- மக்கள் தாம் செய்யும் செயல்களால், இந்த சமூகம் தம்மை விமர்வசிக்க நேரிடும் சூழ்நிலை உருவாகிவிடுமோ என எண்ணி நிலையான பயத்தை கொள்கின்றனர். இத்தகைய நிலையில் மக்களின் மனதில் இந்த வகை கவலை இயல்பாக தோன்றுகிறது.
உதாரணமாக- ஒரு குடும்பதிலுள்ள பெண் வீட்டிற்கு தாமதமாக வந்தால், ஊரார் தங்கள் குடும்பத்தாரை விமர்சிக்க நேரிடுமோ என்று எண்ணி அந்த குடும்பத்தினர் கவலை கொள்கிறார்கள்.
- ஃபோபியா(Phobia)– சிலருக்கு நீர், உயரம் அல்லது சாலையைக் கடப்பது போன்ற சில காரணங்களால் அளவுக்கு மீறிய அச்சம் உண்டாகிறது. இதனை ஆங்கிலத்தில் ஃபோபியா என்று அழைக்கின்றனர். இதுவும் ஒரு வகையான கவலையாகவே கருதப்படுகிறது.
- பொதுவான கவலை (Generalized anxiety)- இந்த வகை கவலையில், மக்கள் தங்கள் மன எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயங்கி, அவர்களின் கருத்துக்களை வெளிபடுத்தாமல் இருக்கின்றனர். இதன் விளைவாக இந்த எண்ணங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்கிறது.
- ப்பனீக் டிஸாடர் (Panic disorders )- ப்பனீக் டிஸாடர் உள்ள மக்கள் சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் பயம் கொள்கிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மூச்சுத்திணறல் உண்டாகிறது. மேலும், அவர்களின் இதயத்தில் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. இது அதிக மன அழுத்தத்தினால் ஏற்படுகின்றது, இதனை ப்பனீக் அடாக் என்று அழைக்கின்றனர்.
- போஸ்ட் டிராமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸாடர் (பி.டி.எஸ்.டி) (Post traumatic stress disorder (PTSD ))- பழிவாங்க துடிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த வகை கவலை உண்டாகிறது. இதன் விளைவாக சில சமயங்களில், அந்த நபர்கள் தங்கள் மனதின் சமநிலையை இழந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
- அப்செசிவ்–கம்பல்ஸிவ் டிஸாடர் (Obsessive compulsive disorder)- இந்த வகை கவலையுள்ள மக்கள் மிகவும் விசித்திரமான பழக்கங்களைக் கொண்டுள்ளனர். அதாவது தங்கள் முகத்தை அடிக்கடி கழுவுகிறார்கள் மற்றும் தங்களைச் சுற்றியுள்ள இடத்தை எப்போதும் சுத்தம் செய்து கொண்டே இருக்கின்றனர். ஏனெனில், அவர்கள் அழுக்கு, தூசி போன்றவற்றை விரும்புவதில்லை. அசுத்தத்தினால் பயம் கொள்கிறார்கள்.
கவலை அல்லது பதட்டத்தின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of anxiety in Tamil?)
தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, உடலின் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகரித்தல், தூக்கமின்மை, அதிக கவலை மற்றும் பதட்டம் கொள்ளுதல், காய்ச்சல், உடல் அதிகமாக வியர்த்தல், சுவாசிப்பதில் சிரமம், அமைதியின்மை, செரிமானம் தொடர்பான பிரச்சினைகள், வாய் வறண்டு இருத்தல், பலவீனம் மற்றும் சோர்வு போன்றவை கவலையின் அறிகுறிகளாகும்.
கவலைக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for anxiety in Tamil?)
- கவலை மற்றும் பதட்டத்திலிருந்து விடுபட முதலில் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும்.
- உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவுகளையே உட்கொள்ள வேண்டும்.
- மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க வேலை மற்றும் சொந்த வாழ்க்கையில் ஒரு சமநிலையை பராமரிக்க வேண்டும்.
- மன அழுத்தத்தைக் குறைக்க மக்கள் பெரும்பாலும் புகைப்பிடித்தல் , ஆல்கஹால் உட்கொள்ளுதல் மற்றும் போதை மருந்துகளை பயன்படுத்துவது போன்ற தீயப் பழக்கங்களை மேற்கொள்கின்றனர். இதன் காரணமாய் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைகிறது. இந்த தீங்கு விளைவிக்கும் பொருட்களுக்கு மாறுதலாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழச்சாறுகளை குடிக்கவும்.
- கவலையிலிருந்து விடுபட உளவியல் அல்லது அறிவாற்றல் நடத்தை சிகிச்சையின் வழியில் சிகிச்சையளிக்கப்படுகிறது. மேலும், மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே நீங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கவலைக் கோளாறுகளைக் கட்டுப்படுத்த 2 டெப் (Dep), அபெக்ஸ் (Apex), ஆக்டிசர் (Actiser), அட்னில் (Adnil), அட்னூர் (Adnure) போன்ற மருந்துகள் பயன்படுத்தபடுகின்றன. எனினும், நீங்கள் மிகவும் தீவிரமான கவலையால் பாதிக்கப்பட்டிருக்கும்போது, ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகிறது.
- கவலையைப் போக்க பின்வரும் மூலிகைகள் மற்றும் ஆயுர்வேத வைத்தியங்கள் உதவுகிறது.
கவலையில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் (Things to avoid in anxiety in Tamil)
மக்கள் கவலை மற்றும் பதட்டத்தில் பொறுமையை இழக்கக்கூடாது, மற்றவர்களுடன் சண்டையிடக்கூடாது. மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க தினசரி யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். எந்தவொரு நிகழ்வையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் குடும்பத்தில் உண்டாகும் சிக்கல்களை தனிப்பட்ட முறையில் தீர்க்க முயற்சி செய்யுங்கள், அதை எண்ணி அதிக கவலை கொள்வதைத் தவிர்க்கவும். அதிகமாக உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும். இது போன்ற சிறிய முயற்சியால் மன அழுத்தத்தை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் கவலை மற்றும் பதட்டத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில், உடனடியாக உங்கள் அருகிலுள்ள ஒரு நல்ல உளவியலாளர் (Psychologist) அல்லது மனநல மருத்துவரை (Psychiatrist) அணுகவும்.
Psychiatrist
Best Psychiatrist in Bangalore
Psychologist