மூளை காயங்கள் | What is Brain Injury in Tamil

ஜனவரி 13, 2021 Brain Diseases 1432 Views

English हिन्दी Bengali Tamil العربية

மூளையில் ஏற்படும் காயங்கள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கிறது. இதன் விளைவாக பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி, பக்கவாதம் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். கடுமையான விபத்துக்கள் ஏற்படும் போது அல்லது போதை மருந்துகள் மற்றும் ஆல்கஹால் அதிகளவில் எடுத்துக் கொள்வதன் விளைவாக மனித மூளையில் நோய்த்தொற்றுகள், பாதிக்கப்பட்டவர்களின் வன்முறை நடத்தை, கோமா, மயக்கம், வலிப்பு, கண் பார்வை இழப்பு மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளுடன் மூளை சேதமும் ஏற்படக்கூடும். பொதுவாக மூளையின் காயத்தை பரிசோதிக்க மருத்துவர்களால்  சி.டி ஸ்கேன் மற்றும்  எம்.ஆர். ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. மூளைக் காயங்களுக்கான  சரியான  சிகிச்சையைப் பெற மருத்துவமனையிலேயே  தங்கியிருக்க வேண்டியது அவசியமாகிறது. லேசான மூளைக் காயங்கள் ஏற்படும் போது எந்தவித மருந்தும், சிகிச்சைகளும் இல்லாமல் தானகவே குணமாகிறது. எனினும், கடுமையான மூளைக் காயங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. மிகவும்  தீவிரமான  காயங்கள் உண்டாகும் போது  brain dead எனப்படும் மூளை சாவிற்கு வழிவகுக்கிறது. இந்தப் பதிவின் மூலம் தலையில் ஏற்படும் மூளை காயங்கள் குறித்து மேலும் சில முக்கிய தகவல்களை அறிந்து கொள்வோம்.

  • மூளைக் காயங்களின் வகைகள் யாவை? (What are the types of brain injuries in Tamil?)
  • மூளைக் காயத்திற்கான காரணங்கள் யாவை? (What are the Causes of brain injuries in Tamil?)
  • மூளைக் காயத்தின் அறிகுறிகள் யாவை? (What are the Symptoms of brain injuries in Tamil?)
  • மூளைக் காயத்திற்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for brain injuries in Tamil?)
  • மூளைக் காயங்களைத் தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் யாவை? (How to Prevent brain injuries in Tamil?)

மூளைக் காயங்களின் வகைகள் யாவை? (What are the types of brain injuries in Tamil?)

மூளை காயங்களை உள் மற்றும் வெளிப்புற மூளை காயங்கள் என இரண்டு வகைப்படும்

  • உட்புற காயங்களில் மூளையின்  உள் இரத்தப்போக்கு, மூளையில் கட்டி மற்றும் பிற கடுமையான உள்புற காயங்களும் அடங்குகிறது.
  • வெளிப்புற காயங்களில் தலையின் வெளிப்புறத்தில் ஏற்படும் அடியால் கோமா அல்லது அதிர்ச்சி ஏற்படக்கூடும். 

மூளைக் காயத்திற்கான காரணங்கள் யாவை? (What are the causes of brain injuries in Tamil?)

மூளையில் காயங்கள் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன, அவை :

  • ஆக்ஸிஜன் பற்றாக்குறை அல்லது சில தொற்றுநோயின் காரணமாய் மூளை பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
  • சில வெளிப்புற காரணிகளும் மூளை காயங்களை ஏற்படுத்தக்கூடும்.
  • கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து அல்லது குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளின் போது தலையில் ஏற்படும் காயங்களும் மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
  • விபத்துக்களினால் தலையில் ஏற்படும் காயங்கள் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினருக்கும் மூளை பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
  • கற்களை எறிவது அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைகளின் போது தலையில் காயம் ஏற்பட்டால், அது மூளை பாதிப்புக்கு வழிவகுக்குகிறது.
  • குண்டு வெடிப்புகள் மூளையை சேதப்படுத்தும் வெளிப்புற காயங்களை ஏற்படுத்துகின்றன.
  • மாரடைப்பு ஏற்படுவதும் மூளையை பாதிக்கலாம்.
  • மூளையில் உண்டாகும் மூளை கட்டிகள் மூளையை சேதப்படுத்துகின்றன.
  • நோய்த்தொற்றுகளும் மூளைக் காயங்களை ஏற்படுத்துகின்றன.
  • அதிகப்படியான போதைப்பொருட்களை எடுத்துக் கொள்வதினாலும் மூளைக்கு சேதம் விளைகிறது.

மூளைக் காயத்தின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of brain injuries in Tamil?)

மூளை காயங்கள் பல அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன, அவை 

மூளைக் காயத்திற்கான சிகிச்சைக்கள் என்ன? (What are the treatments for brain injuries in Tamil?)

  • ஏற்படும் காயங்கள் சில நாட்களில் குணமடைந்தால் மூளைக் காயங்களில் இது இயல்பானதாகும். எனினும், காயத்தின் நிலை தீவிரமாக மாறினால், மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம் ஏற்படுகிறது. உண்டான காயங்கள் முழுமையாக குணமடைய சில சந்தர்ப்பங்களில், சில மாதங்கள் தேவைப்படுகிறது. கடுமையான அவசர நிலைகளில், பாதிக்கப்பட்ட நபரின் சுவாசத்தை ஆதரிக்க மருத்துவ சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது. கழுத்து உறுதிப்படுத்தப்பட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. ஏதேனும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மேலும், தினசரி பாதிக்கப்பட்ட நபரின் இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் சரிபார்க்கப்படுகிறது.
  • சில சந்தர்ப்பங்களில், நோயாளி காயத்தின் தாக்கத்தினால் முடக்கப்பட்டிருந்தால், தற்காலிகமாக ஏற்பட்டுள்ள கோமாவுக்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. காயத்தின் காரணமாக  மூளை திசுக்கள் சேதமடைந்தால் அல்லது மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டால், மருத்துவர்கள் அதை ஒரு அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்கிறார்கள்.
  • மண்டை ஓட்டில் ஏதேனும் சேதம் அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தால், அதற்கு சிகிச்சையளிக்க  அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
  • சில சமயங்களில் கடுமையான மூளைக் காயங்களுக்கு  சிகிச்சையளிக்க மருத்துவர்கள் பேச்சு சிகிச்சையைப் (Speech therapy) பயன்படுத்துகின்றனர். இது நோயாளியை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலிமையாக்க உதவுகிறது. (மேலும் படிக்க – பைபோலார் கோளாறு என்றால் என்ன ?)

மூளைக் காயங்களைத் தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் யாவை? (How to prevent brain injuries in Tamil?)

மூளைக் காயங்களைத் தடுக்க சில பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், அவை:

  • இருசக்கர வாகனம் ஓட்டும்  போது கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். மற்றும் கார் போன்ற நன்குசக்கர வாகனங்களை ஓட்டும் போது பாதுகாப்பு பெல்டை அணியுங்கள்.
  • மது அருந்தியபின் அல்லது போதை மருந்துகளை உட்கொண்ட பின் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • விபத்துகளைத் தவிர்க்க உங்கள் பார்வையை தெளிவற்றதாக மாற்றும் எதையும் அணிய வேண்டாம்.
  • நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் உங்களை நீங்களே மிகைப்படுத்தாதீர்கள்.
  • தீங்கு விளைவிக்கும் போதை மருந்துகளைத் தவிர்க்கவும்.
  • எந்தவொரு விளையாட்டில் ஈடுபடும்போதும் பொருத்தமான பாதுகாப்பு கையுறைகளை அணியுங்கள்.
  • குழந்தைகளுக்கு எந்தவித காயங்களும் ஏற்படாமல்  பெற்றோர்கள் அவர்களை பாதுகாக்க வேண்டும்.
  • படிக்கட்டுகளில் ஏறும் போதும், இறங்கும்போதும் கவனமாக இருக்க வேண்டும், மற்றும்  படிக்கட்டுகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். 
  • குழந்தைகளை பால்கனியில் தனியாக விளையாட அனுமதிக்காதீர்கள்.
  • குழந்தைகள் நழுவுவதைத் தடுக்க குளியல் தொட்டிகள் அல்லது குளியலறைகளுக்கு வெளியே மிதியடிகளைப் பயன்படுத்துங்கள்.

மூளைக் காயங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு நரம்பியல் நிபுணரைத் (Neurologist) தொடர்பு கொள்ளுங்கள்.

வியாதிகள் பற்றிய தகவல்களை வழங்குவதே எங்கள் நோக்கம். எந்தவொரு மருந்து, சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஆலோசனைக்கு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.


மும்பையில் சிறந்த நரம்பியல் நிபுணர் (Best Neurologist in Mumbai)

டெல்லியில் சிறந்த நரம்பியல் நிபுணர் (Best Neurologist in Delhi)

சென்னையில் சிறந்த நரம்பியல் நிபுணர் (Best Neurologist in Chennai)

பெங்களூரில் சிறந்த நரம்பியல் நிபுணர் (Best Neurologist in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha