எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை| Bone  marrow transplant in Tamil

நவம்பர் 24, 2020 Cancer Hub 1612 Views

English हिन्दी Bengali Tamil

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை என்பது, நோய்தொற்று அல்லது கீமோதெரபி சிகிச்சை போன்றவற்றால் மனித உடலின்  எலும்பு மஜ்ஜை சேதமடையும் போது  அதை மாற்றுவதற்காக செய்யப்படும் ஒரு அறுவை சிகிச்சை முறையாகும். இந்த செயல்முறையில் ஆரோக்கியமான இரத்த ஸ்டெம் செல்கள் உடலில் செலுத்தப்படுகிறது, அவை எலும்பு மஜ்ஜையில் பயணிக்கின்றன. இவை புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன மற்றும் புதிய எலும்பு மஜ்ஜையின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. எலும்பு மஜ்ஜை என்பது எலும்புகளுக்குள் இருக்கும் பஞ்சுபோன்ற கொழுப்பு நிறைந்த திசு ஆகும். இவை எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு உதவுகின்றனஎலும்பு மஜ்ஜை மாற்றுதலின் போது சேதமடைந்த ஸ்டெம் செல்களை ஆரோக்கியமான செல்களைக் கொண்டு  மாற்றுகின்றனர். இது உங்கள் உடலில் உண்டாகும் நோய்த்தொற்றுகள் மற்றும் இரத்தப்போக்கு கோளாறுகளைத் தவிர்க்க உதவுகிறது. இது, அப்ளாஸ்டிக் அனீமியா, லிம்போமா, லுகேமியா, தலசீமியா, இரத்த சோகை, மல்டிபிள் மைலோமா போன்ற பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்  நிரந்தர மற்றும் பயனுள்ள அறுவை சிகிச்சை முறையாகும். 

 • எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஏன் செய்யப்படுகிறது?( Why is bone marrow transplant is done in Tamil?)
 • எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது?( How is bone marrow transplant done in Tamil?)
 • எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும் ? (How to take care of the health after bone marrow transplant in Tamil?)
 • எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ள  வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். (Precautions after bone marrow transplant in Tamil.)
 • இந்தியாவில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகள் எவ்வளவு? (What is the cost of bone marrow transplant in India in Tamil?)

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஏன் செய்யப்படுகிறது? (Why is bone marrow transplant done in Tamil?)

நீண்ட காலமாக ஏதேனும் ஒரு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எலும்பு மஜ்ஜை சேதமடைகிறது. இத்தகைய நிலையில், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது தவிர, இத்தகைய சிகிச்சை தேவைப்படும் வேறு சில நோய்களும் உள்ளன, அவை

 • லிம்போமா ( உடலின் நோய்களை எதிர்க்கும் உயிரணுக்களின் புற்றுநோயாகும். )
 • லுகேமியா ( ஒரு வகை புற்றுநோய் )
 • போயிஸ் நோய்க்குறி
 • மல்டிபிள் மைலோமா எனப்படும் வெள்ளை இரத்த அணுக்களின் புற்றுநோய். ( இவை புற்றுநோயற்ற உயிரணு ஆகும், இது ஆரோக்கியமான எலும்பில் வளரத் தொடங்குகிறது )
 • அமிலாய்டோசிஸ் ( இது ஒரு அசாதாரண நோயாகும், இது புரத எலும்பு மஜ்ஜையில் உருவாகத் தொடங்குகிறது. )
 • கடுமையான நிணநீர் லுகேமியா.
 • முதன்மை நோயெதிர்ப்பு குறைபாடு ( இது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் ஒரு நோயாகும். )
 • எலும்பு மஜ்ஜையில் இரத்த அணுக்கள் உருவாகாத நிலையை உண்டாக்கும் அப்ளாஸ்டிக் அனீமியா நோய்.
 • நாள்பட்ட நிணநீர் லுகேமியா.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை எவ்வாறு செய்யப்படுகிறது? (How is bone marrow transplant is done in Tamil?)

நோயாளியின் அறிகுறிகளைப் பொறுத்து, அறுவை சிகிச்சைக்கு முன்  இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறியவேண்டியது அவசியமாகிறது. எலும்பு மஜ்ஜை ஆஸ்பிரேஷன் பயாப்ஸி, இரத்தப் பரிசோதனை  மற்றும் சில ஆய்வக பரிசோதனைகளைக் கொண்டு தரமான மற்றும் சரியான பகுப்பாய்வுகளைப் பெறுகின்றனர். இரத்த அணுக்களின் எண்ணிக்கையில் மாற்றம் என்பது இரத்த புற்றுநோய், இரத்த சோகை போன்ற எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் பல நோய்களுக்கான அறிகுறியாகும். எலும்பு மஜ்ஜை செல்கள் பெரும்பாலும் இடுப்பு எலும்பிலிருந்து பயாப்ஸிக்காக எடுக்கப்படுகின்றன. மேலும், இந்த செல்கள் நன்கு ஆராயப்படுகின்றன. எலும்பு மஜ்ஜை மாற்றுதல் நன்கொடையாளரைப் பொறுத்து பல்வேறு வழிகளில், இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடிகிறது.

 • தன்னியக்க எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ( Autologous bone marrow transplant) –இந்த முறையில் நோயாளியின் சொந்த ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையை மேற்கொள்ளகின்றனர். கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைத் தொடங்குவதற்கு  முன்பே இந்த ஸ்டெம் செல்கள்  எடுக்கப்படுகின்றன. 
 • அலோஜெனிக் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ( Allogeneic bone marrow transplant )இந்த முறையில் மற்றொரு நபரின் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும், நெருங்கிய உறவினரின் ஸ்டெம் செல்களையே பயன்படுத்துகின்றனர். மேலும், இந்த ஸ்டெம் செல்களின் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
 • தொப்புள் கொடி இரத்த மாற்று ( Umbilical cord bone marrow transplant )இதில், குழந்தை பிறப்பின் போது  தொப்புள் கொடியிலிருந்து ஸ்டெம் செல்கள் எடுக்கப்பட்டு  சேகரிக்கபடுகின்றன. இந்த முதிர்ச்சியற்ற செல்கள் எந்த செல்களாகவும் வளர்ச்சியடையும் தனித்துவத்தை கொண்டுள்ளன.  எலும்பு மஜ்ஜை லுகோசைட் ஆன்டிஜென் பரிசோதனைகளைப் பயன்படுத்தி  நன்கொடையாளரின் செல்கள் நோயாளிக்கு  பொருந்தக்கூடியதாக இருக்கின்றதா என்பதைக் கண்டறிகின்றனர். ஸ்டெம் செல்களை அபெரெசிஸ் அல்லது எலும்பு மஜ்ஜை அறுவடை என இரண்டு வழிகள் மூலம் சேகரிக்கலாம். அபெரெசிஸ் முறையில், நன்கொடையாளரின் இரத்தத்தை, இரத்தத்திலிருந்து ஸ்டெம் செல்களைப் பிரிக்கும் இயந்திரத்துடன்  இணைக்கப்பட்டு  ஸ்டெம் செல்கள் பிரிக்கப்படுகின்றன. அபெரெசிஸ் முறையை மேற்கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, எலும்பு மஜ்ஜையில் இருந்து, பிற இரத்த அமைப்புக்கு ஸ்டெம் செல்கள் செல்ல உதவும் ஒரு மருந்து நன்கொடையாளருக்கு வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும். எலும்பு மஜ்ஜை அறுவடை முறையில், ஸ்டெம் செல்கள் பொதுவாக ஒரு ஊசியைப் பயன்படுத்தி இடுப்பு எலும்பிலிருந்து சேகரிக்கப்படுகின்றன.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடலை எவ்வாறு  கவனித்துக்கொள்வது கொள்ள வேண்டும்  ? (How to take care of the health after bone marrow transplant in Tamil?)

இதற்குப் பிறகு, நோயாளி குறைந்தது 28 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். இதன் மூலம் மருத்துவர் நோயாளியை கவனமாக கண்காணிக்க முடிகிறது. மேலும், நோயாளியின் உடலில் புதிய செல்கள் வேலை செய்ய 14 முதல் 28 நாட்கள் வரை ஆகிறது. இந்த காலகட்டத்தில், மருத்துவர்கள் சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளை  நோயாளிக்கு வழங்குகின்றனர். அலோஜெனிக் மாற்று சிகிச்சையைப் பொறுத்தவரை, நோயாளிக்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. ஏனெனில், இந்த முறையில் கிராஃப்ட் vs ஹோஸ்ட் நோய் (ஜி.வி.எச்.டி) ஏற்படும் ஆபத்து  உள்ளது. இந்த சிக்கல்களைத் தவிர்க்க, நோயாளி அதிகபட்சம் 50 நாட்கள் வரை மருத்துவமனையில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார். நோயாளி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பும் போது, பின்வரும் நடவடிக்கைகளை மனதில்  வைத்துக்கொள்ள வேண்டும், அவை:

 • உடல்நிலை முற்றிலும் குணமடையும் வரை நோயாளி தொடர்ந்து மருத்துவருடன் தொடர்பில் இருக்க வேண்டும்.
 • இதற்குப் பிறகு நோய்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது, எனவே மருத்துவர் கூறும் அறிவுரைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
 • இதற்குப் பிறகு உடல் பலவீனம் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் இது குறித்து ஆலோசனை செய்யுங்கள்.
 • நோயாளி பலச்சாறு, பால், முட்டை, சீஸ், பழங்கள், வேர்க்கடலை, வெண்ணெய் பழம் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
 • அதிக துக்கம் மற்றும் மயக்கம் உண்டாகும்  நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய வேண்டாம் என்று  மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். மற்ற நோயாளிகள் உடற்பயிற்சி செய்ய விரும்பினால்,  மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ள வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். (Precautions after bone marrow transplant in Tamil.)

இதற்குப் பிறகு கிராஃப்ட்-வெர்சஸ்-ஹோஸ்ட் நோய் போன்ற சில சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நோய் ஏற்பட்டால், நன்கொடையாளரின் செல்கள் பெறுநரின் செல்களைத் தாக்கத் தொடங்குகின்றன. இதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான சிக்கல்கள் ஏற்படுகின்றன. கூடுதலாக, செல் ஒட்டு நிராகரிப்புக்கான வாய்ப்புகளும் உள்ளது. இத்தகைய நிலையில் நன்கொடையாளர் ஸ்டெம் செல்கள் பெறுநரின் உடம்பில் திறம்பட செயல்படுவதில்லை மற்றும் பெறுநரின் உடம்பில் இரத்த அணுக்களாக மாறுவதில் தோல்வியடைகின்றன. இதன் காரணமாக த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் இரத்த சோகை ஏற்படும் அபாயம் உள்ளது.

 • அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளிக்கு பல நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். இது தவிர,  குமட்டல், வாந்தி, சோர்வு, பலவீனம் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றையும் அனுபவிக்ககூடும்.
 • கல்லீரல் பாதிப்பு, வளர்ச்சி குறைபாடுகள், இரத்த நாளங்களில் உறைதல், உடலின் அத்தியாவசிய உறுப்புகளில் இரத்தப்போக்கு போன்ற சில சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன.

இந்தியாவில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவுகள் எவ்வளவு? (What is the cost of bone marrow transplant in India in Tamil?)

இந்தியாவில் எலும்பு மஜ்ஜை மாற்றுவதற்கான மொத்த செலவு சுமார் 10,00,000 முதல் 20,00,000 ரூபாய்  வரை ஆகலாம். மேலும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற பல மருத்துவமனைகள் மற்றும் நல்ல மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர். எனினும், இதற்கான செலவு  மருத்துவமனைகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. நல்ல மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை மாற்றுவதற்கான செலவு மற்றும் மருத்துவர்கள் பற்றிய தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், இங்கே கிளிக் செய்யுங்கள். சிகிச்சையின் செலவுகளைத் தவிர, நீங்கள் வெளிநாட்டிலிருந்து சிகிச்சைக்காக இந்தியா வருகிறீர்கள் என்றால், ஹோட்டல் தங்குவதற்கான செலவுகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து செலவுகள் என கூடுதல் செலவுகளும் ஏற்படுகின்றன. இது தவிர, அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி 21 நாட்கள் மருத்துவமனையில் அல்லது ஹோட்டலில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும். எனவே, அனைத்து செலவுகளும் சேர்த்து சராசரியாக 1,439,892 ரூபாய் வரை ஆகலாம்நீங்கள் இது குறித்து கூடுதல் தகவல்களைப் பெற விரும்பினால், இங்கே கிளிக் செய்யுங்கள்.

எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக் குறித்த கூடுதல் தகவல்களை அல்லது சிகிச்சையை நீங்கள் பெற விரும்பினால், ஒரு புற்றுநோயியல் நிபுணரைத்  ( Oncologist  ) தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


Best Oncologist Gurgaon

Best Oncologist Mumbai

Best Oncologist Chennai


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


  captcha