மார்பக புற்றுநோய் என்றால் என்ன | What is Breast cancer in Tamil

ஜனவரி 18, 2021 Cancer Hub 1774 Views

English हिन्दी Bengali Tamil

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பல பெண்கள் மார்பக புற்றுநோயால்  பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மார்பக புற்றுநோயின் சராசரி விகிதம் 16% முதல் 29.9% வரையாகும். உலகளவில் புற்றுநோய் இறப்புகளில் மார்பக புற்றுநோயால் இறப்பவர்களின் விகிதம் 18.1% ஆகும். இது பெண்களின் மார்பக செல்களில் உருவாகும் புற்றுநோயாகும். மேலும்மார்பகத்தில் பால் உற்பத்தி செய்யப்படும் சுரப்பியை இந்த நோய் தாக்குகிறது, இந்த சுரப்பிகளிலிருந்தே முலைக்காம்புகளுக்கு தாய்பால் கொண்டு செல்லப்படுகிறது. மற்றும் மார்பக புற்றுநோய் ஃபைபரஸ் மார்பக திசுக்களிலும் உருவாகிறது. இந்த திசுக்கள் ஸ்ட்ரோமல் திசுக்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புற்றுநோய் செல்கள் ஆரோக்கியமான மார்பக திசுக்களைத் தாக்கிய பின் கைகளில் உள்ள நிணநீர் முனைகளுக்கு செல்கின்றன. இன்றையக் கட்டுரையில் மார்பக புற்றுநோய் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவோம்.

 • மார்பக புற்றுநோய் என்றால் என்ன? (What is Breast cancer in Tamil?)
 • மார்பக புற்றுநோயின் வகைகள் யாவை? (What are the types of breast cancer in Tamil?)
 • மார்பக புற்றுநோயின் காரணங்கள் யாவை? (What are the causes of breast cancer in Tamil?)
 • மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of breast cancer in Tamil?)
 • மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for breast cancer in Tamil?)
 • மார்பக புற்றுநோயிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? (How to protect yourself from breast cancer in Tamil?)

மார்பக புற்றுநோய் என்றால் என்ன? (What is breast cancer in Tamil?)

பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. உயிரணு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் பிறழ்வுகள் உண்டாகும் போது, இந்த வகை புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த பிறழ்வுகளின் காரணமாக, செல்கள் கட்டுப்பாடற்ற முறையில் பெருகத் தொடங்குகின்றன. இந்த செல்கள் ஆரோக்கியமான செல்களை தாக்குகிறது. மேலும், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்றது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பெண்களின் மார்பகங்களில் கட்டிகள் உருவாகின்றன.

மார்பக புற்றுநோயின் வகைகள் யாவை? (What are the types of breast cancer in Tamil?)

மார்பக புற்றுநோயில் பல வகைகள் உள்ளன.

 • இன்வசிவ் டக்டல் புற்றுநோய் (Invasive ductal carcinoma)- இந்த வகை மார்பக புற்றுநோயில் பால் குழாய்களில் புற்றுநோய் செல்கள் உருவாகிறது. பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 70 சதவீதம் இன்வசிவ் டக்டல் குழாய் புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் குழாய்களின் வழியாக மார்பகத்தின் திசுக்களில் பரவுகிறது.
 • அழற்சி புற்றுநோய் (Inflammatory carcinoma) – இந்த வகை மார்பக புற்றுநோய் பெண்களில் அரிதாகவே காணப்படுகிறது. இது மொத்த புற்றுநோய்களில் 1 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த வகை புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமானதாகும். இந்த மார்பக புற்றுநோய் உடல் முழுவதும் பரவக்கூடும்இதன் காரணமாக நோயாளி இறக்கவும் நேரிடுகிறது
 • பேஜெட் நோய் (Paget’s disease) – இத்தகைய மார்பக புற்றுநோய் மொத்த புற்றுநோய்களில் 1 சதவீதத்தில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த வகை புற்றுநோயில், முலைக்காம்புகளைச் சுற்றி இரத்தம் குவிகிறது, இதன் காரணமாக முளைக்காம்புகளைச் சுற்றியுள்ள பகுதி கருப்பு நிறமாக மாறுகிறது.பேஜெட் நோய் மற்றும் அழற்சி புற்றுநோய் இரண்டும் பொதுவானதாகும். ஏனெனில், பெண்களின் மொத்த புற்றுநோய் வழக்குகளில் இவை இரண்டும் ஒரு சதவீதம் மட்டுமே ஆகும். மார்பகங்களில் வலி, அரிப்பு, தொற்று போன்ற மார்பக தொடர்பான மருத்துவ  வரலாற்றைக் கொண்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உருவாகிறது.

மார்பக புற்றுநோய்க்கான காரணங்கள் யாவை? (What are the causes of breast cancer in Tamil?)

மார்பக புற்றுநோய் உருவாக பல காரணங்கள் உண்டு, அவை:

 • தங்கள் உடலை கவனிக்காமல் அலட்சியம் காட்டுவது, பெண்களின் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.
 • மார்பக புற்றுநோய்  மரபணு ரீதியாகவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது
 • மார்பகத்தில் சிறிய கட்டிகள் உண்டாவதன் விளைவாக புற்றுநோய் உருவாகலாம்.
 • வழக்கமான மாதவிடாய் சுழற்சி இல்லாத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உருவாகும் அபாயங்கள் உள்ளன
 • வயது அதிகரிப்பதும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
 • கருத்தடை மாத்திரைகளின் அதிகப்படியான பயன்பாடுகளும் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது
 • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது
 • ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோனை மாற்ற ஹார்மோன் மருந்துகளை உட்கொள்வதும் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of breast cancer in Tamil?)

 • மார்பகத்தின் சில பகுதிகளில் வீக்கம்
 • முலைக்காம்புகளிலிருந்து இரத்தப்போக்கு
 • மார்பக தோலில் ஏற்படும் மாற்றங்கள்
 • கைகளில் கட்டிகள்
 • மார்பகத்தின் வடிவம் அல்லது அளவின் திடீர் மாற்றம்.  
 • முலைக்காம்பு அல்லது மார்பகத்தின் தோல் உரிதல்.  
 • மார்பக நிறம் சிவப்பு நிறமாக மாறுவது
 • தாய்ப்பாலைத் தவிர முலைக்காம்புகளிலிருந்து வேறுசில உடல் திரவம் வெளியேறுவது

மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for breast cancer in Tamil?)

 • மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைகள் நோயாளியின் புற்றுநோயின் கட்டத்தைப் பொறுத்தே வழங்கப்படுகின்றது. மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் மார்பகத்தில் உண்டாகியுள்ள கட்டியின் அளவு போன்றவற்றை நன்கு அறிந்த பின்னரே  மருத்துவர்கள் நோயாளிக்கு தகுந்த சிகிச்சையை அளிக்கின்றனர். மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை என்பது மார்பக புற்றுநோய் சிகிச்சையின் ஒரு முக்கிய அங்கமாகும். மார்பகத்தில் இருக்கும் கட்டி அல்லது புற்றுநோய் செல்களை அகற்ற இது செய்யப்படுகிறது

இந்தியாவில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவு 2,10,000 முதல் 4,00,000 வரை ஆகலாம். மற்றும் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற பல அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர். மேலும், மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான செலவு  மருத்துவமனைகளைப் பொறுத்து வேறுபடுகின்றது. ஒரு நல்ல மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான செலவுகள் மற்றும் சிறந்த மருத்துவர்கள் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால்,  (மேலும் படிக்க – மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கான செலவுகள்

 • மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க மருத்துவர்கள் கீமோதெரபி, ஹார்மோன் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர்.

மார்பக புற்றுநோயிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? (How to protect yourself from breast cancer in Tamil?)

 • புற்றுநோயைத் தடுக்க புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்
 • பெண்கள் தினசரி உடல் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்
 • தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பிரச்சினை ஏற்படுவதில்லை
 • அதிகப்படியான குப்பை உணவுகளை (junk food) உட்கொள்வதும் மார்பக புற்றுநோயை ஏற்படுத்துகிறது. எனவே, குப்பை உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்
 • உடல் பருமனாக இருப்பதும் மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது. எனவே, பெண்கள் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும்.

மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சைகள் குறித்த கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், உடனடியாக புற்றுநோயியல் மருத்துவரைத் (Oncologist doctor) தொடர்பு கொள்ளுங்கள்.


மும்பையில் சிறந்த புற்றுநோயியல் மருத்துவர்

சென்னையில் சிறந்த புற்றுநோயியல் மருத்துவர்

பெங்களூரில் சிறந்த புற்றுநோயியல் மருத்துவர்

டெல்லியில் சிறந்த புற்றுநோயியல் மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox