இருதயத் தடுப்பு என்றால் என்ன | Cardiac arrest meaning in Tamil 

டிசம்பர் 1, 2020 Heart Diseases 742 Views

English हिन्दी Tamil العربية

மாரடைப்பு அல்லது இருதயத் தடுப்பு என்பது மனித இதயத்தில் உண்டாகும் ஒரு சிக்கலான நிலையாகும். இந்நிலை ஏற்படும் போது தீடிரென இதயம் துடிப்பதை நிறுத்துகிறது. அத்தகைய நிலைமை திடீர் மாரடைப்பை ஏற்படுத்தி மரணத்திற்கும் வழிவகுக்கிறது ( sudden cardiac death  ). இதயத்தின் உள்ளே ஒரு சக்திவாய்ந்த மின் அமைப்பு உள்ளது, அது இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு நபருக்கு இருதயத் தடுப்பு ஏற்படும் போது, அந்த நபரின் இதயத் துடிப்பின் வேகம் திடீரென்று நின்றுவிடுகிறது. இது தவிர, அந்த நபருக்கு சுவாசிப்பதில் சிரமம் உண்டாகிறது மற்றும் அவர் தன்   உணர்ச்சியை  இழக்கிறார். இதயத்தில் உள்ள  மின் அமைப்பின்  செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுவதால் திடீர் இதயத் தடுப்பு ( sudden cardiac arrest) ஏற்படுகிறது. இதனால்  இதயத்தின் முக்கிய பணியான blood pumping நிகழ்வதில் இடையூறு உண்டாகிறது. இதன் விளைவாக  உடல் பாகங்களில் இரத்த ஓட்டம் நின்றுவிடுகிறது. இருதயத் தடுப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. இருதயத் தடுப்பு என்றால் என்ன ? என்பது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் கூறியுள்ளோம். 

  • இருதயத் தடுப்பு என்றால் என்ன? (What is meant by cardiac arrest in Tamil?) 
  • இருதயத் தடுப்புக்கான காரணங்கள் என்ன? (What are the causes of cardiac arrest in Tamil?)
  • இருதயத் தடுப்பின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of cardiac arrest in Tamil?)
  • இருதயத் தடுப்புக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for cardiac arrest in Tamil?)
  • இருதயத் தடுப்பைத் தடுப்பதற்கான வழிகள் யாவை? (What are the prevention measures for cardiac arrest in Tamil?) 

இருதயத் தடுப்பு என்றால் என்ன? (What is meant by cardiac arrest in Tamil?) 

இருதயத் தடுப்பு ஒரு வகையான இதய நோயாகும், இது எந்தவித தூண்டுதல்களும் இல்லாமல் திடீரென ஏற்பட்டு இதயத்தின் துடிப்பை நிறுத்துகிறது. இது ஏற்படுவதனால்,  மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்தம் சென்று  அடைவதில்லை. மேலும் மாரடைப்பின் போது  மூச்சுத் திணறல் ஏற்படுவதன் காரணமாக சிலர் இறக்கின்றனர். இதயத் தடுப்புக்கான முக்கிய  காரணம் இன்னும்  அறியப்படவில்லை. பெரும்பாலும் இதயத்திலுள்ள சக்தி வாய்ந்த  மின் அமைப்பில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, இதயத் துடிப்பில் மாறுதல்கள் ஏற்படுகின்றது. அத்தகைய சூழ்நிலையில் இதயத்தின் ப்ளட்  பம்பிங் பாதிக்கப்படுகிறது. ப்ளட் பம்ப் செய்யப்படாததால், இரத்தம் மூளை மற்றும் பிற உறுப்புகளை அடைவதில்லை. இதன் விளைவாக பாதிக்கப்பட்ட நபர் இறக்கவும்  நேரிடுகிறது.

இருதயத் தடுப்புக்கான காரணங்கள் என்ன? (What are the causes of cardiac arrest in Tamil?) 

  • இருதயத் தடுப்புக்கான முக்கிய காரணம் யாதெனில், இதயத் துடிப்பில் ஒருவித ஏற்றத்தாழ்வு உண்டாகும் போது  இதயத்தில் உள்ள மின் அமைப்பு தொடர்பான சிக்கலால் ஏற்படுகிறது. 
  • இதயத்தின் தாளத்தில் ஏற்படும்  இடையூறுகளாளும் இந்நிலை உருவெடுக்கும். அசிட்டோலில் எலக்ட்ரோநெக்டிவிட்டி ஏற்படுவதால், இதயம் துடிப்பதில்லை. 
  • வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் நிகழும் நேரத்தில், இதய மின் அமைப்பின் செயல்பாடுகள் அசாதாரணமாகுகிறது.   இத்தகைய நிலையில் இதயத்தால் இரத்தத்தை பம்ப் செய்ய  முடிவதில்லை. இதன் விளைவாக இதயத் துடிப்பு  ஏற்படுவதில்லை. 
  • இதய துடிப்பு மிகவும் மெதுவாகிறது. இவ்வாறு நிகழும் போது அந்த நபரை நீண்ட காலம் உயிரோடு வைத்திருக்க முடியாத நிலை உருவாகும் .  
  • இதயத் தடுப்புக்கான பிற ஆபத்து காரணிகள்,
  • உயர் பிபி. 
  • அதிக கொழுப்புச்சத்து.  
  • உடல் பருமன் (மேலும் வாசிக்க – உடல் பருமனுக்கு என்ன காரணம்)  
  • நீரிழிவு நோய். 
  • இதற்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டிருக்ககூடும். 
  • அதிகப்படியான புகைபிடித்தல். 
  • குடும்பத்தினர் இடத்தில் முன்பே இதய நோய் தொடர்பான பிரச்சினைகள் இருப்பது.

இருதயத் தடுப்புக்கான அறிகுறிகள் யாவை? (What are the symptoms of cardiac arrest in Tamil?)

பின்வருவன எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் தீடிரென ஏற்படும் இருதயத் தடுப்பு அல்லது மாரடைப்புக்கான பொதுவான  அறிகுறிகளாகும், அவை:

  • திடீரென அதிர்ச்சி அடைந்து கீழே விழுதல்.  
  • மூச்சுத் திணறல்.  
  • மயக்கம் அடைதல். (மற்றும் படிக்க- ஏன் மயக்கம்
  • பதட்டமாக உணர்தல்.
  • ஓய்வின்மை
  • மார்பில் வலி.  
  • நாடி  துடிப்பு நின்று போவது.  

இருதயத் தடுப்புக்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for cardiac arrest in Tamil?)

  • மாரடைப்பு ஒரு திடீர் நிகழ்வாகும், எனவே இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். திடீர் நிகழ்வாக மாரடைப்பு ஏற்படும் போது  சிபிஆர் அளிப்பது மிகவும் முக்கியமானதாகும். இது உடல் பாகங்களில் இரத்த ஓட்டத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. வேறு தொழில்நுட்பம் கிடைக்கவில்லை என்றால். அதுவரை உடலுக்கு உயிர் கொடுக்கிறது.  
  • சிபிஆர் வசதி கிடைக்காத நிலையில்.  யாராவது திடீரென மாரடைப்பால்  விழுந்தால், உடனடியாக ஆம்புலன்ஸை அழைக்கவும். 
  • மாரடைப்பு வந்தவுடன், அந்த நபருக்கு உடனடியாக மருத்துவமனையின் அவசர  சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற வேண்டும் . இதில் மருத்துவர் டிஃபிபிரிலேஷன் முறையைப்  பயன்படுத்துகிறார். வென்ட்ரிகுலர் டிஃபிபிரிலேஷன் இதயத்தின் நல்ல பராமரிப்புக்கு உதவுகிறது. 
  • குணமடைந்த பிறகு, மருத்துவர் நோயாளிக்கு சில மருந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார். மருந்துக்களை உட்கொள்வதன் மூலம்   இதயத் தடுப்பின் அறிகுறிகள் மீண்டும் ஏற்படாது, மற்றும்   அவற்றின் ஆபத்து குறைகிறது. 
  • சில சந்தர்ப்பங்களில் மருத்துவரால் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. பைபாஸ் அறுவை சிகிச்சை, கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற சரியான இதய அறுவை சிகிச்சைகள் சிக்கல்களுக்கு ஏற்றவாறு மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகின்றது.

இருதயத் தடுப்பைத் தடுப்பதற்கான வழிகள் யாவை? (What are the prevention measures for cardiac arrest in Tamil?) 

  • இதயத் தடுப்பு திடீரென ஏற்படுகிறது. எனவே, அதன் அறிகுறிகளைக் குறைக்க, ஒருவர் எப்போதும் தனது இதயம் நல்ல நிலையில் இருக்கிறதா என்பதை  சரிபார்க்க வேண்டும்.  
  • உங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நீங்கள்  பின்பற்ற வேண்டும். 
  • மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். சீரான உணவை உண்ணுங்கள்.  
  • தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
  • உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள். 
  • பிபியை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
  • இரத்தத்தில் கொழுப்பை நிலையான அளவில் வைத்திருங்கள். 
  • நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். 

இதயத் தடுப்பு மற்றும் இதயத் தடுப்புக்கான சிகிச்சையைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, உடனடியாக இருதய மருத்துவரைத் (Cardiologist) தொடர்பு கொள்ளுங்கள். 


Best Cardiologist in Delhi

Best Cardiologist in Mumbai

Best Cardiologist in Bangalore

Best Cardiologist in Chennai


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox