கார்டியோமயோபதி ஏற்படுவதற்கான காரணங்கள் | Causes of Cardiomyopathy in Tamil

டிசம்பர் 20, 2020 Heart Diseases 1054 Views

English हिन्दी Bengali Tamil

கார்டியோமயோபதி (Cardiomyopathy)

கார்டியோமயோபதி என்பது, இதயத்தின்  தசைகளில் ஏற்படும்   கடுமையான நோயாகும். கார்டியோமயோபதியின் விளைவாக  இதயத்தில் தசைகள் பலவீனமடைகின்றன, இதனால்  உடலின் மற்ற பாகங்களுக்கு இரத்தத்தை சரிவர செலுத்த முடிவதில்லைசிறிய இருதய சிக்கலில் தொடங்கி, கரோனரி இதய நோய் வரையிலான பல பிரச்சினைகள் இதன் காரணமாய் எழுகின்றன. மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, இதயத்தின் செயலிழப்பு, இதயத்தின் வால்வுகளில் பிரச்சினை போன்ற இருதய சிக்கல்களுக்கும் கார்டியோமயோபதி வழிவகுக்கிறது. இதனைக் குணப்படுத்த தொடருந்து சில மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்ளும் வேண்டும் மற்றும் இருதயத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இதய செயலிழப்பு மற்றும் பிற இதயம் தொடர்பான சிக்கல்களைத் தடுக்க இயலும். இந்தப் பதிவில் கார்டியோமயோபதிகான காரணங்கள் பற்றிய சில தகவல்களை விரிவாகக் கூறுகிறோம்.

  • கார்டியோமயோபதியின் வகைகள் (Types of Cardiomyopathy in Tamil)
  • கார்டியோமயோபதிகான காரணங்கள் யாவை?  (What are the causes of Cardiomyopathy in Tamil?)
  • கார்டியோமயோபதியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Cardiomyopathy in Tamil?)
  • கார்டியோமயோபதியின் சிகிச்சைகள் யாவை? (What are the treatments for Cardiomyopathy in Tamil?)

கார்டியோமயோபதியின் வகைகள் (Types of Cardiomyopathy in Tamil)

கார்டியோமயோபதி பொதுவாக நான்கு வகைப்படும், அவை:

  • டைலேடட் கார்டியோமயோபதி (Dilated Cardiomyopathy) – இந்த வகை கார்டியோமயோபதி மிகவும் பொதுவானதாகும், இதனை DCM என்று அழைக்கின்றனர். இதயத் தசை மிகவும் பலவீனமாக இருக்கும்போது அதனால் இரத்தத்தை திறம்பட பம்ப் செய்ய இயலாமல் போகிறது, இதன் விளைவாக தசைகள் விரிவடைந்து மிகவும் மெல்லிசாக (thin) மாறுகின்றன. மேலும், இதயத்தின் சாம்பர்ஸ்கள் (chambers) விரிவாகிறது. இதனை விரிவடைந்த இதயம் என்றும்  குறிப்பிடுகின்றனர். இந்த வகை கார்டியோமயோபதி சிலருக்கு மரபணுரிதியாக விளைகிறது, அல்லது  கரோனரி ஆர்ட்ரி நோய் காரணமாகவும் ஏற்படுகின்றது.
  • ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி (Hypertrophic cardiomyopathy) – இந்த வகை கார்டியோமயோபதி மிகவும் பொதுவானதாகும். ஹைபர்டிராஃபிக் கார்டியோமயோபதி மரபணுரிதியாக தோன்றுகின்றது என்று  நம்பப்படுகிறது. இந்த வகை கார்டியோமயோபதியில் இதயச்சுவர்கள் தடிமனாகி, இதயத்தின் வழியாக இரத்தம் பாய்வதைத் தடுக்கிறது. இது  நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு நோய் அல்லது வயதாவதன் காரணமாகவும் ஏற்படுகின்றது. 
  • அரீத்மிக் ரைட் வென்ட்ரிக்குலர் டிஸ்ப்ளாசியா ( Arrhythmic right ventricular dysplasia (ARVD)) – அரீத்மிக் ரைட் வென்ட்ரிக்குலர் டிஸ்ப்ளாசியா (ARVD) என்பது கார்டியோமயோபதியின் ஒரு அரிதான வகையாகும். எனினும், இது இளம் விளையாட்டு வீரர்களின் திடீர் மரணத்திற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த வகை மரபணு கார்டியோமயோபதியில், கொழுப்பு மற்றும் அதிகப்படியான நார்ச்சத்து திசுக்கள் வலது வென்ட்ரிக்கிளின் தசைகளை மாற்றி அமைக்கின்றன. இதனால் அசாதாரண இதயத்துடிப்பு ஏற்படுகின்றது.
  • ரெஸ்ட்ரிக்டிவ் கார்டியோமயோபதி ( Restrictive Cardiomyopathy ) ரெஸ்ட்ரிக்டிவ் கார்டியோமயோபதி என்பது கார்டியோமயோபதியின் மிகவும் பொதுவான வகையாகும். இந்த வகை கார்டியோமயோபதி வென்ட்ரிக்கிள்ஸ் கடினமாவதன் விளைவாக, அதனால் இரத்தத்தை நிரப்ப போதுமான இடத்தை பெற முடியாத சமயங்களில் நிகழ்கிறது. இதய வடுக்கள், இதய மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இந்த வகை கார்டியோமயோபதி அடிக்கடி நிகழ்கிறது. மேலும், இது இதய நோயின் விளைவாகவும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

கார்டியோமயோபதிகான காரணங்கள் யாவை? (What are the causes of Cardiomyopathy in Tamil?)

கார்டியோமயோபதி ஏற்படுவதற்கான  காரணங்கள் இன்னும்  அறியப்படவில்லை. எனினும், சில அடிப்படை நிலைகள் காரணமாக இது ஏற்படுகின்றது. மரபணு ரிதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. பின்வருவன, கார்டியோமயோபதி ஏற்படுவதற்கு சில காரணங்களாக இருக்ககூடும், அவை:

  • இதயத்தின் வால்வுகளில் பிரச்சினைகள்.
  • பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள்.
  • இதய தசையில் அதிக இரும்புசத்து குவிப்பு.
  • வளர்சிதை மாற்ற (Metabolic) கோளாறுகள்.
  • இணைப்பு திசு (Connective tissue) கோளாறுகள்.
  • நீண்ட காலமாக உயர் பிபி பிரச்சினை.
  • உடலில் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் குறைபாடுகள்.
  • கீமோதெரபி மருந்துகளின் பக்க விளைவுகள்.

கார்டியோமயோபதியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Cardiomyopathy in Tamil?)

அனைத்து வகையான கார்டியோமயோபதி சிக்கல்களிலும் கீழே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் உள்ளன. உடல் திசுக்கள் மற்றும் பிற உறுப்புகளுக்கு இதயத்தால் போதுமான அளவில் இரத்தத்தை செலுத்த இயலாத நிலையில். இது போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றது, அவை:

  • உடற்பலவீனம் மற்றும் சோர்வு
  • மூச்சுத் திணறல் உண்டாவது, குறிப்பாக உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளின் போது உண்டாகிறது.
  • தலைச்சுற்றல்
  • மார்பில் வலி
  • மயக்கம் ஏற்படும்.
  • உயர் இரத்த அழுத்தம்.
  • கால் மற்றும் கணுக்காலில் வீக்கம் 

கார்டியோமயோபதியின் சிகிச்சைகள் யாவை? (What are the treatments for Cardiomyopathy in Tamil?)

கார்டியோமயோபதிக்கான சிகிச்சைகள் அதன் வகை மற்றும் அதன் விளைவாக உண்டாகும்  அறிகுறிகளைப் பொறுத்தே அளிக்கப்படுகின்றது

  • சிலருக்கு அறிகுறிகள் தோன்றும் வரை எந்தவொரு  சிகிச்சையும் தேவைப்படுவதில்லை. மூச்சுத் திணறல் அல்லது மார்பு வலியுடன் போராடும் நோயாளிகளுக்கு, சில மருந்துகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும், அவர்கள் இருதயத்திற்கு நன்மைகள் அளிக்கும் சில பழக்கங்களை பின்பற்றவும் அறிவுறுத்துகின்றனர். 
  • கார்டியோமயோபதி சிக்கலை மாற்றியமைக்கவோ குணப்படுத்தவோ இயலாது, எனினும், பின்வரும் சில மாறுதல்களை மேற்கொண்டு அதைக் கட்டுப்படுத்த இயலும். அவை:
  • இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும் வாழ்க்கை முறை மாற்றங்கள்.
  • உயர் இரத்த அழுத்தத்திற்கு (High BP) சிகிச்சையளிக்கவும், இதயத்தின் துடிப்பை இயல்பாக வைத்திருக்கவும், இரத்த உறாய்வைத் தடுக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் அதற்கேற்ப தக்க மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 
  • இதயமுடுக்கிகள் (Pacemakers) மற்றும் டிஃபிபிரிலேட்டர்கள் (Defibrillators) போன்ற கருவிகளை  அறுவை சிகிச்சையை மேற்கொண்டு பொருத்துவதன் மூலம் கட்டுப்படுத்த இயலும்.
  • இதயமாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வதன் மூலமும் கட்டுப்படுத்து இயலும்.
  • கார்டியோமயோபதிக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், உங்கள் இதயத்தை முடிந்தவரை மீண்டும்  திறமையானதாக மாற்ற இயலும். மேலும், இதயம் சேதமடைவது மற்றும் இதயத்தின் செயல்பாட்டு இழப்பு போன்றவற்றை தடுக்க உதவுகிறது.

கார்டியோமயோபதி சிகிச்சையைப் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள்  பெற விரும்பினால், இருதயநோய் நிபுணரைத் (Cardiologist) தொடர்பு கொள்ளுங்கள்.


Best Cardiologist in Delhi

Best Cardiologist in Mumbai

Best Cardiologist in Bangalore

Best Cardiologist in Chennai


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha