ஐகார்டி நோய்க்குறி என்றால் என்ன | Aicardi Syndrome meaning in Tamil
டிசம்பர் 31, 2020 Brain Diseases 718 Viewsஐகார்டி நோய்க்குறியின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை (Causes, symptoms and treatments of Aicardi syndrome in Tamil)
ஐகார்டி நோய்க்குறி என்பது மரபணு ரிதியாக உண்டாகும் ஓர் அரிய வகை கோளாறாகும், பெரும்பாலும் இந்த கோளாறு பெண் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகின்றது. கார்பஸ் கொலொசோம் என்பது மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களை இணைக்கும் ஓர் அமைப்பு ஆகும். ஐகார்டி நோய்க்குறி ஏற்படுவதினால் கருவில் கார்பஸ் கொலொசோம் உருவாக்கத்தின் போது சில குறைபாடுகள் ஏற்படுகின்றது, இதன் விளைவாக கார்பஸ் கொலொசோம் முழுமை அடைவதில்லை. இதனால் பாதிக்கப்படக் குழந்தைகளுக்கு வலிப்புத்தாக்கங்கள் ஏற்படுகின்றன, பின்னர் இவை கடுமையான வலிப்பு நோயை ஏற்படுத்துகிறது. வலிப்பு நோய்க்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாதாகும். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கோரியோரெட்டினல் லாகுனே எனப்படும் விழித்திரை (retina) குறைபாடுகளும் உள்ளன. பெரும்பாலும், ஐகார்டி நோய்க்குறி உள்ளவர்களுக்கு, மூளையின் இரு பக்கங்களுக்கிடையில் சமச்சீரற்ற தன்மை, மூளை மடிப்புகளின் அளவு சிறியதாகவோ அல்லது எண்ணிக்கையில் குறைபாடு உடையதாகவோ இருக்கிறது, மேலும் மூளையில் நீர்க்கட்டிகள், மூளையின் மையத்திற்கு அருகில் திரவத்தால் நிரப்பப்பட்ட துவாரங்களின் விரிவாக்கம் போன்ற சில அசாதாரணங்களைக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலருக்கு வழக்கத்திற்கு மாறாக தலை சிறியதாக (மைக்ரோசெபாலி) இருக்கிறது. மேலும் இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களின் உடல் வளர்ச்சி தாமதிக்கிறது, இது அறிவுசார்ந்த இயலாமைக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், சிலருக்கு உடலில் சிறிய குறைபாடுகள் மட்டுமே ஏற்படுகின்றது. இன்றயைப் பதிவில் ஐகார்டி நோய்க்குறி என்றால் என்ன, என்பது குறித்த தகவல்களை கூறுகிறோம்.
- ஐகார்டி நோய்க்குறி ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of Aicardi syndrome in Tamil?)
- ஐகார்டி நோய்க்குறியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Aicardi syndrome in Tamil?)
- ஐகார்டி நோய்க்குறி நோயை கண்டறிதல் (Diagnosis of Aicardi syndrome in Tamil)
- ஐகார்டி நோய்க்குறிக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for Aicardi syndrome in Tamil?)
ஐகார்டி நோய்க்குறியின் காரணங்கள் யாவை? (What are the causes of Aicardi syndrome in Tamil?)
- ஐகார்டி நோய்க்குறி என்பது ஓர் அரிய வகை நோயாகும். தற்போது, இந்த நோய்க்குறி உலகில் மிகவும் பரவலாக காணப்படுகின்றது. சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த நோய்க்குறி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இன்னும் அறியப்படவில்லை. குழந்தையின் உடலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த நோய்க்குறி ஏற்படுகின்றது. ஐகார்டி நோய்க்குறி முக்கியமாக பெண்களை அதிகமாக பாதிக்கிறது. குரோமோசோம்களில் உண்டாகும் சில மாற்றங்களே இந்த சிக்கலுக்கு வழிவகுக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எக்ஸ் ( x ) மற்றும் ஒய் ( y ) ஆகிய இரண்டு பாலியல் குரோமோசோம்கள் உள்ளன.
- ஆண்களில் எக்ஸ் மற்றும் ஒய் குரோமோசோம்கள் இரண்டும் உள்ளன, பெண்களில் எக்ஸ் குரோமோசோம்கள் மட்டுமே உள்ளன. கருவில் ஏற்படும் சில இடையூறுகளின் காரணமாக குரோமோசோம்கள் மாற்றமடைகின்றன, என சில ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. மேலும், ஒரு குரோமோசோமில் மாற்றம் ஏற்படும் போது, மற்றொரு குரோமோசோம் நிலைத்து நிற்கிறது.
- ஐகார்டி நோய்க்குறி குறித்து மேலும் சில ஆராய்ச்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. எனினும், இந்த நோய்க்குறி ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இதுவரை அறியப்படவில்லை. இதனால், அதன் அபாயங்களை அறிந்து கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கிறது.
ஐகார்டி நோய்க்குறியின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Aicardi syndrome in Tamil?)
பொதுவாக ஐகார்டி நோய்க்குறியின் அறிகுறிகள் இரண்டு முதல் ஐந்து மாத குழந்தைகளில் தோன்றுகிறது. இதன் அறிகுறிகளின் தொடக்கதில் குழந்தைக்கு வலிப்பு ஏற்படுகின்றது. இந்த வலிப்புத்தாக்கங்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதினால், நாளடைவில் இது வலிப்பு நோயாக உருவாகக்கூடும். இது தவிர, குழந்தையின் கண்களில் மஞ்சள் புள்ளிகள் உருவாகிறது. பின்வருவன ஐகார்டி நோய்க்குறியின் பிற அறிகுறிகளாகும், அவை:
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
- உடல் வளர்ச்சி தாமதங்கள்
- கைகளில் குறைபாடுகள்
- சாப்பிடுவதில் சிரமம்
- தலையில் காயம் உண்டாகிறது
- கண்களில் துளை ஏற்படும் (கோலோபோமா)
- தலையின் அசாதாரண அமைப்பு
- தசை விறைப்பு
ஐகார்டி நோய்க்குறி நோயை கண்டறிதல் (Diagnosis of Aicardi syndrome in Tamil)
- ஐகார்டி நோய்க்குறியை கண்டறிய, மூளையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது. இந்த நோய்க்குறி தலையுடன் தொடர்புடையதாக இருப்பதினால் மூளை ஆராயப்படுகிறது. மேலும், மூளையில் ஈ.ஈ.ஜி மேற்கொள்வதன் மூலம் மூளையின் செயல்பாடுகள் பதிவு செய்யப்படுகிறது.
- கண்களின் விழித்திரைக்குள் கிரீம் நிற துவாரங்கள் உண்டாகிறது. மேலும், இது போன்ற கண் தொடர்பான நோயின் அறிகுறிகளைக் கண்டறிய கண்சிகிச்சை நிபுணர்கள் கண்களை பரிசோதிக்கிறார்கள்.
ஐகார்டி நோய்க்குறிக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for Aicardi syndrome in Tamil?)
- ஐகார்டி நோய்க்குறிக்கு குறிப்பிட்ட சிகிச்சைகள் எதுவுமில்லை. எனினும், சில சிகிச்சைகளின் பயன்கொண்டு இதன் அறிகுறிகளை கட்டுப்படுத்த முடியும். இந்த நோய்க்குறி பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் மருத்துவர் வெவ்வேறு முறையில் சிகிச்சையளிக்கின்றனர்.
- மேலும், சிலருக்கு கடுமையான வலிப்பு ஏற்படும் போது, மருத்துவர்கள் மூளை அறுவை சிகிச்சையைச் செய்ய பரிந்துரைக்கின்றனர். மேலும், பிசியோதெரபி, பேச்சு சிகிச்சை, தொழில் வழி சிகிச்சை (Occupational therapy) போன்ற வேறு சில சிகிச்சைகளையும் அளிக்கின்றனர்.
ஐகார்டி நோய்க்குறியின் கூடுதல் தகவல்களையும், அதற்கான சிகிச்சையையும் நீங்கள் பெற விரும்பினால், உடனடியாக ஒரு குழந்தை நல மருத்துவரைத் (Pediatrician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த குழந்தை நல மருத்துவர்
சென்னையில் சிறந்த குழந்தை நல மருத்துவர்