ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of apple cider vinegar in Tamil
ஏப்ரல் 13, 2021 Lifestyle Diseases 2764 Viewsஆப்பிள், பல வகையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அதே போல் ஆப்பிள் சைடர் வினிகரும் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கிறது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இவை நீரிழிவு நோய், உடல் கொழுப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பல்வேறு நோய்களைக் குணப்படுத்த பயனுள்ளதாக அமைகிறது. ஆப்பிள் வினிகரில் புற்றுநோயைத் தடுக்க உதவும் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும், சில உணவு தயாரிப்புகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பதிவின் மூலம், ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
- ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள் யாவை? (What are the benefits of apple cider vinegar in Tamil?)
- ஆப்பிள் சைடர் வினிகரின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of apple cider vinegar in Tamil?)
ஆப்பிள் சைடர் வினிகரின் நன்மைகள் யாவை? (What are the benefits of apple cider vinegar in Tamil?)
பின்வருவன, ஆப்பிள் சைடர் வினிகரின் ஆரோக்கிய நன்மைகளாகும், அவை:
- மூட்டு வலியை நீக்குகிறது (Relieves joint pain): மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு வலி நிறைந்த இடத்தில் சிறிதளவு ஆப்பிள் வினிகரைப் பூசி மசாஜ் செய்ய வேண்டும். குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்களுக்கு இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இந்த செயல்முறை மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. கழுத்து வலிக்கு நிவாரணம் அளிக்கவும் ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது. கழுத்து வலியால் அவதிப்படுகிறவர்களின் கழுத்தில் சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகருடன் தண்ணீர் சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
- முகப்பருவைத் தடுக்கிறது (Prevents acne): உங்கள் முகத்தில் உள்ள முகப்பருக்களை நீக்க, ஆப்பிள் சைடர் வினிகரின் சில துளிகளை முகப்பருக்களில் தடவவும். (மேலும் வாசிக்க- முகப்பரு ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் யாவை)
- ஈஸ்ட் தொற்றுக்கு பயனுள்ளதாக இருக்கிறது (Useful for yeast infection): ஈஸ்ட் தொற்றுநோயை குணப்படுத்த ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் வினிகரை கலந்து பயன்படுத்துவதன் மூலம் ஈஸ்ட் தொற்றுக்கு விரைவான நிவாரணம் அளிக்கிறது.
- கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது (Controls cholesterol): ஆப்பிள் வினிகர் உடலில் சேரும் கெட்டக் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இதயத்தை ஆரோக்கியமாக்குகிறது. ஆப்பிள் வினிகருடன் தேன் அல்லது தண்ணீரைச் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
- அழற்சிக்கு பயனுள்ளதாக இருக்கிறது (Useful in inflammation): வெயில் காரணமாக சருமத்தில் அழற்சி மற்றும் வீக்கம் ஏற்பட்டால், தண்ணீரில் ஆப்பிள் வினிகரை கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவ வேண்டும். இது வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது (Controls diabetes): நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் மிகவும் நன்மை பயக்கிறது. தினசரி ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறதளவு ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்த்து உட்கொள்ளுங்கள். இதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இயலும். (மேலும் வாசிக்க – நீரிழிவு நோய்க்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை)
ஆப்பிள் சைடர் வினிகரின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of apple cider vinegar in Tamil?)
ஆப்பிள் சைடர் வினிகரின் சில பக்க விளைவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- ஆப்பிள் சைடர் வினிகர் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது, எனினும் இதன் அதிகப்படியான உட்கொள்ளல் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
- ஆப்பிள் வினிகரில் உள்ள அமில தன்மையின் காரணமாக, இதன் அதிகப்படியான பயன்பாடு வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
- ஆப்பிள் சைடர் வினிகரை சருமத்தில் நேரடியாகப் பயன்படுத்த கூடாது, ஏனெனில் இது தோல் அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.
- பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதைத் தடுக்க மக்கள் அதிக அளவில் ஆப்பிள் வினிகரைப் பயன்படுத்துகிறார்கள், எனினும் அதில் உள்ள அமிலம் பற்களின் மஞ்சள் நிறத்தை அதிகரிக்கிறது.
- எலும்புகள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆப்பிள் வினிகர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். (மேலும் வாசிக்க- மூட்டுவலிக்கான காரணங்கள்)
ஆப்பிள் சைடர் வினிகரின் நுகர்வு காரணமாக நீங்கள் உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரை (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
மும்பையில் சிறந்த பொது மருத்துவர்