கூம்புகிழங்கின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of arrowroot in Tamil

மார்ச் 21, 2021 Lifestyle Diseases 1954 Views

English हिन्दी Tamil

கூம்புகிழங்கு என்பது ஊட்டசத்துகள் நிறைந்த ஓரு வகை கிழங்காகும். பெரும்பாலும், இதன் ஊட்டச்சத்து முக்கியத்துவத்திற்காகவே கூம்புகிழங்கு பயிரிடப்படுகிறது. இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. இது, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது மற்றும் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. இது, பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. இது, பிற கிழங்குகளிலிருந்து தனித்துவமானதாக விளங்குகிறது. கூம்புகிழங்கு பெரும்பாலும், கூம்புகிழங்கு மாவு எனப்படும் தூளாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டுரையில், கூம்புகிழங்கின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியத் தகவல்களை அறிந்து கொள்வோம்.

  • கூம்புகிழங்கு என்றால் என்ன? (What is arrow root in Tamil?)
  • கூம்புகிழங்கு மாவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? (How is arrow root flour is made in Tamil?)
  • கூம்புகிழங்கின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What are the nutritional importance of arrowroot in Tamil?)
  • கூம்புகிழங்கின் நன்மைகள் என்ன? (What are the benefits of arrowroot in Tamil?)
  • கூம்புகிழங்கின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of arrowroot in Tamil?)

கூம்புகிழங்கு என்றால் என்ன? (What is arrow root in Tamil?)

கூம்பு என்று பொதுவாக அழைக்கப்படும், மராண்டா அருண்டினேசியா மாவுச்சத்து நிறைந்த ஒரு கிழங்காகும். கூம்பு ஒரு சாதாரண தாவரம் போன்றதாகும். கூம்பின் ஸ்டார்ச் மட்டுமல்லாமல், இதன் வேரும் பயன்படுத்தப்படுகிறது.

கூம்புகிழங்கு மாவு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது? (How is arrow root flour is made in Tamil?)

கூம்புகிழங்கு, அதிகளவில் மாவுச்சத்து நிறைந்த கிழங்காகும். முதலில் இதன் வேர்கள் தோண்டப்பட்டு, பட்டை அகற்றப்பட்டு, ஸ்டார்ச் பெறப்படுகிறது. பின்னர்,இந்த ஸ்டார்ச்கள் நசுக்கப்பட்டு, வடிகட்டி உலர்ந்த பின், அதிலிருந்து மாவுத் தயார் செய்யப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் கூம்புகிழங்கின் மாவில் அதிகளவில் ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

கூம்புகிழங்கின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What are the nutritional importance of arrowroot in Tamil?)

கூம்புகிழங்கு மிகவும் சுவையானதாகும். பெரும்பாலும், இதனை வேகவைத்தப் பின்னரே, உட்கொள்கின்றனர். இது, ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும், இது உடல்நலம் தொடர்பான நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் தாக்கத்தைத் தடுக்கிறது. கூம்புகிழக்கில் கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் பி 9, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. இதில் துத்தநாகம், இரும்பு, வைட்டமின் பி 1 மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவையும் நிறைந்துள்ளது.

கூம்புகிழங்கின் நன்மைகள் என்ன? (What are the benefits of arrowroot in Tamil?)

கூம்புகிழங்கு பின்வரும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவை : 

  • முடியை வளர்க்கிறது (Promotes hair growth): கூம்புகிழங்கு கூந்தலுக்கு நன்மை பயக்கிறது. தலை முடியை பராமரிக்க கூம்புகிழங்கின் தூள் பயன்படுத்தப்படுகிறது. இது தலை முடியை மென்மையாகவும் அடர்த்தியாகவும் ஆக்குகிறது. மேலும், இது கூந்தலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
  • சிறுநீர் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கிறது (Treats urine infections): சிறுநீர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூம்புகிழங்கு பயனுள்ளதாக இருக்கிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளே, இதற்கான காரணமாகும். மேலும், இதில் அதிகளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. தொற்றுநோய்களைத் தடுக்க கூம்புகிழங்கை உட்கொள்ள வேண்டும். (மேலும் வாசிக்க- ஷிகாகாயின் நன்மைகள்)
  • வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது (Builds metabolism): கூம்புகிழங்கு உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. இது வைட்டமின் பியைக் கொண்டுள்ளது மற்றும் உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த கூம்புகிழங்கை உட்கொள்ள வேண்டும். (மேலும் வாசிக்க- சிவப்பு மிளகாயின் நன்மைகள்)
  • நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது (Enhances immunity): கூம்புகிழங்கில் பல்வேறு ஊட்டசத்துக்கள் உள்ளன, இவை உடல் சோர்வைப் போக்க உதவுகின்றன மற்றும் பலவீனத்தைத் தடுக்கின்றன. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை உடலில் இருந்து அகற்ற உதவுகின்றன.
  • இதயத்திற்கு நன்மை பயக்கிறது (Beneficial for heart): கூம்புகிழங்கு இதயத்தை பராமரிக்கிறது. இதிலுள்ள பொட்டாசியம், தமனிகளின் அழுத்தத்தைக் குறைக்கிறது. இது, இரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. மேலும், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தின் அச்சுறுத்தலைக் குறைக்கிறது. கூம்புகிழஙாகை உட்கொள்வது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நன்மை பயக்கிறது.
  • உடல் எடையைக் குறைக்கிறது (Reduces body weight): கூம்புகிழங்கில் குறைந்த அளவிலேயே கலோரிகள் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட் மற்றும் ஃபைபர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இது உடலில் சேரும் கெட்டக் கொழுப்பைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
  • சருமத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது (Useful for skin): மக்களின் சருமம் எண்ணெய் சருமம், உலர்ந்த சருமம் அல்லது கலந்த சருமம் என நபருக்கு நபர் வேறுப்பட்டு இருக்கிறது. தோல் நோய்த்தொற்றுகள், சருமத்தை சேதப்படுத்துகின்றன. இது போன்ற தொற்றுநோய்களைத் தடுக்க கூம்புகிழங்கை உட்கொள்ள வேண்டும். இது தோலில் ஏற்படும்  கொப்பளங்கள், வடு புள்ளிகள் மற்றும் சுருக்கங்களுக்கு சிகிச்சையளிக்கிறது. கூம்புகிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் அமைப்பையும் தரத்தையும் மேம்படுத்த உதவுகின்றன. (ரோஸ்மேரியின் நன்மைகள் பற்றி படிக்கவும்)

கூம்புகிழங்கின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of arrowroot in Tamil?)

கூம்புகிழங்கு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும், இது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும், அவை: 

  • நீங்கள் தினசரி ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், கூம்புகிழங்கை உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். 
  • கூம்புகிழங்கிற்கு ஒவ்வாமை உள்ளவர்கள், இதை உட்கொள்ளக்கூடாது. ஏனெனில் இதன் உட்கொள்ளல் இருமல், வாந்தி மற்றும் ஒழுங்கற்ற குடல் அசைவுகளை போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும்.
  • பால் அல்லது பழங்களுடன் சேர்த்து கூம்புகிழங்கை உட்கொள்ள வேண்டாம்.

கூம்புகிழங்கின் நுகர்வு காரணமாக உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha