கள்ளிச்செடியின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of cactus in Tamil
மார்ச் 29, 2021 Lifestyle Diseases 1493 ViewsEnglish हिन्दी Bengali Tamil العربية
பலவகையான தாவரங்களில், கள்ளிச்செடி ஒரு பிரபலமான தாவரமாகும், இதன் வளர்ச்சிக்கு மிகவும் குறைந்த அளவிலேயே நீர் தேவைப்படுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் சில பகுதிகளில் கள்ளிச்செடி காணப்படுகிறது. கள்ளிச்செடி பல்வேறு வகைகளில் காணப்படுகிறது. பெரும்பாலும், இது அலங்காரப் பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது, கள்ளிச்செடி அதன் மருத்துவ முக்கியத்துவம் காரணமாக பரவலாகப் பயிரிடப்படுகிறது. இதில் ஏராளமான நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பல்வேறு வகையானப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. இன்றையப் பதிவில், கள்ளிச்செடியின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றியத் தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
- கள்ளிச்செடியின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What are the nutritional importance of cactus in Tamil?)
- கள்ளிச்செடியின் நன்மைகள் என்ன? (What are the benefits of cactus in Tamil?)
- கள்ளிச்செடியின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of cactus in Tamil?)
கள்ளிச்செடியின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What are the nutritional importance of cactus in Tamil?)
கள்ளிச்செடியில் வைட்டமின் சி, தியாமின், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின் பி 6, வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் உடலை ஆரோக்கியமானகதாக மாற்றுகின்றன.
கள்ளிச்செடியின் நன்மைகள் என்ன? (What are the benefits of cactus in Tamil?)
கள்ளிச்செடி பின்வரும் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவை:
- கொழுப்பைக் குறைக்கிறது (Reduces cholesterol): கள்ளிச்செடியின் இலைகள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, என்று கண்டறியப்படுள்ளது. சுமார் 68 பெண்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், கள்ளிச்செடியில் பயன்பாட்டினால் 4 வாரங்களுக்குள் அவர்களின் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவுகள் குறைந்து உள்ளதாக காணப்படுகின்றது. உணவில் கள்ளிச்செடியின் இலைகளை சேர்ப்பது, இதய நோய்களின் அச்சுறுத்தலையும் குறைக்கிறது.
- புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது (Helps to fight against cancer): கள்ளிச்செடியின் இலைகளில் பினோலிக்ஸ் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் உயிரணுக்களின் தாக்குதலில் இருந்து, ஆரோக்கியமான செல்களை இவை பாதுகாக்கின்றன. கள்ளிச்செடியில் உள்ள பைட்டோ கெமிக்கல் சேர்மங்கள் பெருங்குடல், கல்லீரல், மார்பகம் மற்றும் புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைக்கின்றன. இவை ஆரோக்கியமான செல்கள் மீது எந்தவித தீங்கு விளையாத வண்ணம் அவற்றைப் பாதுகாக்கின்றன. (மேலும் படிக்க – கல்லீரல் கொழுப்பு என்றால் என்ன)
- செரிமானத்தை மேம்படுத்துகிறது (Improves digestion): கள்ளிச்செடியின் இலைகளைச் சாப்பிடுவது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது செல்லுலைட்களைக் குறைக்கிறது மற்றும் உடலில் தண்ணீரைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் திறனை அதிகரிக்கிறது. கள்ளிச்செடி செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை துரிதப்படுத்துகிறது. கள்ளிச்செடியில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், இது உடலில் உள்ள புற்றுநோய் உயிரணுக்களைக் குறைக்கிறது. (மேலும் வாசிக்க- க்ரோன் நோய்க்கு என்ன காரணம்)
- உடல் எடையைக் குறைக்கிறது (Reduces body weight): கள்ளிச்செடியில் குறைவான அளவிலேயே கலோரிகளில் உள்ளன. மேலும், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கள்ளிச்செடிக் கொண்டுள்ளது. இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. இதன் 100 கிராம் உட்கொள்ளல் 16 கலோரி ஆற்றலை வழங்குகிறது. உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகளில் கள்ளிச்செடியின் இலைகளைச் சேர்க்க வேண்டும்.
- வீக்கத்தைக் குறைக்கிறது (Reduces inflammation): கள்ளிச்செடியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இவை தசைகள், இருதய அமைப்பு, இரைப்பைக் குழாய் மற்றும் தமனிகள் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சிக்கு சிகிச்சையளிக்கின்றன. கள்ளிச்செடியில் குர்செடின் 3-மெத்தில் ஃபிளாவனாய்டு உள்ளது, இது உயிரணுக்களின் சேதத்தைத் தடுக்கிறது மற்றும் வலி நிவாரணி மருந்தாக செயல்படுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன், புண், எடிமா மற்றும் லுகோசைட் இடம்பெயர்வுக்கு சிகிச்சையளிக்க கள்ளிச்செடி பயனுள்ளதாக இருக்கிறது.
- மூளையின் செல்களைப் பாதுகாக்கிறது (Protects brain cells): கற்றாழை தாவரத்தின் தண்டு மற்றும் பழங்களில் குர்செடின் 3-மெத்தில் ஃபிளாவனாய்டு உள்ளது, இது நரம்பியல் அமைப்பைப் பாதுகாக்கிறது. இது நியூரான்களை சேதத்திலிருந்தும் பாதுகாக்கிறது.
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது (Controls diabetes): உயர் இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு, பக்கவாதம் மற்றும் இதய நோய்களுக்கு வழிவகுக்கிறது. கள்ளிச்செடி இலைகளை உட்கொள்வதன் மூலம், நீரிழிவு மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இயலும். உடல் பருமனாக உள்ள மக்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கள்ளிச்செடி இலைகளை உட்கொள்வது, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கின்றன, என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கள்ளிச்செடி நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. (மேலும் வாசிக்க- யூகலிப்டஸ் எண்ணெயின் நன்மைகள்)
கள்ளிச்செடியின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of cactus in Tamil?)
கள்ளிச்செடி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும் சில சமயங்களில், இது பின்வரும் பக்க விளைவுகளுக்கும் வழிவகுக்கக்கூடும்:
- நீரிழிவு நோய்க்கான மருந்துகளை உட்கொள்ளும் மக்கள் கள்ளிச்செடியின் இலைகளை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது.
- கள்ளிச்செடியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது, இது வயிற்று வலி, இரைப்பை பிரச்சினைகள், மலச்சிக்கல் மற்றும் கருத்தரிப்புகளில் ஏற்படும் பிடிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
- கள்ளிச்செடியில் கால்சியம் நிறைந்துள்ளது. மேலும், இது சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான வியாதிகள் ஏற்படுவதற்கான காரணமாக அமையக்கூடும்.
- கள்ளிச்செடிக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இதை உட்கொள்ளக்கூடாது.
- கள்ளிச்செடியை உட்கொள்வதற்கு முன்பு, இதனைப் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள வேண்டும்.
கள்ளிச்செடி இலைகளை உட்கொள்வதினால் உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
மும்பையில் சிறந்த பொது மருத்துவர்