கெய்ன் மிளகின் (சிவப்பு மிளகாய்) நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of cayenne pepper (red chilli) in Tamil
மார்ச் 24, 2021 Lifestyle Diseases 1472 Viewsபொதுவாக சிவப்பு மிளகாய் என்று பிரபலமாக அழைக்கப்படும், கெய்ன் மிளகு கேப்சிகம் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இது சூடான வெப்பநிலை உள்ள பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இது குறைந்தது 90 முதல் 100 நாட்களுக்குள் வளர்கிறது. ஆரம்ப கட்டத்தில் இது பச்சை நிறத்தில் காணப்படுகிறது. நன்றாக காய்ந்த பிறகு சிவப்பு நிறமாக மாறுகிறது. சிவப்பு மிளகாய் உணவின் சுவையை அதிகரிக்கும் நறுமணம் நிறைந்த மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, ஊறுகாய் தாயரிப்புகளிலும் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு மிளகாய் ஏராளமான ஆற்றல் பானங்களில் சுவையூட்டவும் பயன்படுத்தப்படுகிறது. கெய்ன் மிளகு பல ஊட்டச்சத்து பண்புகளைக் கொண்டுள்ளது, இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. இன்றையக் கட்டுரையில், கெய்ன் மிளகின் நன்மைகள் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துக் கொள்வோம்.
- கெய்ன் மிளகின் ஊட்டச்சத்துக் கூறுகள் யாவை? (What are the nutrients found in cayenne pepper in Tamil?)
- கெய்ன் மிளகின் நன்மைகள் யாவை? (What are the benefits of cayenne pepper in Tamil?)
- கெய்ன் மிளகின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of cayenne pepper in Tamil?)
கெய்ன் மிளகின் ஊட்டச்சத்துக் கூறுகள் யாவை? (What are the nutrients found in cayenne pepper in Tamil?)
கெய்ன் மிளகு நார்ச்சத்து நிறைந்ததாகவும். இதில் வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் கரோட்டினாய்டுகள் ஆகியவை நிறைந்துள்ளன, இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது.
கெய்ன் மிளகின் நன்மைகள் என்ன? (What are the benefits of cayenne pepper in Tamil?)
- புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer): கெய்ன் மிளகில் காப்சைசின் உள்ளது, இது மார்பக புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. எனவே, பெண்கள் தங்கள் அன்றாட உணவில் சிறிது அளவு சிவப்பு மிளகாயைச் சேர்க்க வேண்டும்.
- மூட்டு வலியைக் குறைக்கிறது (Reduces knee pain): சிவப்பு மிளகாய் உணவின் சுவையை அதிகரிக்கிறது. இது கீல்வாதத்தின் வலியைக் குறைக்க உதவுகிறது. மூட்டில் வீக்கப் பிரச்சினையை குணப்படுத்த மூட்டுகளில் சிவப்பு மிளகாய் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள். சந்தையில் எளிதாகக் கிடைக்கும் சிவப்பு மிளகாய் காப்ஸ்யூல்களையும் பயன்படுத்தலாம். (மேலும் வாசிக்க- கீல்வாதத்திற்கான வீட்டு வைத்தியங்கள்)
- சைனஸ் பிரச்சினையில் பயனுள்ளதாக இருக்கிறது ( Effective for sinus problem): சிவப்பு மிளகாயிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் வயிற்று வலி, தொண்டை வலி, தலைவலி போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கின்றன. சளி பிடிப்பதன் காரணமாக தொண்டையில் சளி குவிந்திருந்தால், அதற்கான சிகிச்சையில் சிவப்பு மிளகாய் பெரிதும் பயனளிக்கிறது. இது சைனஸ் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. சிவப்பு மிளகாயில் நல்ல அளவில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இவை தொற்றுநோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.
- இரத்த அளவை மேம்படுத்துகிறது (Improves blood level): இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. எனவே, சிவப்பு மிளகாயை நம் உணவில் தவறாமல் சேர்க்க வேண்டும்.
- இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது (Keeps heart healthy): கெய்ன் மிளகு இதயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது உடலில் சேரும் கெட்டக் கொழுப்பைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. (மேலும் வாசிக்க- கொழுப்பைக் குறைக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்)
- உடல் எடையைக் குறைக்கிறது (Reduces body weight): சிவப்பு மிளகாய் செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது மற்றும் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் சிவப்பு மிளகாயை உணவில் சேர்க்க வேண்டும்.
கெய்ன் மிளகின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of cayenne pepper in Tamil?)
சிவப்பு மிளகின் அதிகபடியான உட்கொள்ளல், சில தீமைகளை ஏற்படுத்தக்கூடும், அவை :
- சிவப்பு மிளகாயை அதிகமாகப் பயன்படுத்துவதினால் தொண்டை வலி, தொண்டையில் கொப்புளங்கள் மற்றும் இரைப்பை பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
- சிவப்பு மிளகாயை கட்டுப்பாடில்லாமல் உட்கொள்வதன் விளைவாக வியர்வை, மூக்கு ஒழுகுதல், வயிற்று எரிச்சல், வயிற்று வலி ஏற்படக்கூடும்.
- இரைப்பை பிரச்சினைகள் உள்ளவர்கள், மிகக் குறைந்த அளவிலேயே சிவப்பு மிளகாயை உட்கொள்ள வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள் சிவப்பு மிளகாய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். (மேலும் வாசிக்க- கொல்லு பருப்பின் நன்மைகள்)
சிவப்பு மிளகாய் உட்கொள்வதன் காரணமாக உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
மும்பையில் சிறந்த பொது மருத்துவர்