தேங்காய் எண்ணெயின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of coconut oil in Tamil
மார்ச் 14, 2021 Lifestyle Diseases 2046 Viewsதேங்காய் எண்ணெயில் பல ஊட்டச்சத்து பண்புகள் உள்ளன. மற்றும் தேங்காய் எண்ணெய் மற்ற எண்ணெய்களை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்த, மிகவும் பயனுள்ளதாக அமைகிறது மற்றும் இதிலுள்ள, இயற்கை பண்புகள் முடியை அழகுபடுத்துகின்றன. மேலும், பழங்காலத்திலிருந்தே தேங்காய் எண்ணெய் சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது. இன்றையப் பதிவில் தேங்காய் எண்ணெயின் நன்மைகள் குறித்து காண்போம்.
- தேங்காய் எண்ணெயின் நன்மைகள் என்ன? (What are the benefits of coconut oil in Tamil?)
- தேங்காய் எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of coconut oil in Tamil?)
தேங்காய் எண்ணெயின் நன்மைகள் என்ன? (What are the benefits of coconut oil in Tamil?)
- கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது (Keeps liver healthy): தேங்காய் எண்ணெய் கல்லீரலை, ஆல்கஹால் உட்கொள்வதினால் உண்டாகும் பக்க விளைவுகளிலிருந்தும், தேவையற்றக் கொழுப்புகளிலிருந்தும் பாதுகாக்கிறது. இது கல்லீரலின் வீக்கத்தைக் குறைக்கிறது. (மேலும் வாசிக்க- கல்லீரலில் கொழுப்பு என்றால் என்ன)
- கண்களில் செய்யப்படும் ஒப்பனைகளை நீக்க உதவுகிறது (Helps to remove eye makeup): தேங்காய் எண்ணெய் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் கண்களில் செய்யப்படும் ஒப்பனைகளை நீக்கவும் செயல்படுகிறது. இது சருமத்திற்கு எந்தவித தீங்கும் விளைவிப்பதில்லை.
- உதடுகளுக்கு நன்மை பயக்கிறது (Beneficial for lips): தேங்காய் எண்ணெய் உதடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களிடமிருந்து, உதடுகளைப் பாதுகாக்கிறது. இது உதடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. (மேலும் வாசிக்க- குளிர்காலத்தில் தோல் பராமரிப்பு)
- கீல்வாதத்தில் பயனுள்ளதாக இருக்கிறது (Useful in Arthritis): தேங்காய் எண்ணெய் மூட்டு வீக்கம் மற்றும் கீல்வாதத்தினால் உண்டாகும் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதில் மூட்டு வலியைக் குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
- பச்சிளங்குழந்தைக்கு மசாஜ் செய்வதில் பயனுள்ளதாக அமைகிறது (Useful in massaging new born babies): பச்சிளங்குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் மிகவும் நன்மை பயக்கிறது. தேங்காய் எண்ணெயுடன் மசாஜ் செய்வதன் மூலம், குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த இயலும். (மேலும் வாசிக்க- பச்சிளங்குழந்தைகளின் பராமரிப்பு)
- தொப்பைக் கொழுப்பைக் குறைக்கிறது (Reduces belly fat): பெரும்பாலும், வயிற்றுக் கொழுப்பைக் குறைக்க தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. உடல் பருமனான மக்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். பெண்கள், தங்கள் உடலில் அதிகரிக்கும் கலோரிகளைக் குறைக்க, தினசரி ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தொற்றுநோய்களைத் தடுக்கிறது (Prevents infection): தேங்காய் எண்ணெயில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இவை தொற்றுநோய்களைக் குறைக்க உதவுகின்றன. தேங்காய் எண்ணெய் குடல் புழுக்களை நீக்குகிறது. பல்வேறு வகையான பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்த தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக இல்லையேனினும், சில வகைத் தொற்றுகளைத் தடுக்க தேங்காய் எண்ணெய் பயனுள்ளதாக அமைகிறது.
- மூளைக்கு ஊட்டமளிக்கிறது (Nourishes the brain): தேங்காய் எண்ணெய் மூளைக்கு நன்மை பயக்கிறது. இது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. (மேலும் வாசிக்க- அல்சைமர் நோய் என்றால் என்ன)
- துர்நாற்றத்தை நீக்குகிறது (Removes odor): அதிகமாக வியர்வை சுரக்கும் மக்கள், தங்களின் சருமத்தில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இது ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது, இது சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குகிறது. தேங்காய் எண்ணெயில் எந்தவித வேதிப்பொருள்களுமில்லை, இது இயற்கை பண்புகளை மட்டுமே கொண்டுள்ளது. (மேலும் வாசிக்க- தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் வேப்பத்தின் நன்மைகள்)
தேங்காய் எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of coconut oil in Tamil?)
சில அரிய சந்தர்ப்பங்களில், தேங்காய் எண்ணெயை அதிகமாக பயன்படுத்துவதினால், பின்வரும் சில பக்க விளைவுகளை ஏற்படக்கூடும், அவை:
- தேங்காய் எண்ணெயை அதிகமாக உட்கொள்வது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கிறது. தேங்காய் எண்ணெய் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதன், அதிகபடியான உட்கொள்ளல் வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
- தேங்காய் எண்ணெயைத் தலைமுடியில் தடவி ஒரு நாளைக்கு மேல் முடியைக் கழுவாமல் இருந்தால், முடி பிசுபிசுபாக ஒட்டுகிறது.
- அதிகளவில் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் காலில் ஏற்படும் விரிசல் குணமடையும் எனப் பலரும் நம்புகின்றனர், இது தவறாகும். ஒரு குறிப்பிட்ட அளவிலேயே தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும்.
- தேங்காய் எண்ணெய் பயன்பாட்டினால் ஒவ்வாமை ஏற்படும் நபர்கள், இதைப் பயன்படுத்தக்கூடாது. இந்த, ஒவ்வாமை சருமத்தின் உணர்திறன் காரணமாக ஏற்படலாம். (மேலும் வாசிக்க- சருமத்தை இறுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்)
தேங்காய் எண்ணெயை உட்கொள்வது அல்லது பயன்படுத்துவதினால் உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
மும்பையில் சிறந்த பொது மருத்துவர்