டிராகன் பழம் என்றால் என்ன | Dragon fruit meaning in Tamil

நவம்பர் 28, 2020 Lifestyle Diseases 3634 Views

English हिन्दी Bengali Tamil العربية

நாம் அனைவரும் படங்களிலும் கதைகளிலும் மட்டுமே  டிராகன் என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருக்கின்றோம், ஆனால் இன்று இந்த கட்டுரையில் டிராகன் பழத்தைப் பற்றிய சில முக்கியச் செய்திகளைக் காண்போம். டிராகன் இது ஒரு வகைப்பழத்தின் பெயர்.  இது  தமிழில் தறுகண்பழம், அகிப்பழம் மற்றும் விருத்திரப்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் நிறம் இளஞ்சிவப்பாகும். இதன் சுவை தர்பூசணி மற்றும் கிவி பழங்களின் சுவையை ஒத்திருக்கிறது. டிராகன் பழத்தின் முக்கிய உற்பத்தி  நகரங்களாக அமெரிக்கா மற்றும் தெற்காசியா உள்ளது. தற்போது அனைத்து உலக நாடுகளிலும் டிராகன் பழங்கள் பயிரிடப்படுகிறது. டிராகன் பழம் ஆரோக்கியத்திற்கு மிகுந்த  நன்மை பயக்கும் ஒரு உணவு பொருளாகும். இதில் கால்சியம், வைட்டமின் பி3, இரும்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் பி1, பாஸ்பரஸ், வைட்டமின் பி2, வைட்டமின் சி5 போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும்,   உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டிராகன் பழம் துணை புரிகின்றது. இன்றையப் பதிவில், டிராகன் பழம் என்றால் என்ன ? என்பது குறித்துக் காண்போம்.

  • டிராகன் பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of dragon fruit in Tamil?) 
  • டிராகன் பழத்தின் தீமைகள் என்ன? (What are the sideeffects of dragon fruit in Tamil?)

டிராகன் பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of dragon fruit in Tamil?)  

  • உடல் எடையை குறைக்க: டிராகன் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க இயலும். டிராகன் பழத்தை உட்கொள்வதன் மூலம் புரத சக்தி  அதிகம் கிடைக்கிறது. இதனை உட்கொள்வதினால் உடல் எடை அதிகரிக்காது. சாலட்டில் டிராகன் பழத்தை சேர்த்து உட்கொள்ளவும். (மேலும் படியுங்கள்  – உடல் பருமனுக்கு என்ன சிகிச்சை) 
  • ஆஸ்துமாவில்: சளியின் தாக்கத்தினால் உண்டாகும்  ஆஸ்துமா மற்றும் இருமல் போன்ற செவிப்புலன் பிரச்சினைகள் ஆபத்தானவை ஆகும் மற்றும் இவை நமது அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கிறது. இதற்கு  சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். டிராகன் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது ஆஸ்துமா நோய்க்கு  மிகவும் நன்மை பயக்கும் ஒரு உணவு பொருளாகும்.  
  • புற்றுநோயிலிருந்து தடுப்பு: டிராகன் பழத்தில் ஃபைபர், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி, பி 2 மற்றும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும் வேறுசில கூறுகளும் உள்ளன. இதனால், புற்றுநோய் ஏற்படாமல்  தடுக்க இயலும்.
  • கூந்தலுக்கு: டிராகன் பழத்தை உட்கொள்வதனால் முடி உதிர்வதைத் தடுக்க இயலும். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை முடி வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கிறது. 
  • மலச்சிக்கலைப் போக்க: மலச்சிக்கல் ஏற்படும் நேரங்களில்  மலம் கடினமாகவும் திடமாகவும் இருக்கிறது. டிராகன் பழத்தில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. இது  ஒரு  நபரை நீரேற்றமாக வைத்திருக்க  உதவுகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. வளர்சிதை மாற்ற அமைப்பை அதிகரிக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது. (மேலும் படியுங்கள்  – மலச்சிக்கல் என்றால் என்ன) 
  • சருமப் பிரச்சினைகளில்  : பெண்கள்  தங்கள்  சருமத்தை அழகாக மாற்ற பல்வேறு மாறுதல்களை பயன்படுத்துகிறார்கள். டிராகன் பழத்தை உட்கொள்வதன் மூலம்  சருமத்தை சீராக வைத்துக்கொள்ளலாம். இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளது. இது முகப் பருக்களை  நீக்குகிறது. மேலும், சருமத்தை அழகாக மாற்றும். 
  • நீரிழிவு நோயில் : சர்க்கரை ஒரு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சாதாரணமாக  வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். இதற்கு டிராகன் பழம் பல வழிகளில் உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் டிராகன் பழத்தை தினமும் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். (மேலும் படிக்க – நீரிழிவு நோய்க்கான சிகிச்சை என்ன)
  • செரிமான அமைப்பை சரியாக வைத்திருக்க: செரிமான செயல்முறையை உடலில் சரியாக வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். செரிமான செயல்முறையை சரியாக வைத்திருக்க டிராகன் பழத்தை உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள   நார்ச்சத்து உடலில் நடைபெறும் செரிமான பணியைச் சரியாக செயல்பட உதவுகிறது. இதனால்  மலச்சிக்கல் போன்ற எந்த பிரச்சனைகளும் நமக்கு ஏற்படுவதில்லை

டிராகன் பழத்தின் தீமைகள் என்ன? (What are the side – effects of dragon fruit in Tamil?)

  • இதுவரை   டிராகன் பழத்தின்   நன்மைகள் பற்றி அறிந்தோம் . ஆனால் டிராகன் பழத்தில் நன்மைகளுடன், சில குறைபாடுகளும் உள்ளன.
  • டிராகன் பழத்தை அதிகமாக  எடுத்துக்கொள்வதினால் சிலர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர். (மேலும் படியுங்கள் – வயிற்றுப்போக்கு பிரச்சினைக்கு என்ன காரணம்
  • டிராகன் பழம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். எனினும், இதை அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

டிராகன் பழத்தை உட்கொள்வதினால் உடல் நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் எதிர்கொள்ள நேரிட்டால், உங்கள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தி உடனடியாக அருகிலுள்ள பொது மருத்துவரைத் (General physician) தொடர்பு கொள்ளுங்கள். 


Best General Physician in Mumbai

Best General Physician in Delhi

Best General Physician in Chennai

Best General Physician in Bangalore


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha