ஆளி விதைகளின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of flax seeds in Tamil
பிப்ரவரி 15, 2021 Lifestyle Diseases 1750 ViewsEnglish हिन्दी Bengali Tamil العربية
ஆளி விதைகள் என்பது, ஆளி பயிரிலிருந்து பெறப்படும் சிறிய விதைகளாகும். இவை பழுப்பு அல்லது தங்க – மக்கள் நிறத்தில் காணப்படுகிறன. ஆளி விதைகளில் பல ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன. மற்றும் இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றது. ஆளி விதைகளின் மருத்துவ முக்கியத்துவம் காரணமாக, இவை நம் உடலில் ஆரோக்கியமான விளைவுகள் உண்டாக வழிவகுக்கிறது. இன்றையப் பதிவில் ஆளி விதைகளைப்ஆளி விதைகளின் நன்மைகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.
- ஆளி விதைகளில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients found in flax seeds in Tamil?)
- ஆளி விதைகளின் நன்மைகள் என்ன? (What are the benefits of flax seeds in Tamil?)
- ஆளி விதைகளின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of flax seeds in Tamil?)
ஆளி விதைகளில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients found in flax seeds in Tamil?)
ஆளி விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்துள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஆளி விதைகள் நார்ச்சத்துகள் மற்றும் தாதுக்களின் உறைவிடமாகும். ஆளி விதைகளில் கால்சியம், மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, நியாசின் மற்றும் ஃபோலேட்டுகள் உள்ளன.
ஆளி விதைகளின் நன்மைகள் என்ன? (What are the benefits of flax seeds in Tamil?)
ஆளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன, அவை:
- உடல் எடையைக் குறைக்கிறது (Reduces body weight) : இன்றைய இளைஞர்கள் மடிக்கணினி, மொபைல் மற்றும் பல மின்னணு சாதனங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். மேலும், கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம் மற்றும் உடலில் அதிக செயல்பாடுகள் இல்லாததால் உடை எடை அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலைகளில் ஆளி விதைகள் பயனுள்ளதாக அமைகிறது. இவற்றில் அதிக அளவில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன, இதனால் இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.
- இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது (Controls blood pressure): மன அழுத்த காரணமாக, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இவை இருதயத்தை நேரடியாக பாதிக்கிறது மற்றும் இருதயம் தொடர்பான வியாதிகளை ஏற்படுத்துகிறது. ஆளி விதை நுகர்வு இத்தகைய சந்தர்ப்பங்களில் பயனுள்ளதாக அமைகிறது. ஆளி விதைகளில் ஃபைபர், லினோலிக் அமிலம் மற்றும் லைஃப்லைன் ஆகியவை உள்ளன, இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
- நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக அமைகிறது (Effective for Diabetes): ஆளி விதைகளில் நார்ச்சத்து உள்ளது. இவை செரிமானத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு வகை 1 க்கு சிகிச்சையளிக்க ஆளி விதைகள் பயனுள்ளதாக அமைகிறது. (மேலும் வாசிக்க- நீரிழிவு நோய் என்றால் என்ன?)
- நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது (Enhances the immune system): ஆளி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி உள்ளன, இவை உடலில் உண்டாகும் தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்துகிறது.
- சளி மற்றும் இருமலை குணப்படுத்துகிறது (Treats cold and cough): வானிலை மாற்றங்கள் காரணமாக சளி மற்றும் இருமல் ஏற்படுகின்றது. ஆளி விதைகள் ஆன்ட்டி அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. ஆளி விதைகளைச் சேர்த்த மூலிகை தண்ணீர் சளியைக் குணப்படுத்த பயனுள்ளதாக இருக்கிறது.
- கொழுப்பின் அளவைக் குறைக்கிறது (Lowers cholesterol level): ஆளி விதைகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி–ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிக்கின்றன. (மேலும் வாசிக்க- கொழுப்பு என்றால் என்ன?)
ஆளி விதைகளின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of flax seeds in Tamil?)
ஆளி விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும், இதில் சில குறைபாடுகளும் உள்ளன. ஆளி விதைக்களின் நுகர்வு காரணமாக உண்டாகும் சில பக்க விளைவுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவை:
- இவை உடலின் வெப்பநிலையை பாதிக்கும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் ஆளி விதைகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது கருப்பையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
- மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு உள்ள பெண்கள் ஆளி விதைகளை உட்கொள்ளக்கூடாது.
- மார்பக புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆளி விதைகள் தீங்கு விளைவிக்கிறது. (மேலும் படிக்க- மார்பக புற்றுநோய் என்றால் என்ன, அதற்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது?)
- ஆளிவிதைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- ஆளி விதைகள் உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும்.
ஆளி விதைகளை உட்கொள்வதினால் உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
சென்னையில் சிறந்த பொது மருத்துவர்