ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of orange in Tamil

மார்ச் 2, 2021 Lifestyle Diseases 1551 Views

English हिन्दी Bengali Tamil

ஆரஞ்சு மிகவும் சுவையான மற்றும் பிரபலமான ஒரு சிட்ரிக் பழமாகும், இதில் நல்ல அளவில் வைட்டமின் சி உள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கோலின் ஆகியவை  நிறைந்துள்ளன. ஆரஞ்சு ஆன்ட்டிஆக்ஸிடேன்டுகளைக் கொண்டுள்ளது, இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. இன்றையப் பதிவில் ஆரஞ்சு பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து ஆராய்வோம். 

  • ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் யாவை? (What are the benefits of orange in Tamil?)
  • ஆரஞ்சு பழத்தின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of orange in Tamil?)

ஆரஞ்சு பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of orange in Tamil?)

ஆரஞ்சு பழம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவை

  • கொழுப்பைக் குறைக்கிறது (Lowers cholesterol): ஆரஞ்சு பழத்தில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது.  
  • கண்களை வளர்க்கிறது (Nourishes the eyes): ஆரஞ்சில்  வைட்டமின் ஏ மற்றும் கரோட்டினாய்டுகள் நிறைந்துள்ளன, இவை முயுகோசல் அடுக்கை (mucosal membrane) ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இவை, குருட்டுதன்மையை ஏற்படுத்தும் கண் வியாதிகளைத் தடுக்கின்றன. மேலும், இது கண்கள்  ஒளியை உறிஞ்சவும் உதவுகிறது. (மேலும் வாசிக்க- கண்புரை என்றால் என்ன
  • நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கிறது (Effective for Diabetes): ஆரஞ்சில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, இன்சுலின் உற்பத்தியைப் பராமரிக்கின்றன. 
  • எடையைக் குறைக்கிறது (Reduces body weight): ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஃபைபர் கொழுப்பைக் குறைக்கவும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. 
  • சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது (Enhances skin quality): ஆரஞ்சில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இவை உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்குகின்றன. இதன் விளைவாக சருமம் என்றும் இளமையாகவே இருக்கிறது. 
  • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது (Enhances the immunity): ஆரஞ்சு பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது பொதுவான சளி மற்றும் காது நோய்த்தொற்றுகளின் அபாயத்தை குறைக்கிறது. (மேலும் வாசிக்க- நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு அதிகரிப்பது
  • கீல்வாதத்திற்கு பயனுள்ளதாக இருக்கிறது (Effective for Arthritis): ஆரஞ்சில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இவை மூட்டு வீக்கத்தைக் குறைக்கின்றன. உடலில் ஜெலட்டின் மற்றும் பீட்டா-கிரிப்டாக்சாண்டின் ஆக்சிஜனேற்றத்தைத் தடுக்க ஆரஞ்சு பழம் உதவுகிறது. இதன் மூலம் எலும்பு தொடர்பான வியாதிகளைத் தடுக்கிறது. 
  • புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer): ஆரஞ்சில் டி-லிமோனீன் உள்ளது, இது நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்கிறது. இதிலுள்ள, வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடன்டுகள் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க உதவுகின்றன. சுமார் 15% புற்றுநோய்கள் டி.என்.ஏ பிறழ்வுகளால் ஏற்படுகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது, வைட்டமின் சி யை உட்கொள்வதன் மூலம் இதனால் உண்டாகும்  அனைத்து புற்றுநோய்களையும் தடுக்க இயலும். 
  • சிறுநீரக கற்களைத் தடுக்கிறது (Prevents kidney stones): ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது சிறுநீரக கற்களின் உருவாக்கத்தை தடுக்கிறது.

ஆரஞ்சு பழத்தின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of orange in Tamil?)

ஆரஞ்சு பழம்ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், சில சமயங்களில் இது சில பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கிறது, அவை

  • கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆரஞ்சு பழம் நன்மை பயக்கிறது. எனினும், கட்டுப்பாடற்ற முறையில் ஆராஞ்சை உட்கொள்ளும் போது, இது உடலுக்கு சில தீங்குகளை விளைவிக்கும்.  
  • ஆரஞ்சில் உள்ள நார்ச்சத்துகள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. எனினும், ஆரஞ்சு பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் பிடிப்புகள் மற்றும் வயிற்று வலி ஏற்படுகிறது. 
  • தீக்காயங்கள் ஏற்பட்டவர்கள், ஆரஞ்சு பழம் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 
  • இனிப்பான ஆரஞ்சு பழங்களின் அதிகமான உட்கொள்ளல், இளம் குழந்தைகளுக்கு வயிற்று வலி மற்றும் ஒத்திசைவை ஏற்படுத்தக்கூடும். 
  • பீட்டா தடுப்பான்களை எடுத்துக்கொள்பவர்கள் ஆரஞ்சு பழத்தைக் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். 

ஆரஞ்சு நுகர்வு காரணமாக நீங்கள் ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டால், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General  Physician) தொடர்பு கொள்ளுங்கள். 


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox