பனை பழத்தின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of Palm fruit in Tamil
பிப்ரவரி 15, 2021 Lifestyle Diseases 1446 Viewsபனை பழம், இதன் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தால் வணிக ரீதியாக குறிப்பிடத்தக்க ஒரு பழமாகும். பனை மரம் சுமார் 20 முதல் 40 மீட்டர் உயரம் கொண்டது. இந்த மரத்தில் கிளைகள் எதுவுமில்லை, ஏனெனில் இவை நேர்கோட்டில் வளர்கிறது. இதன் இலைகள் முட்கள் நிறைந்தவையாகும். பனை மரங்கள் வெப்பமான காலநிலையில் நன்றாக வளர்கிறது. இதன் மரங்கள் மஞ்சள் நிறம் கொண்ட மணமான பூக்களைத் தருகின்றன. பனை பழம் முதலில் பச்சை நிறமாகவும், பழுத்தபின் மஞ்சள் நிறமாகவும் மாறுகிறது. பனை பழங்கள் இனிப்பாக இருக்கின்றன. பனை பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும் மற்றும் இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. இவை உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுகின்றன மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இன்றையப் பதிவில் பனை பழத்தின் நன்மைகள் பற்றிய தகவல்களை விரிவாகக் கூறுகிறோம்.
- பனை பழத்தின் ஊட்டச்சத்து மதிப்புகள் யாவை? (What is the nutritional value of palm fruit in Tamil?)
- பனை பழத்தின் மருத்துவ முக்கியத்துவம் என்ன? (What is the medicinal importance of palm fruit in Tamil?)
- பனை பழத்தின் நன்மைகள் யாவை? (What are the benefits of palm fruit in Tamil?)
- பனை பழத்தின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of palm fruit in Tamil?)
பனை பழத்தின் ஊட்டச்சத்து மதிப்புகள் யாவை? (What is the nutritional value of palm fruit in Tamil?)
பனை பழத்தில் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, சர்க்கரை, நார்ச்சத்து, புரதம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவை உள்ளன.
பனை பழத்தின் மருத்துவ முக்கியத்துவம் என்ன? (What is the medicinal importance of palm fruit in Tamil?)
பனை பழங்கள் மருத்துவ முக்கியத்துவம் நிறைந்ததாகும். இது நம் உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றது மற்றும் அஜீரணத்தை குறைக்கின்றது. பழுத்த பனை பழங்கள் பித்த சாறு சுரக்க உதவுகிறது மற்றும் இதனை உட்கொள்வதன் மூலம் விந்து அளவு அதிகரிக்கிறது. பனை பழங்கள் இரத்தம் மற்றும் சிறுநீர் தொடர்பான வியாதிகளைக் குறைக்கின்றன. மற்றும் இது உடல் சோர்வைக் குறைக்கின்றது.
பனை பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of palm fruit in Tamil?)
பனை பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவை:
- ஏப்பத்தைக் குறைக்கிறது (Reduces belches): ஏப்பம் ஒரு பொதுவான செரிமான பிரச்சினையாகும். பனை பழத்தின் சாற்றை உட்கொள்வதன் மூலம் இந்த சிக்கலை குணப்படுத்த இயலும். குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற சிக்கல்களுக்கும் இந்த சாறு பயனுள்ளதாக அமைகிறது.
- வயிறு தொடர்பான வியாதிகளை குணப்படுத்துகிறது (Cures stomach related ailments): வயிற்று தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க பனை பழங்கள் பயனுள்ளதாக இருக்கின்றது. வெல்லத்துடன் பனை பழங்களை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கிறது. எனினும், அதிகப்படியான உட்கொள்ளல் பிரச்சினைகளை ஏற்படத்தக்கூடும். (மேலும் வாசிக்க- வாழைப்பழத்தின் நன்மைகள்)
- விக்கலை நீக்குகிறது (overcomes hiccups): பனை விதைகளை பாலுடன் கலந்து குடிப்பதன் மூலம் விக்கலை நீக்க இயலும்.
- உடலைக் குளிர்விக்கும் (Cools down the body): பனை பழம் ஒரு இயற்கையான குளிரூட்டியாகும், இது கோடைகாலத்தில் சோர்வைத் தடுக்க உதவுகிறது. கோடை காலத்தில் பனை நீர் நன்மை பயக்கிறது. (மேலும் வாசிக்க- தேங்காய் நீரின் நன்மைகள்)
- வீக்கத்தைக் குறைக்கிறது (Reduces swelling): பனை இலைகளின் சாறு வீக்கத்தைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.
- மனநல கோளாறுகளைத் தடுக்கிறது (Prevents mental disorders): பனை பழத்திலுள்ள மருத்துவ குணங்கள் மன அழுத்தத்தை குணப்படுத்த உதவுகின்றன. பனை சாற்றை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடிப்பதன் மூலம் உடலுக்கு நன்மை பயக்கிறது. (மேலும் வாசிக்க- இருமுனை கோளாறு என்றால் என்ன?)
- டைபாய்டு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கிறது (Treats typhoid fever): பனை இலைகள் டைபாய்டு காய்ச்சலை குணப்படுத்துகிறது. பனை சாற்றை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்வதன் மூலம் உடல் வெப்பநிலையைக் குறைக்க இயலும்.
- நீர்க்கோவைக்கு சிகிச்சையளிக்கிறது (Treats Ascites): பனை மலர்களில் இருந்து எடுக்கப்படும் சாறு நீர்க்கோவை நோய்க்கு சிகிச்சையளிக்க பயனுள்ளதாக இருக்கிறது. இது நீர்க்கோவையினால் உண்டாகும் வலியை நீக்குகிறது. இருப்பினும், அதிகப்படியான சாற்றை உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
பனை பழத்தின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of palm fruit in Tamil?)
பனை பழத்தின் அதிகபடியான உட்கொள்ளல் உடலில் சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது, அவை :
- பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள் பனை பழத்தை உட்கொள்ளக்கூடாது.
- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவ பயிற்சியாளரைக் கலந்தாலோசித்த பின்னரே பனை பழத்தை உட்கொள்ள வேண்டும்.
- பனை பழத்திற்கு ஒவ்வாமை உள்ளவர்கள், பனை பழத்தை உட்கொள்ளக்கூடாது.
- பனை பழத்தை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலி மற்றும் தசைப் பிடிப்பை ஏற்படுத்துகிறது.
பனை பழம் உட்கொள்வதன் மூலம் நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டால், ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
சென்னையில் சிறந்த பொது மருத்துவர்