சோளத்தின் (ஜோவர்) நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of Sorghum (Jowar) in Tamil 

மே 9, 2021 Lifestyle Diseases 840 Views

English हिन्दी Bengali Tamil

பழங்காலத்திலிருந்தே பாரம்பரியமாக வீட்டு விலங்குகளுக்கு உணவளிக்க சோளம் பயன்படுத்தப்படுகிறது. சோளத்தில் பல வகைகள் உள்ளன, மனிதர்கள் பைகோலர் வகை சோளத்தை உட்கொள்கின்றனர். கோதுமையுடன் ஒப்பிடும்போது இதில் அதிகளவில் புரதம் உள்ளது. இதில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் உள்ளன. மேலும், இதில் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. கோடைகாலத்தில், மக்கள் கோதுமை ரோட்டிக்கு பதிலாக சோள ரோட்டியை சாப்பிட விரும்புகிறார்கள். இந்த கட்டுரையின் மூலம் சோளத்தின் (ஜோவர்) நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து விளக்குகிறோம். 

 • சோளம் என்றால் என்ன? (What is sorghum in Tamil?) 
 • சோளத்தில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients present in sorghum in Tamil?) 
 • சோளத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of Sorghum in Tamil?) 
 • சோளத்தின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of Sorghum in Tamil?) 

சோளம் என்றால் என்ன? (What is sorghum in Tamil?) 

சோளம் ஒரு வகை தானியமாகும், இது ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்படும் சோளம் அதன் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தால் நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. சோளம் முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் பயிரிடப்பட்டது, ஆனால் தற்போது, இது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. கோதுமைக்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சோளம் நன்மை பயக்கிறது. 

சோளத்தில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients present in sorghum in Tamil?) 

சோளத்தில் புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் கால்சியம், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் இரும்புச் சத்து ஆகியவை அதிகளவில் இருப்பதால் இவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. (மேலும் வாசிக்க- இரும்புச்சத்து குறைபாடு என்றால் என்ன

சோளத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of Sorghum in Tamil?) 

பின்வருவன, சோளத்தின் ஆரோக்கிய நன்மைகளாகும்:

 • பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது (Relieves tooth ache): பற்கள் தொடர்பான வியாதிகளை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் அதிகளவில் ஆபத்து ஏற்படக்கூடும். உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் பற்கள் பலவீனமடைகின்றன, இதன் விளைவாக வலி உண்டாகிறது. பல்வலியை போக்க சோளம் உதவுகிறது. ஏனெனில், இதில் பற்களை வலுப்படுத்தும் பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளன. (மேலும் வாசிக்க- பல் சொத்தை சிக்கல்
 • மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிக்கிறது (Overcomes Constipation): அஜீரணம் மலச்சிக்கல் பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள் சோள ரோட்டியை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். இதில் நல்ல அளவில் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, இதனால் மலச்சிக்கலை குணப்படுத்த முடிகிறது. இது மலச்சிக்கல் காரணமாக உண்டாகும் மூல நோயை தடுக்கிறது. (மேலும் படிக்கமூல நோய்க்கான சிகிச்சைகள் யாவை
 • இரத்தத்தை அதிகரிக்கிறது (Increases the blood): சோளத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது, இது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்கிறது. மேலும், இரத்த சோகை அபாயத்தை குறைக்கிறது. இரத்த சோகை உள்ளவர்கள் தங்கள் உணவில் சோளத்தை உட்கொள்ள வேண்டும். (மேலும் வாசிக்க- இரத்த சோகைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்)
 • முகப்பருவை நீக்குகிறது (Removes Pimples): பெரும்பான்மையான மக்கள் பருக்கள் மற்றும் முகப்பரு குறித்து கவலைப்படுகிறார்கள். இதற்கு சிகிச்சையளிக்க அவர்கள் பல்வேறு வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். முகப்பருக்கள், அழகைக் குறைக்கிறது. முகப்பருக்களை நீக்க சோள பேஸ்ட்டை தயார் செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்யவும். (மேலும் வாசிக்க- முகப்பருவுக்கான சிகிச்சைகள் யாவை
 • எலும்புகளை பலப்படுத்துகிறது (Strengthens the bone): கால்சியம் குறைபாடு பலவீனமான எலும்புகள் மற்றும் எலும்பு தொடர்பான வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. சோளத்தை உட்கொள்வதன் மூலம், எலும்புகளை பலப்படுத்த முடிகிறது. சோளத்தில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் இருப்பதால் இது எழும்புகளை பலப்படுத்துகிறது. இது கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸின் அச்சுறுத்தலை தடுக்கிறது. (மேலும் வாசிக்க- கீல்வாதத்திற்கான வீட்டு வைத்தியம்

சோளத்தின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of Sorghum in Tamil?) 

சோளத்தை அதிகளவில் உட்கொள்வதன் காரணமாக, ஆரோக்கியத்தில் சில மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும், அவை: 

 • ஒரு ஆராய்ச்சியின் கூற்றுப்படி, பலவீனமானவர்கள் சோளத்தை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் சோளத்தை ஜீரணிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாகும்.
 • பித்தம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் சோளத்தைத் தவிர்க்க வேண்டும். குல்கண்ட் மற்றும் சோளத்தை கலந்து மாவு தயாரித்து, அந்த மாவில் ரோட்டி செய்து சாப்பிடுங்கள். 
 • சோளத்திற்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இதை உட்கொள்ளக்கூடாது. நீங்கள் சோளத்தை கோதுமையுடன் கலந்து உட்கொள்ளலாம்.
 • சோளத்தின் நுகர்வு காரணமாக, ஏதேனும் முறைகேடு அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சினையை ஏற்படுத்தினால் சோளத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள். மேலும், ஒரு பொது மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். 
 • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சோளம் உட்கொள்வது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். 

சோளம் உட்கொள்வதன் காரணமாக, உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox