தினையின் நன்மைகள் | Benefits of bajra (millets) in Tamil

மார்ச் 8, 2021 Lifestyle Diseases 1155 Views

English हिन्दी Tamil

தினை என்பது ஒரு வகை தானியமாகும், இது முதன் முதலில் விலங்குகளுக்கு உணவாக வழங்கப்பட்டது. எனினும், தினையின் ஊட்டச்சத்து குணங்களைப் பற்றி அறிந்த பின்னர், மக்கள் இதனைத் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கினார்கள். தற்போது, பல நாடுகளும் தினையை நல்ல அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன. இதன் வளர்ச்சிக்கு அதிக நீர் தேவையில்லை என்பதால், வறண்ட காலநிலையிலும் இவை பயிரிடப்படுகின்றன. உலகம் முழுவதும் பல வகை தினைகள் பயிரடப்படுகின்றன. இந்தியாவில் தினை சாகுபடி குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் நடைபெறுகிறது. தினை பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பெரும்பாலும் மக்கள், தினை ரொட்டியைச் சாப்பிட விரும்புகிறார்கள். ஏனெனில், இது உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளை அதிகரிக்கவும் உதவுகிறது. இன்றையக் கட்டுரையில், ஊட்டச்சத்துகள் நிறைந்த தினையின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி விரிவாகக் கூறுகிறோம். 

  • தினையில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் மற்றும் தாதுக்கள் யாவை? (What are the nutrients and minerals found in bajra (millets) in Tamil?)
  • தினையின் நன்மைகள் யாவை? (What are the benefits of bajra (millets) in Tamil?)
  • தினையின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of bajra (millets) in Tamil?)

தினையில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் மற்றும் தாதுக்கள் யாவை? (What are the nutrients and minerals found in bajra (millets) in Tamil?)

தினை ஒரு சிறந்த ஊட்டச்சத்து உள்ளடக்கமாகும். இதில் ஆற்றல், கலோரிகள், நீரேற்றம் , புரதம், தாது நார், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்றவை உள்ளன.

தினையின் நன்மைகள் யாவை? (What are the benefits of bajra (millets) in Tamil?)

தினைக்கு பின்வரும் சுகாதார நன்மைகள் உள்ளன, அவை

  • முடி தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்துகிறது (cures hair related problems): முடி உதிர்தலை குணப்படுத்த, தினை ரொட்டியை உணவில் சேர்க்க வேண்டும். தினையில் உள்ள புரதச்சத்துகள் கூந்தலின் வேர்களை பலப்படுத்துகிறது. கூடுதலாக, தினையில் உள்ள மெக்னீசியம் வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும், இது கூந்தலில் உள்ள பொடுகு பிரச்சினையையும் குறைக்கிறது. சில ஆய்வுகளின் கூற்றுப்படி, தினை உடலுக்கு அதிக அளவில் புரதத்தை அளிக்கிறது மற்றும் முடியின் அழகை மேம்படுத்துகிறது. தினையை உட்கொள்வதன் மூலம், உங்கள் தலைமுடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாற்ற இயலும். (மேலும் வாசிக்க – முடி உதிர்வதற்கான காரணங்கள்
  • இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது (Improves cardiac health): இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். தினை, ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் சத்தான உணவாகும். இதில், நல்ல அளவில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. மேலும், இதனை உட்கொள்வதினால் இருதயம் தொடர்பான நோய்க்களின் ஆபத்து குறைகிறது. எனவே, தினை ரொட்டியை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் (Beneficial for Diabetes): நீரிழிவு நோயாளிகள் ஒரு முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். பெரும்பாலும் இந்த நோயாளிகளுக்கு மலச்சிக்கல் ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம், இவர்களின் உணவில் நார்ச்சத்து இல்லாததே ஆகும். எனவே, தினை ரொட்டியை உட்கொள்ள வேண்டும். தங்களின் இரவு உணவில் காய்கறிகளுடன் கோதுமை ரொட்டிக்கு பதிலாக தினை ரோட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். இது தவிர, ஒவ்வொரு மாதமும் தங்களின் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக்க வேண்டும் மற்றும் இனிப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • கொழுப்பைக் குறைக்கிறது (Reduces cholesterol): கொழுப்பின் அதிகரிப்பு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இதன் விளைவாக, இருதயம் தொடர்பான சிக்கல்களின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, இதனைத் தவிர்க்க தினையை உட்கொள்ள வேண்டும். இதில், நல்ல அளவில் நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. சில ஆராய்ச்சிகளின் கூற்றின் மூலம், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் ஃபைபர் உதவுகிறது என்று கண்டறியப் பட்டுள்ளது. எண்ணெய் பொருட்களின் உட்கொள்ளல் கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. எனவே, தினை ரொட்டியை உட்கொண்டு கொழுப்பின் அளவைக் குறையுங்கள். மேலும், கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. 
  • புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer): புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள் காணப்படும்போதே, நோயாளிகள் உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும். மார்பக புற்றுநோயின் சிக்கலை குறைக்க பெண்கள் தங்கள் உணவில் தினை ரொட்டியை சேர்க்க வேண்டும். இது மார்பக புற்றுநோயின் சிக்கலை நீக்குகிறது மற்றும் நல்ல அளவில் நார்ச்சத்துகளைக் கொண்டுள்ளது. மார்பக பிரச்சினை உள்ள பெண்களும் தங்களின் உணவில்  தினை ரொட்டியை எடுத்துக் கொள்ள வேண்டும். (மேலும் வாசிக்க – மார்பக புற்றுநோயிக்கான சிகிச்சைகள்)  
  • ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்கிறது (Treats asthma): ஆஸ்துமா என்பது சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் ஓர் நோயாகும், இதனால் பாதிக்கப்படும் நபர்கள் சுவாசிப்பதில் சிரமத்தை உணர்கிறார்கள். இந்த சிக்கல்களை குணப்படுத்த, தினசரி தினையை உட்கொள்ள வேண்டும். தினை ஆஸ்துமா சிக்கலைத் தடுக்கிறது. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் உணவில் தினையைச் சேர்ப்பதன் மூலம், ஆஸ்துமா சிக்கல் நாளடைவில் மெதுவாக குணமடைகின்றது, என சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் கூறுகின்றன. எனவே, ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் தினையை எடுத்துக் கொள்ள வேண்டும். 
  • உடல் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கிறது (Effective for weight loss): தற்போதைய சூழலில், மக்கள் உடல் பருமன் சிக்கலின் காரணமாக கலங்குகிறார்கள். இந்த சிக்கலில் இருந்து விடுபட பல்வேறு வகையான உணவுத் திட்டங்களை உருவாக்குகிறார்கள். இந்த உணவுத் திட்டங்களில் தினை மிக முக்கிய பங்கினை வகிக்கிறது. இதில், நல்ல அளவில் நார்ச்சத்து உள்ளது, இது கொழுப்பைக் குறைக்க வழிவகுக்கிறது. மற்றும் கலோரிகளைக் குறைக்கிறது. உடல் எடையை சமப்படுத்த உதவுகிறது. நீங்கள் உங்களின் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், நிச்சயமாக உங்கள் உணவில் தினையை சேர்த்துக் கொள்ள வேண்டும். (மேலும் படிக்க – பார்லி)

தினையின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of bajra (millets) in Tamil?)

  • தினையில் பல நன்மைகள் உள்ளன. எனினும், இதன் அதிகப்படியான உட்கொள்ளல் சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். 
  • தினையின் அதிகபடியான உட்கொள்ளல் தைராய்டு மற்றும் கோயிட்ரை விளைவிக்கிறது. ஏனெனில் தினையில் அயோடினை உறிஞ்சும் சில பொருட்கள் உள்ளன. 
  • தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்கள் தினை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது தைராய்டு பிரச்சினைகளை அதிகரிக்கிறது. 

தினை நுகர்வின் காரணமாக உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha