கெய்பாலின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் | Benefits and side effects of Kayphal in Tamil
பிப்ரவரி 10, 2021 Lifestyle Diseases 753 Viewsமிர்டஸ் கம்யூனிஸ் என்பது ஏராளமான சுகாதார நன்மைகளைக் கொண்ட ஒரு தாவரமாகும், இது பொதுவாக கெய்பால் மற்றும் மிர்ட்டல் என்றழைக்கப்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளில் கெய்பால் பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. கெய்பால் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சமன் செய்து நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இது உடலில் உண்டாகும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. சிறுநீரக தொடர்பான நோய்கள் மற்றும் புற்றுநோயின் அச்சுறுத்தலைத் தடுக்கிறது. இந்தப் பதிவின் மூலம் கெய்பாலின் நன்மைகள் குறித்து விரிவான தகவல்களை விளக்குகிறோம்.
- கெய்பால் என்றால் என்ன? (What is Kayphal in Tamil?)
- கெய்பாலின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What is the nutritional importance of Kayphal in Tamil?)
- கெய்பாலின் நன்மைகள் யாவை? (What are the benefits of Kayphal in Tamil?)
- கெய்பாலின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of Kayphal in Tamil?)
கெய்பால் என்றால் என்ன? (What is Kayphal in Tamil?)
கெய்பால், இது பழமையான தாவரங்களில் ஒன்றாகும். இதன் மருத்துவ முக்கியத்துவம் காரணமாக நாடு முழுவதும் பயிரிடப்படுகிறது. இந்த செடியின் உயரம் 4 முதல் 5 மீட்டர் உயரமுள்ள ஒரு மரத்தை ஒத்திருக்கிறது. இதன் இலைகளும் பட்டைகளும் சில மருத்துவ எண்ணெகளை உற்பத்தி செய்ய பயன்படுகிறது. பல நோய்களுக்கான சிகிச்சையில், இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. (மேலும் வாசிக்க- அஸ்வகந்தாவின் நன்மைகள்)
கெய்பாலின் ஊட்டச்சத்து முக்கியத்துவம் என்ன? (What is the nutritional importance of Kayphal in Tamil?)
கெய்பாலில் ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மருத்துவ பண்புகளைக் கொண்ட கரிம சேர்மங்களைக் கொண்டுள்ளது. கெய்பால் செடியை பொதுவாக அற்புதமான உடல்நல பாதிப்புகளைக் கொண்ட ஒரு செடி என்றழைக்கின்றனர். கெய்பாலின் உட்கொள்ளல் உடலை பலப்படுத்துகிறது. (மேலும் படிக்க- இஞ்சியின் நன்மைகள் என்ன?)
கெய்பாலின் நன்மைகள் என்ன? (What are the benefits of Kayphal in Tamil?)
கெய்பால் நிறைய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது, அவை:
- இதயத்தை வளர்க்கிறது (Nourishes the heart): இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க கெய்பால் உதவுகிறது. இது உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கெய்பால் இதய தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. (மேலும் படிக்க – இதய பிரச்சினைகளுக்கான காரணங்கள்)
- நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது (Enhances the immune system): கெய்பால் உடலை நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. கெய்பாலுள்ள ஊட்டச்சத்து கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதன் மூலம் உடலை பலப்படுத்துகிறது. (மேலும் வாசிக்க- நோயெதிர்ப்பு சக்தியை எவ்வாறு மேம்படுத்துவது)
- புற்றுநோய் சிகிச்சையில் பயனுள்ளது (Treats cancer): கெய்பாலில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மைரிசெடின் மற்றும் கேடசின் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு கெய்பால் நன்மை பயக்கிறது, என்று சில ஆய்வுகள் நிரூபிக்கின்றன. புற்றுநோயின் அறிகுறிகள் புறக்கணிக்கப்படக்கூடாது மற்றும் கூடிய விரைவில் சிகிச்சையைப் பெற உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும். (மேலும் வாசிக்க- மார்பக புற்றுநோய்க்கான சிகிச்சை)
- நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது (Controls diabetes): நீரிழிவு நோய்க்கு ஒருபோதும் முழுமையாக சிகிச்சையளிக்க முடியாது, எனினும் அதை கட்டுப்படுத்த இயலும். நீரிழிவு நோய் இரண்டு வகைப்படும், அவை: வகை 1 மற்றும் வகை 2. நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க கெய்பால் பயன்படுகிறது. இது இரத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. எனினும், ஒரு மருத்துவரை அணுகிய பின்னரே இதனை எடுத்துக்கொள்ள வேண்டும். (மேலும் படிக்க- நீரிழிவு நோய்க்கான காரணங்கள்)
- சரும அமைப்பை மேம்படுத்துகிறது (Enhances skin quality): நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம், கெய்பால் சருமத்தை அழகுபடுத்துகிறது. கெய்பால் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் உள்ளன, இவை முகப்பருவைக் குறைத்து சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. (மேலும் வாசிக்க- பருவமழையின் போது சருமத்தை எவ்வாறு பராமரிப்பது)
கெய்பாலின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of Kayphal in Tamil?)
கெய்பால் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. எனினும், இதன் கட்டுப்பாடற்ற நுகர்வு பின்வரும் விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. அவை:
- கெய்பாலின் அதிகப்படியான நுகர்வு வயிற்று வலி மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தக்கூடும்.
- கெய்பால் எண்ணெயை, பிற எண்ணெய்களுடன் கலந்து பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
- கெய்பால் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, அவர்கள் கெய்பால் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். (மேலும் படிக்க – அண்டவிடுப்பு பரிசோதனையின் நன்மைகள்)
கெய்பால் உட்கொள்வதினால் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையை நீங்கள் சந்தித்தால், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
சென்னையில் சிறந்த பொது மருத்துவர்