வேம்பின் நன்மைகள் | Benefits of neem in Tamil

டிசம்பர் 1, 2020 Lifestyle Diseases 2565 Views

English हिन्दी Tamil

வேம்பு ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது? (Why neem so healthy in Tamil?)

  • பழங்காலத்திலிருந்தே பல்வேறு வகையான மூலிகைகள் தயாரிக்க வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேப்பை  Indian Lilac  என்றும் கூறுவர்.
  • ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி போன்ற  மருந்துகளில் வேம்பு பயன்படுத்தப்படுகிறது. வேம்பு  அனைத்து நோய்களையும் தடுக்கும், என்று  வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் அனைத்து நோய்களையும் குணபடுத்தும்  என்பதாகும்.
  • இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகிறது, இதனால்  ஒவ்வொரு மொழியிலும்  வேப்பத்தை வெவ்வேறு  பெயர்களில்  வழங்குகின்றனர், அவை : மராத்தியில் கடுலிம்ப், உ.பி. மற்றும் பீகாரில் வேம்பு, மலையாளத்தில் அரு வேப்பிலா, தமிழில் வேப்பிலை, தெலுங்கில் வேம், குஜராத்தியில் லிம்பா, கன்னடத்தில்  பெவு , பெங்காலியில்  நிம்பா பாடா.
  • வேம்பில் ஆன்ட்டி  செப்டிக் மற்றும்  ஆன்ட்டி  வைரல் பண்புகள் உள்ளன. மேலும், வேம்பு பல நோய்களின் அறிகுறிகளைக் குணப்படுத்துகிறது. இதனால் வேம்பினை  மர மருந்தகம் என்றும் அழைக்கின்றனர்.

 

  • வேம்பின் நன்மைகள் என்ன? (What are the benefits of neem in Tamil?)
  • வேப்பத்தினால் ஏற்படும் தீர்வுகள் என்ன? (What are the treatments of neem in Tamil?)

வேம்பின் நன்மைகள் என்ன? (What are the benefits of neem in Tamil?)

  • புற்றுநோய் நோயைத் தடுப்பதில் வேம்பின் பயன்பாடு (Neem prevents Cancer)- புற்றுநோயை குணப்படுத்துவதில் வேம்பு பெரிதும் உதவுகிறது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பைக் குறைக்க வேப்பம் பழங்கள், விதைகள், இலைகள், பூக்கள்  என அனைத்தும் உதவுகிறது என்று புற்றுநோய் நிறுவனம் கூறுகின்றது.
  • தலைமுடியில் பேனை  குறைப்பதில் (Reducing lice in hair)- வேம்பில் உள்ள  பூச்சிக்கொல்லி பண்புகள் முடியில் உள்ள பேன் மற்றும் பொடுகு போன்றவற்றை எளிதில் நீக்குகிறது. கூந்தலுக்கு வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் கேசத்தில் உண்டாகும் அரிப்பு பிரச்சினையை தீர்க்க இயலும்.
  • வேப்ப இலைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of eating neem leaves) வேப்ப இலைகளை உட்கொள்வது இரத்தத்தை தூய்மையாக்குகிறது மற்றும் தீங்கு விளைவிக்கும் வைரஸ்களிலிருந்து விடுபட உதவுகிறது.
  • தோல் பாதுகாப்பில் வேப்பத்தின் பயன்பாடு (Skin Protection) வேப்ப இலைகள் தோல் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் நீக்குகிறது மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கிறது.
  • நீரிழிவு நோய் (To treat Diabetes) நீரிழிவு நோயைக் (diabetes) கட்டுப்படுத்த வேம்பு இலைகளின் சாற்றை குடிப்பது பயனுள்ளதாக அமையும்.
  • நகத்தில் உண்டாகும் நோய்த்தொற்றுகளை நீக்க (Removes Nail infection)- வேப்ப இலைகளில் ஆன்ட்டி  செப்டிக் மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள்  பண்புகள் உள்ளன, இது பாக்டீரியாக்களைக் அழிக்கிறது. மேலும்,  டோனல் ஃப்பன்ங்கஸையும் குணப்படுத்துகிறது.
  • வேப்ப நீரில்  குளிப்பது (Useful in bathing)-  வேப்ப இலைகளை சேர்த்து  கொதிக்க வைத்த நீரில் குளிப்பதன் மூலம் பாக்டீரியல்  தொற்றுகள் ஏற்படாது. மேலும், தோல் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். வேப்பத்தை காப்ஸ்யூல்களாகவும், தூளாக்கியும் பயன்படுத்தலாம்.
  • கீல்வாதத்தில் (Beneficial for arthritis)- குறிப்பாக முடக்கு வாதத்தை குணப்படுத்தும் ஒரு மூலிகை மருந்தாக வேம்பு இருக்கின்றது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
  • வயிற்றுப் புழுக்களை நீக்குவதில் (Removing stomach worms)- வேம்பிலுள்ள  கசப்பு காரணமாக, பாக்டீரியாக்கள் இறக்கின்றது. 1 அல்லது 2 வேப்ப இலைகளை  ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள், இதனால்  வயிற்றிலுள்ள கிருமிகள் சாகும்.

வேப்பத்தினால் ஏற்படும் தீர்வுகள் என்ன? (What are the treatments of neem in Tamil?)

  • வேப்ப எண்ணெய் கொண்டு  மசாஜ் செய்வதனால் மூட்டுகள் மற்றும் எலும்புகளின் வீக்கத்தை குறைக்க இயலும். இதன் காரணமாக கீல்வாதம் பிரச்சினை நீங்குகிறது. 
  • மஞ்சள் காமாலை பிரச்சினை பித்தப்பையில் இருந்து வெளிவரும் பித்தத்தின் அடைப்பினால்  உண்டாகிறது. இதிலிருந்து விடுபட உலர்ந்த இஞ்சியுடன் வேப்ப இலை சாறு கலந்து  குடிக்கவும்.   
  • அதிக உணவுகளை உட்கொண்டதன்  காரணமாக நாட்பட்ட காய்ச்சல் மற்றும் உயர்  மண்ணீரல் (high spleen) போன்ற பாதிப்புகள்  ஏற்பட்டால்,  தண்ணீரில் வேப்ப இலை பொடியை   கலந்து குடிக்கவும்.
  • உடலுறவின்  போது  பலவீனமாக இருக்கும் நபர்கள்  வேப்பம் உட்கொள்ளைக் குறைக்க வேண்டும்.
  • பாதங்கள் மற்றும் உள்ளங்கால்களின் உண்டாகும்  எரிச்சலை நீக்க, அப்பகுதியில்  வேப்ப இலைகளை அரைத்துத் தடவுங்கள்.
  • உடல்  சூட்டை குறைக்க நீரில் வேப்பங்கொட்டையுடன்  சர்க்கரையை  கலந்து  அந்த சாற்றை குடிக்கவும்.
  • பெரியம்மை நோயால்  பாதிக்கப்பட்டவர்களின் படுக்கையில் வேப்ப இலைகளை பரப்ப வேண்டும், இதன் காரணமாக பூச்சிகள் மற்றும் பாக்டீரியாக்கள் உடலிலிருந்து வெளியேறி நோயை விரைவாக நீங்குகிறது.

வேப்ப இலை உட்கொள்ளல் அல்லது  அதன் சாறு குடிப்பதன் மூலம் உங்களுக்கு உடல்நலம் தொடர்பான ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக உங்கள் அருகிலுள்ள மருத்துவரைத் தொடர்புகொள்ளவும். தேவையானால் இன்றே  ஒரு  பொது  மருத்துவரைத் தொடர்பு (General Physician) கொள்ளுங்கள். 


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha