கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்கள் | Causes of calcium deficiency in Tamil

பிப்ரவரி 11, 2021 Bone Health 2590 Views

English हिन्दी Bengali Tamil

கால்சியம் என்பது உயிர்வாழ்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் ஒரு கனிமமாகும். இது உடலுக்கு கட்டமைப்பு ஆதரவை வழங்குகிறது மற்றும்  எலும்புகளை உருவாக்குகிறது. நம் உடலில் உள்ள 99 % கால்சியம் சத்து, நம் எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளன. எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், ஏராளமான குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைச் செய்யவும் நம் உடலுக்கு கால்சியம் தேவைப்படுகிறது. உடல் தசைகள் நகரவும், மூளையில் இருந்து வெவ்வேறு உடல் பாகங்களுக்கு செய்திகளை நரம்புகளின் மூலம்  அனுப்பவும் கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் பற்றாக்குறை அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்றது.  கால்சியம் குறைபாடுகளின் காரணமாக நம் உடலில் ரிக்கெட்ஸ், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற நோய்களை ஏற்படுகின்றன. இது வளர்சிதை மாற்றத்திலும், பிற செயலிழப்புகளிலும் குறுகிடுகின்றது. கால்சியம் குறைபாட்டின் சிக்கல் குழந்தைகள் மத்தியில் பொதுவானதாகும். கால்சியம் குறைபாடு உடைய மக்களுக்கு உடல் வலி, சோர்வு, மனச்சோர்வு, பல் இழப்பு, தசை வலி மற்றும் கை, கால்களில் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. பொது மருத்துவர்கள் கால்சியம் குறைபாட்டை ஆராய்ந்து கால்சியம் நிறைந்த உணவுகளையும் , மருந்துகளையும் உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர். மற்றும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே கால்சியம் சப்ளிமெண்ட்களை எடுக்க வேண்டும். இன்றையப் பதிவில் கால்சியம் குறைபாடு குறித்த சில முக்கியமான தகவல்களைப் பெறுவோம்.

  • கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை? (What are the causes of calcium deficiency in Tamil?)
  • கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of calcium deficiency in Tamil?)
  • கால்சியம் குறைபாட்டிற்கான சிகிச்சை என்ன? (What are the treatments for calcium deficiency in Tamil?)
  • கால்சியம் குறைபாட்டை எவ்வாறு தடுப்பது? (How to prevent calcium deficiency in Tamil?)

கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை? (What are the causes of calcium deficiency in Tamil?)

கால்சியம் குறைபாட்டை பல காரணிகள்  ஏற்படுத்தக்கூடும். அவை:

  • கால்சியம் குறைபாட்டிற்கு மிக முக்கிய காரணம் உட்கொள்ளும் உணவில் கால்சியம் பற்றாக்குறையாகும். 
  • அதிகப்படியான உடல் செயல்பாடுகள் மற்றும் அதீத  உடற்பயிற்சி கால்சியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. 
  • வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் வைட்டமின் டி குறைபாடுகளும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. 
  • குளிர்பானங்களை கட்டுப்பாடில்லாமல் உட்கொள்வது கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. 
  • விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால்,  மாதவிடாய் நிறுத்தத்தில் கால்சியம் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். 
  • அதிக அளவு கொழுப்பு, சர்க்கரைகள் மற்றும் புரதங்களின் உட்கொள்ளல் கால்சியம் குறைபாட்டை விளைவிக்கின்றன. தேநீர், காபி, குளிர்பானம், உப்புக்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. (காபியின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி படிக்கவும்
  • மாற்றியமைக்கப்பட்ட தானியங்கள் (modified grains) உடலில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும்.

கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of calcium deficiency in Tamil?)

பல்வேறு வகையான உடல் செயல்பாடுகளுக்கு கால்சியம் தேவைப்படுகிறது. இதன் பற்றாக்குறை பல்வேறு வகையான அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. அவற்றில் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன, அவை:

கால்சியம் குறைபாட்டிற்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for calcium deficiency in Tamil?)

  • கால்சியம் குறைபாட்டிற்கான சிகிச்சை மிகவும்  எளிதானதாகும். கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். சில சமயங்களில், மருத்துவர்கள் சில கூடுதல் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடுகள் இருக்கும் போது. 
  • தினசரி உணவில் கால்சியத்தை சிறிய அளவில் உட்கொள்ளுங்கள். கால்சியத்தை உறிஞ்ச  வைட்டமின் டி பயனுள்ளதாக இருக்கிறது.
  • மருத்துவரின் பரிந்துரைப்பு இல்லாமல் கால்சியம் சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், மருத்துவரின் ஆலோசனையின்றி, கால்சியத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக  எடுத்துக்கொள்வது சிறுநீரக கற்கள் போன்ற குறிப்பிடத்தக்க வியாதிகளை ஏற்படுத்தக்கூடும். 
  • கால்சியம் பாஸ்பேட், கால்சியம் கார்பனேட் மற்றும் கால்சியம் சிட்ரேட் போன்ற  கால்சியம் சப்ளிமெண்ட்கள் கால்சியம் குறைபாடுகளை நீக்க பயனுள்ளதாக அமைகிறது. 
  • சில அரிதான சந்தர்ப்பங்களில், உடலுக்கு கால்சியத்தை உடனடியாக வழங்க மருத்துவர்கள் ஊசியின் மூலம் உடலுக்குள் கால்சியத்தை செலுத்துகின்றனர்.
  • சிகிச்சை தொடங்கிய சில வாரங்களுக்குள் அறிகுறிகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. (வைட்டமின் டியின் நன்மைகளைப் பற்றி படிக்கவும்)

கால்சியம் குறைபாட்டை எவ்வாறு தடுப்பது? (How to prevent calcium deficiency in Tamil?)

  • வழக்கமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கால்சியம் குறைபாட்டைத் தடுக்க இயலும்.
  • கால்சியம் நிறைந்த உணவுகளை, அதாவது சீஸ், பாலாடைக்கட்டிகளை சாப்பிடுங்கள் மற்றும் பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 
  • வைட்டமின் டி யை சூரிய ஒளியில் இருந்தும், ஆரோக்கியமான சீரான உணவுகளிலிருந்தும் பெறுங்கள்.
  • கால்சியம் குறைபாட்டைத் தடுக்க உணவில் குறைந்தளவிலேயே உப்பை உட்கொள்ளுங்கள். 
  • புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள். 
  • உடலில் கால்சியத்தை அதிகரிக்க கீரை  ப்ரோக்கோலி, அத்தி, உலர் பழங்கள் மற்றும் பச்சை  காய்கறிகளை சாப்பிடுங்கள்.

உங்களுக்கு கால்சியம் குறைபாடு இருந்தால், உடனடியாக உட்சுரப்பியல் நிபுணரைத் (Endocrinologist) தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த உட்சுரப்பியல் நிபுணர்

டெல்லியில் சிறந்த உட்சுரப்பியல் நிபுணர்

சென்னையில் சிறந்த உட்சுரப்பியல் நிபுணர்

பெங்களூரில் சிறந்த உட்சுரப்பியல் நிபுணர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha