மலேரியாவிற்கான கரணங்கள் | Causes of Malaria in Tamil
டிசம்பர் 11, 2020 Lifestyle Diseases 1535 Viewsஉலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மலேரியா நோய் 2013 ஆண்டில், 19.7 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தாக்கியுள்ளது. இதன் காரணமாக 5 லட்சத்து 83 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகமாக உள்ளனர். மலேரியா நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏப்ரல் 25 உலக மலேரியா தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றையப் பதிவில், மலேரியாவிற்கான கரணங்கள் குறித்து சில தகவல்களைக் காண்போம்.
- மலேரியா என்றால் என்ன? (What is malaria in Tamil?)
- மலேரியாவிற்கான கரணங்கள் யாவை? (What are the causes of malaria in Tamil?)
- மலேரியாவின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of malaria in Tamil?)
- மலேரியாவிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for malaria in Tamil?)
- மலேரியாவை எவ்வாறு தடுப்பது? (How to prevent malaria in Tamil?)
மலேரியா என்றால் என்ன? (What is malaria in Tamil?)
மலேரியா என்பது ஒரு பெண் அனாபிலேஸ் கொசு கடிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு நோயாகும். இந்த கொசுக்கள் மழைக்காலங்களில் அதிகமாக உற்பத்தியாகின்றன. ஏனெனில், மழை நீர் பல நாட்கள் சேமித்து வைக்கப்படுவதினால், இந்த நீர் அழுக்காகி மாசுபடுகிறது. இங்குதான் மலேரியா கொசு உருவாகிறது. இந்த வகை கொசு கடிப்பதன் விளைவாக ஒருவருக்கு மலேரியா காய்ச்சல் ஏற்படுகின்றது. ஒரு பெண் அனாபிலேஸ் கொசு கடிப்பதன் மூலம் செலுத்தும் பாக்டீரியா மக்களின் இரத்த ஓட்டத்தில் நுழைந்து இரத்த செல்களை பாதிக்கிறது மற்றும் உடல்நிலை குறைவை ஏற்படுத்துகின்றது.
மலேரியாவிற்கான கரணங்கள் யாவை? (What are the causes of malaria in Tamil?)
- மலேரியாவுக்கு முக்கிய காரணம் மலேரியா காய்ச்சலை ஏற்படுத்தும் பெண் அனாபிலேஸ் கொசு.
- இந்தியாவில் பெரும்பாலான மலேரியா நோய்த்தொற்றுகள் பிளாஸ்மோடியம் விவாக்ஸ் மற்றும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.
- பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம் (Plasmodium Falciparum) இதில் மிகவும் ஆபத்தானதாகும். இந்த வகை தொற்று உண்டாகும் நபர் இறக்க நேரிடுகிறது.
- மலேரியா நோய் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து கொசுவுக்கு பரவுகிறது. மேலும், இந்த மலேரியா கொசு ஆரோக்கியமான நபரைக் கடிப்பதன் மூலம் மலேரியா பாக்டீரியா அவரது உடலில் நுழைகிறது.
- மலேரியா நோய்த்தொற்று, பரிசோதனை செய்யாத இரத்த பரிமாற்றம் மற்றும் மலேரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியைப் பயன்படுத்துவதன் மூலமும் பரவுகிறது.
- மலேரியா நோயால் கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டால், அந்தப் பெண்ணிடம் இருந்து குழந்தைக்கும் மலேரியா தொற்று ஏற்படுகிறது.
மலேரியாவின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of malaria in Tamil?)
மலேரியாவுக்கு பல அறிகுறிகள் உள்ளன, அனைத்து அறிகுறிகளும் ஒரே நோயாளியில் காணப்படுவதில்லை, அவை:
- நோய்வாய்ப்படுவது.
- காய்ச்சல்.
- குமட்டல்.
- சுவாசிப்பதில் சிரமம்.
- பசியிழப்பு.
- தலைவலி.
- சளி.
- உடல் குளிர்ச்சியாக உணர்வது.
- வயிற்றுப்போக்கு.
- சோர்வு.
- தலைச்சுற்றல். (மேலும் படிக்க – தலைச்சுற்றல் ஏன் உண்டாகிறது மற்றும் தலைச்சுற்றலுக்கான சிகிச்சை)
மலேரியாவிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for malaria in Tamil?)
- மலேரியா நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன், மருத்துவர்கள் அதன் அறிகுறிகளைக் கண்டறிய முதலில் இரத்தப் பரிசோதனையைப் பரிந்துரைக்கிறார்.
- மருத்துவர்கள் மூன்று வழி முறைகளைக் கொண்டு மலேரியாவை பரிசோதனைக்கின்றனர், அவை:
- நுண்ணிய பரிசோதனை
- ரேபிட்ன்டிஜென் பசரிசோதனை
- மலேரியா ஆர்.டி.எஸ்
இந்த பரிசோதனைகளில் மலேரியாவின் சில அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவர் சில மருந்துகளை பரிந்துரைக்கிறார், அவை: குவினின், மெஃப்ளோகுவினின், டாக்ஸிசைக்ளின் போன்றவையாகும்.
மலேரியாவை எவ்வாறு தடுப்பது? (How to prevent malaria in Tamil?)
உடலில் மலேரியா காய்ச்சல் வேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.
- உங்களுக்கு ஏற்கனவே மலேரியா காய்ச்சல் ஏற்பட்டு வேகமாக அதிகரித்து வருகிறதென்றால், இரத்தத்தை மீண்டும் ஒரு முறை பரிசோதிக்க வேண்டும்.
- வீட்டைச் சுற்றி அழுக்கு நீர் குவிய அனுமதிக்காதீர்கள், தினமும் சுத்தம் செய்யுங்கள். இதனால், கொசு உற்பத்தி குறைந்து மலேரியாவின் ஆபத்துகள் குறைகிறது.
- மலேரியா காய்ச்சலில், நோயாளிக்கு ஆரஞ்சு சாறு கொடுப்பது மிகவும் நன்மை பயக்கிறது.
- உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது, துண்டு போர்த்தி உடலிருந்து வியர்வையை வர வைக்க வேண்டும்.
- மலேரியாவுக்கான மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்பு இல்லாமல் தாமாக எடுத்துக் கொள்ள கூடாது.
நீங்கள் மலேரியா பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விரும்பினால், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)