கொலோனோஸ்கோபி ஏன் செய்யப்படுகிறது | Why is colonoscopy done in Tamil
டிசம்பர் 25, 2020 Lifestyle Diseases 2062 ViewsEnglish हिन्दी Bengali Tamil العربية
கொலோனோஸ்கோபியின் பொருள் (Meaning of Colonoscopy)
கொலோனோஸ்கோபி என்பது, பெருங்குடல் (colon) மற்றும் மலக்குடலில் ஏதேனும் கோளாறுகள் உள்ளனவா என்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு செயல்முறையாகும். இரைப்பைக் குடலியல் நிபுணர்களே (Gastroenterologists) கொலோனோஸ்கோபி மதிப்பீட்டைச் செய்யும் திறம் கொண்டவர்கள். கொலோனோஸ்கோபியின் போது நோயாளின் ஆசனவாய் வழியாக அவரின் குடலுக்குள் நான்கு அடி நீளம் உள்ள ஒரு நெகிழ்வான குழாய் செலுத்தப்படுகின்றது, இது கொலோனோஸ்கோபி குழாய் என்று அழைக்கப்படுகிறது. கொலோனோஸ்கோபி குழாயில் ஒரு சிறிய கேமரா மற்றும் ஒரு விளக்கு பொருத்தப்பட்டுள்ளது, இதன் உதவியுடன் நோயாளியின் பெருங்குடலுக்குள் உள்ளவற்றை மருத்துவர்கள் நன்றாக பார்க்க முடிகிறது. பெருங்குடல் அல்லது மலக்குடலில் உள்ள பாலிப்ஸ் மற்றும் சிக்கல்களை உண்டாக்கும் பிற வகை திசுக்களையும் கொலோனோஸ்கோபியின் உதவியுடன் அகற்ற இயலும். மேலும், கொலோனோஸ்கோபி நடைமுறையின் போது அகற்றப்படும், இந்த திசுக்களை செகரித்து நிபுணர்கள் ஆய்வகங்களில் பரிசோதிக்கின்றனர். இன்றைய கட்டுரையில் கொலோனோஸ்கோபி ஏன் செய்யப்படுகிறது என்பது பற்றியத் தகவல்களை விரிவாகக் கூறுகிறோம்.
- கொலோனோஸ்கோபி ஏன் செய்யப்படுகிறது? (Why is colonoscopy done in Tamil?)
- கொலோனோஸ்கோபி எவ்வாறு செய்யப்படுகிறது? (How is colonoscopy done in Tamil?)
- கொலோனோஸ்கோபிக்கு முன் (Before colonoscopy in Tamil)
- கொலோனோஸ்கோபிக்குப் பிறகு (After colonoscopy in Tamil)
- கொலோனோஸ்கோபியின் அபாயங்கள் என்ன? (What are the risks in colonoscopy in Tamil?)
- கொலோனோஸ்கோபியின் முடிவுகள் என்ன? (What are the results of colonoscopy in Tamil?)
கொலோனோஸ்கோபி ஏன் செய்யப்படுகிறது? (Why is colonoscopy done in Tamil?)
பின்வரும் சிக்கல்களுக்கு கொலோனோஸ்கோபி பரிந்துரைக்கப்படுகிறது, அவை:
- குடல் பிரச்சினைகளை மற்றும் வயிற்று வலி, மலக்குடல் இரத்தப்போக்கு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற குடல் பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகளைக் கண்டறிய கொலோனோஸ்கோபி செய்யப்படுகிறது.
- 50 வயதைத் தாண்டிய பெரியவர்கள் ஆரோக்கியமாக இருப்பினும், வருடத்திற்கு ஒரு முறை பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனையை செய்ய மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகின்றனர். பெருங்குடல் புற்றுநோய்க்கான பரிசோதனைகளில் கொலோனோஸ்கோபி ஒரு முக்கிய செயல்முறையாகும்.
- பெருங்குடலுக்குள் உள்ள பாலிப்களை பரிசோதிக்க, மருத்துவர்கள் கொலோனோஸ்கோபியை பரிந்துரைக்கின்றனர். இந்த பரிசோதனையின் மூலம் பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிய முடிகிறது.
கொலோனோஸ்கோபி எவ்வாறு செய்யப்படுகிறது? (How is colonoscopy done in Tamil?)
- கொலோனோஸ்கோபி பரிசோதனையின் போது, நோயாளி மருத்துவமனையின் உடையை அணிய வேண்டும். பெரும்பாலும், கொலோனோஸ்கோபியின் போது நோயாளிக்கு பொது மயக்க மருந்து வழங்கப்படுகிறது. எனினும் சில சந்தர்ப்பங்களில், நோயாளிக்கு வலி நிவாரணி மருந்துகள் அல்லது வலி நிவாரணி ஊசிகள் வழங்கப்படுகின்றன. பரிசோதனையின் போது, நோயாளியின் மலக்குடலுக்குள் ஒரு கொலோனோஸ்கோப்பை மெதுவாக செலுத்துகின்றனர். மேலும், இந்த கொலோனோஸ்கோப் குடலின் முடிவு வரை நீடிக்கிறது.
- இந்தக் கருவியில், பெருங்குடலுக்குள் காற்று அல்லது கார்பன்டைஆக்சைடை செலுத்தும் ஒரு குழாயும் இருக்கிறது. காற்று அல்லது கார்பன் டை ஆக்சைடுகளின் உதவி கொண்டு பெருங்குடல் உயர்த்துப்படுகிறது, இதன் விளைவாக பெருங்குடலின் சுவர்களை நன்றாக காண முடிகிறது. இந்த செயல்பாட்டின் போது, அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுகிறது. கொலோனோஸ்கோப்பின் முடிவில் பொருத்தப்பட்டுள்ள கேமராவின் உதவியைக் கொண்டு பெருங்குடலின் உள் படத்தை மருத்துவர்கள் கண்டு சிகிச்சையளிக்கின்றனர்.
- மேலும், இந்த கருவி ஆய்வகப் பரிசோதனைக்காக பெருங்குடலின் சில திசுக்களை அகற்றவும் உதவுகிறது. ஒரு கொலோனோஸ்கோபி பரிசோதனை செய்ய சுமார் 35 முதல் 60 நிமிடங்கள் ஆகிறது.
கொலோனோஸ்கோபிக்கு முன் (Before colonoscopy in Tamil)
கொலோனோஸ்கோபிக்கு முன், நோயாளியின் குடலை நன்கு சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றது. பெருங்குடலை காலியாக்க வைத்திருக்க, பின்வரும் ஆலோசனையை மருத்துவர்கள் வழங்குகின்றனர், அவை:
- கொலோனோஸ்கோபிக்கு முன், நோயாளி திடமான உணவுகளை உட்கொள்ள கூடாது. பால் அல்லது கிரீம் சேர்க்காத தேநீர், காபி போன்ற திரவங்களை எடுத்துக் கொள்ளலாம். நோயாளி கொலோனோஸ்கோபி பரிசோதனைக்கு முந்தைய நள்ளிரவுக்குப் பிறகு எந்த உணவு பொருட்களையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது.
- பெருங்குடலை சுத்தம் செய்ய, பரிசோதனைக்கு முந்தைய இரவில் சில மருந்துகளை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்
- பரிசோதனைக்கு முந்தைய இரவில் நோயாளிகளுக்கு இனிமா வழங்கப்படுகிறது. பெரும்பாலும், இது கீழ் பெருங்குடலை சுத்தம் செய்ய பயனுள்ளதாக அமைகிறது.
- நோயாளிகள் ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருந்தால், கொலோனோஸ்கோபி பரிசோதனைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு மருந்துகளை உட்கொள்வதை நிறுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
- பிபி மற்றும் நீரிழிவு நோயாளியாகள் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டுமாயின் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
கொலோனோஸ்கோபிக்குப் பிறகு (After colonoscopy in Tamil)
கொலோனோஸ்கோபிக்குப் பிறகு, நோயாளி சுயநினைவு பெறுவதற்கு சில மணிநேரம் ஆகிறது. எனவே நோயாளியை வேறொருவர் கவனித்துக் கொள்ளவது அவசியமாகிறது. மேலும், நோயாளி வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். சில சமயங்களில் நோயாளி வயிறு வீங்கியது போல உணர்கிறார் மற்றும் வயிற்றில் சிறிதளவு வாயு ஏற்படுகின்றது. இதனால், நோயாளிகள் சிறிது நேரம் நடக்க வேண்டும்.
இந்தச் செயல்முறைக்குப் பிறகு முதலில் கழிக்கப்படும் மலத்தில் இயல்பாகவே சிறிதளவு இரத்தம் வெளியேறுகிறது. இதையடுத்து மலத்தில் மீண்டும் மீண்டும் இரத்தப்போக்கு உண்டானால் அல்லது வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவும்.
கொலோனோஸ்கோபியின் அபாயங்கள் என்ன? (What are the complications of colonoscopy in Tamil?)
கொலோனோஸ்கோபி பரிசோதனையினால் பெரிய ஆபத்துகள் ஏற்படுவதில்லை. எனினும், சில சந்தர்ப்பங்களில் பின்வரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன, அவை:
- பரிசோதனையின் போது பயன்படுத்தப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஏற்படுகின்றது.
- மலக்குடல் அல்லது பெருங்குடலில் துளைகள் மற்றும் விரிசல் ஏற்படும்.
- கொலோனோஸ்கோபி பரிசோதனையின் போது ஆய்விற்காக திசுக்கள் எடுக்கப்பட்ட பகுதியில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
- சில நேரங்களில் நோயாளிக்கு வயிற்று வலி, அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது காய்ச்சல் மற்றும் சளி போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.
- கொலோனோஸ்கோபி பரிசோதனைக்கு முன்னரே மருத்துவர்கள் நோயாளிக்கு செயல்முறையினால் உண்டாகும் ஆபத்துக்கள் குறித்து தெரிவிக்கின்றனர். மேலும், அவர்கள் கையெழுத்திட்ட ஒப்புதல் அளித்துப் பின்னரே கொலோனோஸ்கோபி செய்யப்படுகின்றது.
கொலோனோஸ்கோபியின் முடிவுகள் என்ன? (What are the results of colonoscopy in Tamil?)
பரிசோதனையின் முடிவுகளை பெற்ற பின்னர், கொலோனோஸ்கோபியின் முடிவுகளை மருத்துவர் நோயாளிடம் கூறுகிறார்,
- நோயாளியின் நிலை மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் கொலோனோஸ்கோபி பரிசோதனை செய்யப்படுகிறது. இதனை செய்வதன் மூலம் மருத்துவர் பெருங்குடல் மற்றும் மலக்குடலில் உள்ள கோளாறுகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். பரிசோதனைக்கு பிறகு எந்தவித குறைபாடுபாடுகளும், கோளாறுகளும் கண்டறியப்படவில்லை என்றால், கொலோனோஸ்கோபியின் முடிவு எதிர்மறையாகக் கருதப்படுகிறது.
- கொலோனோஸ்கோபியின் போது, பெருங்குடலில் பாலிப்ஸ் அல்லது சிக்கலான திசுக்கள் காணப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்ய மருத்துவர் பரிந்துரைக்கிறார். முதல் கொலோனோஸ்கோபியின் போது எந்த நிலையான முடிவுகளும் கிடைக்கவில்லையெனில், அடுத்த ஆண்டு மீண்டும் பரிசோதனை செய்ய மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறது.
- பரிசோதனை அறிக்கை நேர்மறையானதாக இருக்கும்போது, பாலிப்ஸ் அல்லது கோளாறு உள்ள திசுக்களை அகற்றி, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்புகின்றனர். பெருங்குடல் புற்றுநோய்க்கான சரியான காரணத்தை துல்லியமாக கண்டறிய இந்த ஆய்வு செய்யப்படுகிறது.
- அதிக எண்ணிக்கையிலான பாலிப்கள் இருந்தால், புற்றுநோயைக் கண்டறிவதற்காக மருத்துவர்கள் அவற்றை சிறந்த முறையில் பரிசோதிக்கின்றனர். இது தவிர, மருத்துவர்கள் நோயாளியை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு பரிந்துரைக்கின்றனர். சில சமயங்களில் பின்வரும் காரணங்களுக்காக ஆரம்பகால கொலோனோஸ்கோபி செய்ய மருத்துவர்களால் பரிந்துரைக்கப் படுகின்றது, அவை:
- ஒன்றுக்கு மேற்பட்ட சென்டிமீட்டரில் பெரிய பாலிப் உள்ள போது, பெருங்குடலில் விரிவடைந்த திசுக்கள் இருக்கும் போது, பரிசோதனையைத் தடுக்கும் வகையில் இருக்கும் சில எஞ்சிய மலங்களினாலும், புற்றுநோயை உண்டாக்கும் அதிக ஆபத்துவாய்ந்த பாலிப் போன்றவை இருக்கும் போதும்.
- கொலோனோஸ்கோபியின் போது அகற்ற முடியாத பாலிப் அல்லது பிற சிக்கலான திசுக்களின் சிகிச்சைக்காக, மருத்துவர் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கொலோனோஸ்கோபி பரிசோதனை பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட்டைத் (Gastroenterologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
குர்கானில் சிறந்த காஸ்ட்ரோஎன்டிரோலஜிஸ்ட்
மும்பையில் சிறந்த காஸ்ட்ரோஎன்டிரோலஜிஸ்ட்