மலச்சிக்கல் என்றால் என்ன | Constipation meaning in Tamil 

நவம்பர் 28, 2020 Lifestyle Diseases 3781 Views

English हिन्दी Bengali Tamil العربية

மலச்சிக்கல் என்றால் என்ன, அதை எவ்வாறு சமாளிப்பது? (What is constipation in Tamil?)

இன்று, 25 வயது  நிரம்பிய  இளைஞரான  ராகுலை பற்றி பேசுவோம். இவர்  குப்பை உணவுகளை ( junk foods) அதிகமாக    உட்கொள்ளும் பழக்கம் உடையவர். இதனால்  ராகுலுக்கு எப்போதும் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகள்  இருந்து கொண்டேயிருக்கிறது. இதன் விளைவாக  தற்போது வீட்டில் சமைத்த வீட்டு உணவைக் கூட இவரால்  ஜீரணிக்க முடியவில்லை. தனக்கு ஏற்பட்ட மலச்சிக்கல் பிரச்சினையை  நீக்க  ராகுல் ஒரு மருத்துவரைத் தொடர்புகொண்டார். மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்களை நன்கு அறிந்த பின்னர் மருத்துவரின் ஆலோசனையை ஏற்று  நல்ல உணவுகளை உட்கொண்டு ராகுல் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபட்டார். நீங்கள் மலச்சிக்கல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறீர்கள் என்றால், இந்தப் பதிவில் மலச்சிக்கல் என்றால் என்ன ? என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

  • மலச்சிக்கல் என்றால் என்ன ? (What is meant by constipation in Tamil?)
  • மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of constipation in Tamil?)
  • மலச்சிக்கலின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of constipation in Tamil?)
  • மலச்சிக்கலுக்கான சிகிச்சை யாவை? (What are the treatments for constipation in Tamil?)
  • மலச்சிக்கலைத் தவிர்க்க என்ன சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும்? (What types of should to be eaten and to be avoided during constipation in Tamil?)

மலச்சிக்கல் என்றால் என்ன ? (What is meant by constipation in Tamil?)

மலச்சிக்கல் ஏற்படுவதால் மலம் கழிப்பதில் தடை உண்டாகிறது  மற்றும்  செரிமான அமைப்பு பாதிக்கப்படுகிறது, இதன் காரணமாக மலம் கழிக்கும்போது அதிக வலி உண்டாகிறதுமேலும், சிலருக்கு வாயுவு  பிரச்சினைகள்  ஏற்படுகிறது, சிலருக்கு உணவை சரியாக ஜீரணிக்க முடியாததால் அஜீரணக்கோளாரு ஏற்படுகின்றது. ஒரு நபரால் இரண்டு அல்லது மூன்று நாட்களாகியும் மலம் கழிக்க முடியவில்லையேனில் அவர் மலச்சிக்கல் பிரச்சினையால் பதிக்கப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறையினரும் கூட மலச்சிக்கல் பிரச்சினைகளால் கலக்கமடைகின்றனர். 

மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of constipation in Tamil?)

குறைவான நார்ச்சத்து  உள்ள  உணவுகள் மற்றும் எண்ணெய் அதிகமாக உபயோகித்து சமைத்த உணவுகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது, இது  படிப்படியாக வளர்ந்து பெருங்குடல் தசைகளில்  விளைவை ஏற்படுத்துகிறது. மேலும், குறைவான அளவில்  தண்ணீரைக் குடிப்பதால் மலம் அடைக்கப்படுவதோடு மலம் கழிப்பதில் சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கான காரணங்கள்: 

  • பெரும்பாலும் சந்தைகளில் விக்கப்படும்  தொகுக்கப்பட்ட பொருட்களை (junk food) சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஏனெனில், அவ்வாறு  தயாரிக்கப்டும் உணவில் நார்ச்சத்து இருப்பது  இல்லை.  
  • உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுகிறது.
  • வயதானவர்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதில்லை, எனவே  அவர்கள் மலச்சிக்கல் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். 
  • எண்ணெய் நிறைந்த பொருள்கள் மட்டுமின்றி  பால், வெண்ணெய் , கீரிம் போன்ற பொருள்களை உட்கொள்வதும் மலச்சிக்கலை உண்டாக்கும்.
  • மனிதனின் வயது அதிகரிப்பதால்  வயிற்றில் செரிமான செயல்பாடு குறைந்து, மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. 
  • நம் அன்றாடம்  உட்கொள்ளும்  உணவில் மேற்கொள்ளும் மாற்றங்களும் மலச்சிக்கலை ஏற்படுத்துகின்றன.  ஏனெனில், நாம் வெளியே செல்லும்போது பாக்கெட்  செய்யப்பட்ட உணவுகளை உண்கிறோம் இது மலச்சிக்கல் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • கர்ப்ப காலத்தில், பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படுகிறது.

மலச்சிக்கலின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of constipation in Tamil?)

  • மலம்  கடினமாவதால்மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகிறது. 
  • வாயிலிருந்து அதிக துர்நாற்றம்  வெளியேறுகிறது, சிலருக்கு  நாக்கு  வெள்ளை நிறமாக இருக்கும்
  • சிலருக்கு பசி ஏற்படாது, எப்போதும் வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகள் ஏற்படும்.
  • வயிற்றில் வீக்கம் மற்றும் வலி ஏற்படுகின்றது. ஏனெனில்மலச்சிக்கல்  வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கிறது  மற்றும் வாயுவு சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கான சிகிச்சை யாவை? (What are the treatments for constipation in Tamil?)

  • பச்சை காய்கறிகள், சுண்டல், பப்பாளி, அவகெடொ  போன்ற நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். 
  • உடற்பயிற்சி  செய்வதை அதிகரிக்க வேண்டும், இது உடலின் செயல்பாட்டை அதிகரித்து  மலச்சிக்கல் பிரச்சினைகளை நீக்குகிறது.  
  • மருத்துவர்கள் சில பயிற்சிகளைப் பரிந்துரைக்கின்றனர், இது மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.  
  • மலச்சிக்கலைக் குணப்படுத்த,லாக்டோபைசில்ஸ் போன்ற புரோபயாடிக்குகளை  உட்கொள்ளலாம். 
  • மருந்துகள் வேலை செய்யாதபோது அறுவை சிகிச்சை மட்டுமே இதற்கு  தீர்வாக அமைகிறது.
  • மலச்சிக்கல் நோயாளிக்கு மருத்துவர்களால் மலமிளக்கிகள் வழங்கப்படுகின்றனமலம் கழிக்கவில்லை என்றால், மளமிளக்கிகள் துணை புரிகின்றது.

மலமிளக்கிகளில் நான்கு வகைகள் உள்ளன. அவை,

– ஃபைப்ரூக் மலமிளக்கிகள்

– ஆஸ்மோடிக் மலமிளக்கிகள்

– கிரெனடைன் மலமிளக்கிகள்

– மல மென்மையாக்கி

மலச்சிக்கலைத் தவிர்க்க என்ன சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும்? (What types of should to be eaten and to be avoided during constipation in Tamil?)

  • மலச்சிக்கலை போக்க ஃபைபர் அதிகம்  உள்ள  உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை காய்கறிகள், பப்பாளி, இஞ்சி, தேநீர், கிராம், கினோவா போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.  
  • எண்ணெய் உணவுகள், குப்பை உணவுகள் சந்தையில் காணப்படும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை  உட்கொள்ளுதலைத் தவிர்க்க வேண்டும். 

மலச்சிக்கல் பிரச்சினையால் நீங்கள் மிகவும் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், உடனடியாக ஒரு பொது மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள் (General Physician).


Best General Physician in Delhi

Best General Physician in Chennai

Best General Physician in Bangalore

Best General Physician in Mumbai


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha