முழு உடற்பரிசோதனை | Full body check up in Tamil

டிசம்பர் 14, 2020 Lifestyle Diseases 1611 Views

English हिन्दी Tamil

தற்போதைய சூழலில், மக்கள் அவர்களுக்கு ஏற்படும் உடல் ஆரோக்கிய குறைவுகளைக் கவனிக்காமல் புறக்கணிக்கின்றனர், இதுவே  பின்னர் கடுமையான நோய்கள் உருவாவதற்கான  காரணமாக அமைகிறது. எனவே, ஒவ்வொருவரும் தங்கள் உடலில் உண்டாகும் உவாதிகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். ஒரு நல்ல மருத்துவரைத் தொடர்பு கொண்டு, பொது பரிசோதனை அல்லது முழு உடற்பரிசோதனை செய்யுங்கள். இவை வழக்கமான உடல் பரிசோதனைகளே ஆகும். இதன் மூலம் இரத்தப் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, மலப் பரிசோதனை, நீரிழிவு  நோய்க்கானப் பரிசோதனை, தைராய்டுப் பரிசோதனை போன்ற  பரிசோதனைகளை  மேற்கொண்டுஅனைத்து உடல் அமைப்புகளும் எளிதில் சோதிக்கப்படுகின்றன. இருப்பினும், முழு உடலையும் பரிசோதிப்பதன் மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறிய முடிகிறது. இது தவிர, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். முழு உடற்பரிசோதனை என்றால் என்ன? அதை யார் செய்ய வேண்டும்? என்று தற்போது பலரும் யோசிக்க கூடும் . இன்றையக் கட்டுரையில் முழு உடல் பரிசோதனைப்  பற்றிய தகவல்களை  விரிவாகக் கூறுகிறோம். 

  • முழு உடற்பரிசோதனை என்றால் என்ன? (What is full body check up in Tamil?)
  • பொதுவான பரிசோதனையில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? (What are the tests done in normal check up in Tamil?)
  • முழு உடல் பரிசோதனையில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? (What are the tests done in full body check up in Tamil?)
  • வயதை அடிப்படையாகக் கொண்டு மருத்துவர்கள் என்னென்ன பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்? (What test do doctors recommend to take based on age in Tamil?)
  • இந்தியாவில் முழு உடல் பரிசோதனைக்கான செலவுகள் என்ன? (What is the cost of full body check up in India in Tamil?)

முழு உடற்பரிசோதனை என்றால் என்ன? (What is full body check up in Tamil?)

அனைவருக்கும் முழு உடல் பரிசோதனை கட்டாயமில்லை; உங்கள் உடலின் அனைத்து அமைப்புகளையும் பற்றியத் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால் இதை மேற்கொள்ளுங்கள். எனினும், நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தால், நோயைத் துல்லியமாகக் கண்டறிய முழு உடல் பரிசோதனை செய்யுங்கள். இருப்பினும், எந்தவொரு  பரிசோதனையாக இருந்தாலும் முதல்கட்டமாக  இரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீரகப் பரிசோதனையை செய்ய மருத்துவர் பரிந்துரைக்கிறார். இது தவிர, மருத்துவரின் ஆலோசனையின் படி செய்ய வேண்டிய பிற பரிசோதனைகளும் உள்ளன.

பொதுவான பரிசோதனையில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? (What are the tests done in normal check up in Tamil?)

பொது சுகாதார பரிசோதனையில், நீரிழிவு நோய்க்கானப் பரிசோதனை, தைராய்டுப் பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

  • நீரிழிவு நோய்க்கானப் பரிசோதனை (Diabetes screening) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீரிழிவு பரிசோதனை  செய்வது பொதுவானதாகும். இந்தப் பரிசோதனையின் மூலம்  உடலிலுள்ள இரத்த சர்க்கரை அளவை துல்லியமாக அறிந்து கொள்ள முடிகிறது.
  • தைராய்டு பரிசோதனை (Thyroid testing) தைராய்டு பிரச்சினைகள் உள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் தைராய்டு பரிசோதனை செய்ய நிபுணர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தவிர, தைராய்டு பிரச்சினைகள் இல்லாதவர்களுக்கும் இந்தப் பரிசோதனை செய்து அவர்களுக்கு  பிரச்சினை இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். 
  • கல்லீரல் பரிசோதனை (Liver examination) கல்லீரல் அதன் செயல்பாட்டை சரியாகச் செய்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த கல்லீரல் செயல்பாடு பரிசோதனை செய்யப்படுகிறது. 
  • சிறுநீரகப் பரிசோதனை (Kidney examination) சிறுநீரகம் சரியாக செயல்படுகிறதா இல்லையா என்பதைக் கண்டறிய சிறுநீரகப் பரிசோதனை செய்யப்படுகிறது. 
  • ஹீமோகுளோபின் பரிசோதனை (Hemoglobin test) உடலில் ஹீமோகுளோபின் அளவை சரிபார்க்க,  ஹீமோகுளோபின் பரிசோதனை  செய்யப்படுகிறது. இரத்ததில் உள்ள  ஹீமோகுளோபின் அளவு அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை மருத்துவர் இந்தப் பரிசோதனையின் மூலம் விளக்குகிறார். 

முழு உடல் பரிசோதனையில் என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? (What are the test done in full body check in Tamil?)

மருத்துவர்கள் பெரும்பாலும் மக்களை பொது பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைக்கின்றனர். எனினும், உடலில் ஏதேனும் சிக்கல் உண்டாகும் போது, அந்தச் சிக்கலைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை  பரிந்துரைக்கின்றனர். முழு உடல் பரிசோதனை குறித்து காண்போம்.  

முழு உடல் பரிசோதனை பின்வரும் சோதனைகளை உள்ளடக்கியது – (Following are the tests done in full body check up)

  • இரத்த பரிசோதனையில் (Blood test), ஹீமோகுளோபின் அளவறிதல் மற்றும் பாலிமார்ப்ஸ், லிம்போசைட்டுகள், மோனோசைட்டுகள், பிளேட்லெட்ஸ்கள் போன்றவை அளவிடப்படுகின்றன. இது தவிர, இரத்திலுள்ள  சர்க்கரை  அளவு மற்றும் கொழுப்பின் அளவும் அறியப்படுகிறது. 
  • சிறுநீர் பரிசோதனை(Urine test) குளுக்கோஸ் மற்றும் புரதத்தின் அளவைக் கண்டறிய சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது. 
  • ஈ.சி.ஜி(ECG) – இதயம் தொடர்பான பிரச்சினைகைக்  கண்டறிவதற்கும் இதயத் துடிப்பை அளவிடவும் ஈ.சி.ஜி பரிசோதனை செய்யப்படுகிறது. 
  • காது பரிசோதனை(Ear test) காதுகளின் ஆரோக்கியம் மற்றும் கேட்கும் திறனை ஆய்வு செய்ய காது பரிசோதனை செய்யப்படுகிறது. 
  • கண் பரிசோதனை(Eye test) கண் பார்வை மற்றும் கண் சரியாக செயல்படுகிறதா இல்லையா என்பதை சரிபார்க்கவும், மயோபியா, ஹைப்பர்மெட்ரோபியா மற்றும் கலர் ப்ளைன்ட்னஸ் போன்றவற்றைக் கண்டறிய கண் பரிசோதனை செய்யப்படுகிறது
  • எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் (X- ray and Scan) மருத்துவ பயிற்சியாளர்கள் நோயாளிகளின் நிலையைப் பொறுத்து எக்ஸ்-ரே மற்றும் ஸ்கேன் செய்கின்றனர்.  
  • கல்லீரல் செயல்பாடு பரிசோதனைகள் (Liver function test) கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருக்கிறதா என்று பரிசோதிக்க சில பரிசோதனைகள் செய்ய வேண்டும் . இந்த பரிசோதனையில்  புரதம், எஸ்ஜிஓடி, எஸ்ஜிபிடி, அல்புமின், குளோபுலின், பிலிரூபின் போன்றவை பரிசோதிக்கப் படுகின்றது.

வயதை அடிப்படையாகக் கொண்டு என்னென்ன பரிசோதனைகளை எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்? (What tests do doctors recommend to take based on age in Tamil?)

  • வயதுவரம்பின்றி எந்த பிரிவினருக்கும்  எந்த நேரத்திலும் நோய்கள் ஏற்படலாம். எனவே, நோய்களின் அபாயத்தைக் கண்டறிந்து  தவிர்க்க அனைவரும் தங்கள் உடலை ஒரு முறையாவது  பரிசோதித்து நோய் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், நோய்களின்  அறிகுறிகள்  இல்லாதவர்களுக்கு வயது அடிப்படையில் பின்வரும் பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
  • 20 வயது நிரம்பியவர்கள் கண் மற்றும் பற்கள் பரிசோதனையுடன் ஆண்டுக்கு ஒரு முறை பிபி, உயரம் மற்றும் எடையை சரிபார்க்க வேண்டும். 2 வருடங்களுக்கு  ஒரு முறையாவது  எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும். 
  • 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகளுடன்  தைராய்டு, நீரிழிவு நோய், இரத்த சோகை, மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் போன்றவற்றுகான இரத்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது தவிர, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்காக  வருடத்திற்கு ஒரு முறையாவது இதயத்தை பரிசோதிக்க  வேண்டும். 
  • 40 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள பரிசோதனைகளுடன்  ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இருதயப் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். 
  • 50  வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வழக்கமான  பரிசோதனைகளுக்கு கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் பிபி, நீரிழிவு நோய், கண் பரிசோதனை, காது பரிசோதனை மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். 
  • 60-70 வயதுடையவர்கள் பொது பரிசோதனைகளுக்கு கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் எலும்புகளை பரிசோதிக்க வேண்டும். மேலும், அல்சைமர் மற்றும் டிமென்ஷியாவுக்கான பரிசோதனைகளை ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ள  வேண்டும்.

இந்தியாவில் முழு உடல் பரிசோதனைக்கான செலவுகள் எவ்வளவு? (What is the cost of full body check up in Tamil?)

ஒரு முழு உடல் சோதனைக்கான செலவு 799 முதல் 10,000 ரூபாய் வரை இருக்கலாம். இந்தியாவில் பல ஆய்வக மையங்கள் உள்ளன, ஒவ்வொரு மையங்களிலும் முழு உடல் பரிசோதனையைப் பெறுவதற்கான செலவு வேறுபடுகிறது.

நீங்கள் ஆரோக்கியத்தில் ஏதேனும் ஒழுங்கற்ற தன்மையைக் கொண்டிருந்தால், ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொண்டு முழு உடல் பரிசோதனையை செய்யுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha