க்லுடென் இல்லாத உணவுகள் | Gluten free diet meaning in Tamil

டிசம்பர் 17, 2020 Lifestyle Diseases 2637 Views

English हिन्दी Tamil

க்லுடென் என்பது கோதுமையில் காணப்படும் ஒரு வகை புரதமாகும். கோதுமை மட்டுமின்றி சோளம், பார்லி, கம்பு போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளிலும் க்லுடென் புரதம் அதிக அளவு காணப்படுகிறது. க்லுடென் புரதம் அதிகமாக உள்ள உணவு பொருட்களை உட்கொள்வதினால் உடல் எடை அதிகரிக்கிறது. இதன் காரணமாய் க்லுடென் இல்லாத உணவு பொருட்களை உட்கொள்ளுமார் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இன்றையக் கட்டுரையில், க்லுடென் இல்லாத உணவுகள் மற்றும் க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தைப் பற்றிய விரிவான தகவல்களை அறிவோம். 

  • க்லுடென் இல்லாத உணவு பழக்கம் என்றால் என்ன? (What is meant by Gluten free diet in Tamil?)
  • க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தில் நீங்கள் என்ன சாப்பிடலாம்? (What you can eat in gluten free diet in Tamil?)
  • க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of gluten free diet in Tamil?)
  • சிலருக்கு க்லுடென் உட்கொள்வது ஏன் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது? (Why is gluten bad for some people in Tamil?)

க்லுடென் இல்லாத உணவு பழக்கம் என்றால் என்ன? (What is meant by Gluten free diet in Tamil?)

க்லுடென் என்பது கோதுமை, பார்லி, கம்பு மற்றும் மென்மாக்கோதுமைகளில் காணப்படும் புரதங்களின் குழு ஆகும். க்லுடென் என்னும் வார்த்தை லத்தீன் மொழியின் “கம்” என்னும் வார்த்தையிலிருந்துப் பெறப்பட்டது. ஏனெனில், க்லுடென் தண்ணீரில் கலக்கும்போது மாவுக்கு  பசைத்தன்மையைக் கொடுக்கிறது. க்லுடெனில் உள்ள இந்தப் பசைத்தன்மை உணவில் பிசுபிசுப்பு வலையமைப்பை உருவாக்க உதவுகிறது, இதனால் சமைக்கும்போது ரொட்டி எளிதில் உயருகிறது (bakes soon). மேலும், இதனால் ரொட்டி மெல்லியதாகவும், மென்மையாகவும் இருக்கின்றது. இருப்பினும், க்லுடென் நிறைந்த உணவுகளை உட்கொண்ட பின்னர் பலரும் அசௌகரியமாக உணர்கின்றனர். இதற்கான முக்கிய காரணம் மிகவும் கடுமையான செலியாக் நோய் ஏற்படுவதே என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தில் நீங்கள் என்ன சாப்பிடலாம்? (What you can eat in gluten free diet in Tamil?)

பின்வரும் உணவு பொருட்கள் க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தில் உட்கொள்ள வேண்டியவை ஆகும், அவை

  • இறைச்சி, மீன், முட்டை, க்லுடென் இல்லாத பால் பொருட்கள், பால், தயிர் போன்றவை.
  • அனைத்து வகையான பச்சை காய்கறிகள், க்லுடென் இல்லாத பழங்கள்.
  • தானியங்களில் குயினோவா, அரிசி, பக்வீட், மரவள்ளிக்கிழங்கு, சோளம், தினை, அமராந்த், அரோரூட், டெஃப் மற்றும் க்லுடென் இல்லாத  ஓட்ஸ் ஆகியவை ஆகும்.
  • ஸ்டார்ச் மற்றும் மாவு வகைகளில், உருளைக்கிழங்கு, உருளைக்கிழங்கு மாவு, சோளம், சோள மாவு, சுண்டல் மாவு, சோயா மாவு, பாதாம் மீல் மாவு, தேங்காய் மாவு, மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவை ஆகும்
  • அனைத்து வகையான நட்ஸூகள் மற்றும் விதைகள்.
  • அனைத்து வகையான தாவர எண்ணெய் மற்றும் வெண்ணெய்.
  • அனைத்து வகையான மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்.

க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of gluten free diet in Tamil?)

க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் விளைகின்றன. பின்வருவன, நல்ல உடல் ஆரோக்கியத்திற்காக க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தின் நன்மைகள் ஆகும். அவை :

செரிமான சிக்கல்கள் தொடர்பான அறிகுறிகளை நிவர்த்தி செய்வதில் (In relieving digestive symptoms): பெரும்பாலான மக்கள் வயிற்று வீக்கம், வயிற்றுப்போக்கு மலச்சிக்கல், வாயுவு தொல்லை, சோர்வு  போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தை மேற்கொள்கின்றனர். க்லுடென் இல்லாத உணவு பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் செலியாக் நோய் மற்றும் செலியாக் நோய் இல்லாது க்லுடென் உணர்திறன் (gluten sensitivity) உள்ளவர்களுக்கு செரிமான பிரச்சினைகள் தொடர்பான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. செலியாக் நோயால் பாதிக்கப்பட்ட 215 பேர் ஆறு மாதங்களுக்கு க்லுடென் இல்லாத உணவுப் பழக்கத்தைப் பின்பற்றியதனால் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பிற சிக்கல்களைக் குறைக்க இயன்றதுஎன ஒரு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உடல் எடையைக் குறைப்பதில் (In reducing body weight): க்லுடென் உள்ள உணவுகளை உட்கொள்வதினால் உடல் எடை அதிகரிக்கிறது. எனினும், நீங்கள் உட்கொள்ளும் உணவுகளிலிருந்து க்லுடென்  உணவுகளை விலக்கி, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நிச்சயமாக உடல் எடையைக் குறைக்க இயலும்.

செலியாக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாள்பட்ட வீக்கத்தைக் குறைப்பதில் (In reducing chronic inflammation in people with celiac disease ): நோய் தொற்று உண்டாகும் போது வீக்கம் ஏற்படுவது இயற்கையான செயல்முறையாகும். மேலும், இது நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கவும் நேய்த்தொற்றைக் குணப்படுத்தவும் உதவுகிறது. சில சமயங்களில்  கைகளில் உண்டாகும் வீக்கம் வாரங்கள், மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் வரை நீடிக்கிறது. க்லுடென் இல்லாத உணவுகள் வீக்கம், அழற்சி போன்றவற்றை உருவாக்கும் ஆன்டிபாடிகளின் அளவைக் குறைக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. செலியாக் நோய் உள்ளவர்களுக்கு, க்லுடென் தொடர்பான அழற்சியால் உண்டான குடல் பாதிப்புக்குளுக்கும் இந்த உணவு பழக்கம் சிகிச்சையளிக்கிறது. 

ஆற்றலை அதிகரிப்பதில் (In boosting energy):  செலியாக் நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் சோர்வாகவும், மந்தமாகவும் இருக்கிறார்கள். நீங்களும் செலியாக் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், க்லுடென் இல்லாத உணவு முறைக்கு மாறுவதன் மூலம்  உடல் ஆற்றலை அதிகரிக்க இயலும். மேலும், சோர்வாகவும் சோம்பலாகவும் இருப்பதைத் தவிர்க்க இயலும்.

சிலருக்கு க்லுடென் உட்கொள்வது ஏன் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது? (Why is gluten bad for some people in Tamil?)

பெரும்பாலான மக்களுக்கு  க்லுடென் நிறைந்த உணவுகளை உட்கொள்வதினால் எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுவதில்லை. இருப்பினும், க்லுடென் ஒவ்வாமை மற்றும் செலியாக் நோய் உள்ளவர்கள் க்லுடென் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள இயலாது. இதுமட்டுமின்றி, பெரும்பாலும் கோதுமை ஒவ்வாமை மற்றும் செலியாக் இல்லாது க்லுடென் உணர்திறன் (non celiac gluten sensitivity) குறைபாடுகள் உள்ளவர்களும் க்லுடென் உணவுகளைத் தவிர்க்கின்றனர். இதற்கான முக்கிய காரணம் க்லுடென் உள்ள உணவு பொருட்களை உட்கொள்வதினால் அவர்களுக்கு உண்டாகும் மோசமான விளைவுகளே ஆகும்.

க்லுடென் இல்லாத உணவு பற்றி உங்களுக்கு கூடுதல் தகவல் தேவைப்பட்டால், உடனடியாக ஒரு ஊட்டச்சத்து நிபுணரைத் (Nutritionist) தொடர்பு கொள்ளுங்கள்.


Best Nutritionist in Delhi

Best Nutritionist in Mumbai

Best Nutritionist in Bangalore

Best Nutritionist in Chennai


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha