தலைவலி மாத்திரைகள் | Headache tablets in Tamil

ஜனவரி 21, 2021 Lifestyle Diseases 1082 Views

हिन्दी Tamil

பெரும்பாலும், மருத்துவர்கள் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலிக்கு முதலில் வலி நிவாரணிகளையே பரிந்துரைக்கின்றனர். இவற்றில் பல தலைவலி மாத்திரைகள் மருத்துவ பரிந்துரைப்பு இல்லாமலே மருந்தகத்தில் கிடைக்கின்றன. எனினும், பிற தலைவலி மாத்திரைகளுக்கு மருத்துவ பரிந்துரைப்பு தேவைப்படுகிறது. பெரும்பாலான தலைவலி நிவாரண மருந்துகள் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளின் வகைகளிலே வருகின்றன. இந்த மருந்துகள் உடலில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்ற சில வேதிப்பொருட்களின் உற்பத்திக்கு காரணமாக இருக்கும் ஒரு நொதியைத் (enzyme) தடுப்பதன் மூலம் மனித உடலுக்குள் செயல்படுகின்றன. 

தலைவலி மாத்திரைகள் ஏன் பயன்படுத்தப்படுகிறது? (Why is headache tablets used in Tamil?)

தலைவலி மருந்துகள் பின்வரும் நிலைகளில் வலியைக் குறைக்கப் பயன்படுகின்றன, அவை:

 • பதற்றத்தினால் தலைவலி
 • ஒற்றைத் தலைவலி
 • குளிர் காலத்தில் காய்ச்சல் மற்றும் தலைவலி
 • பொதுவான தலைவலி

தலைவலி மாத்திரைகளின் எந்த பிராண்டுகள் சந்தையில் கிடைக்கின்றன? (Which brands of headache tablets are available in market in Tamil?)

 • Acetaminophen (Calpol, Dolo, Sumo L, Kabimol, Fepanil, Pyrigesic, Malidens, Febrinil, Pacimol, T98) 
 • Aspirin (Ecosprin, Asprin, Loprin, Delisprin, Aspirin, ASA, Aspeeday, Gra CV Sprin) 
 • Fenoprofen 
 • Flurbiprofen (Brugel, Fbn, Ocuur, Flurbin, Flur, Flubifen, Flubi, Bellur, Kaziur, Flb) 
 • Ibuprofen (Brufen, Ibugesic, Ximafen, Icparil, Tricoff, buvon, Tricofen, Ibugrap, Arfen, Ibugen, Ibunij, let Plus Tablet, Endache, Fenlong, Ibuf P) 
 • Ketoprofen (Ketoplast, Infen Plaster, Fastum, Ketopatch, ifast A, Vofane, Ostofen, Rhofenid, Redufen) 
 • Nabumetone (Nabuam, Pmute, Nilitis)
 • Naproxen (Naprosyn, Proxidom, Xenobid, Napexar, Spirox, Napdom, Antesvel, Naptrox, Naproz) 
 • Diclofenac (Voveran, Dilona, Diclotal, Diclotal AQ, Ark, Dynatroy AQ, Dicloran, Relaxyl) 
 • Ketorolac (Ketorol, Ketanov, Acular, Dentaforce, T Lac, Acuvail, Cadolac, KT, Kelac, KLS) 
 • Meclofenamate 
 • Carisoprodol (Carisoma, Carisol, Aciprodol) 

தலைவலி டேப்லெட்டின் பக்க விளைவுகள் (Side effects of headache tablets in Tamil)

 • இரத்த அணு மாற்றங்கள்
 • ரெய்ஸ் நோய்க்குறி (இதன் விளைவாக ஆபத்தான நரம்பியல் நிலை ஏற்படும்)
 • இரைப்பை குடலில் இரத்தப்போக்கு
 • மூச்சுக்குழாய் அழற்சியின் விளைவாக நுரையீரலின் காற்றுப்பாதைகள் குறுகிவிடும் (ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்).
 • அனாபிலாக்ஸிஸ் (உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினை)
 • அல்சர்
 • குமட்டல்
 • வயிற்றுப்போக்கு
 • அஜீரணம்
 • தலைச்சுற்றல்
 • மயக்கம்
 • இரைப்பை குடல் சிக்கல்
 • கண்பார்வை சிக்கல்
 • வாந்தி
 • கல்லீரல் பாதிப்பு
 • மலச்சிக்கல்
 • வீக்கம்
 • பசியின்மை 
 • அடர் நிற சிறுநீரின் 
 • வாய் வறட்சி
 • கவலை

தலைவலி மாத்திரைகள் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் (Precautions related to headache tablets in Tamil)

 • தலைவலி மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், அவ்வாறு உட்கொள்வதன் விளைவாக அதிக மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படுகின்றது. மேலும், சில தலைவலி மருந்துகளான இப்யூபுரூஃபன், கெட்டோபிரோஃபென், நபுமெட்டோன், நாப்ராக்ஸன் மற்றும் கெட்டோரோலாக் போன்றவை ஆல்கஹால் வயிற்றுப் பிரச்சினைகளை அதிகரிக்கிறது.
 • கெட்டோப்ரோஃபென் மற்றும் நாப்ராக்ஸன் மருந்துகளை எடுத்தக் கொண்ட இரண்டு மணி நேரத்திற்குள் அஜீரண கோளாறுக்கான மருந்துகளை (ஆன்டாசிட்கள்) எடுத்துக் கொள்ள கூடாது.
 • நீங்கள் நீண்ட கால சிகிச்சைக்காக அசிடமினோபன் மருந்துகளை உட்கொண்டு கொண்டிருந்தால், சிறுநீரக செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு மற்றும் இரத்தக் கூறுகளின் அளவை  மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கக்கூடும். ஏனெனில், அசிடமினோபன் கல்லீரலை சேதப்படுத்துகிறது.
 • கர்ப்ப காலத்தில் தலைவலி மருந்துகளின் பயன்பாடு பாதுகாப்பற்றதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், மனித ஆய்வுகளிலிருந்து இது தொடர்பான வரையறுக்கப்பட்ட தகவல்கள் சிறிதளவே. ஆனாலும், வளரும் கருவில் சில பக்க விளைவுகளும் ஏற்படக்கூடுமென விலங்கு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
 • தாய்ப்பால் கொடுக்கும் போது தலைவலி மருந்துகளை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகும். இந்த மருந்துகள் அதிக அளவில் தாய்ப்பாலுக்குள் செல்வதில்லை மற்றும் குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதில்லை. 
 • சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி மருந்துகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். மருந்துகளின் அளவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தொடர்பான தகவல்களைப் பெற உங்கள் மருத்துவரை அணுகவும்.
 • கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தலைவலி மருந்துகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். மருந்துகளின் அளவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தொடர்பான தகவல்களைப் பெற உங்கள் மருத்துவரை அணுகவும்.

தலைவலி மாத்திரைகளை எப்போது பயன்படுத்தக் கூடாது? (When not to take headache tablets in Tamil?)

 • கல்லீரல் நோய்
 • சிறுநீரக நோய்
 • பெப்டிக் புண்கள்
 • ஆஸ்துமா
 • மாரடைப்பு
 • இரத்த சோகை 

போன்ற சிக்கல்களில் பயன்படுத்தக் கூடாது.

தலைவலி மருந்துகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently asked questions about headache tablets in Tamil)

1) வாகனம் ஓட்டும்போது அல்லது கனரக இயந்திரங்களை இயக்கும் போது தலைவலி மருந்துகளை உட்கொள்வது பாதுகாப்பானதா? (Is it safe to take headache medicines during driving or heavy machines in Tamil?)

இந்த மருந்துகள் மயக்கம் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்துவதால், கனரக இயந்திரங்களை இயக்கும் போதும், வாகனம் ஓட்டும் போதும் தலைவலி மருந்துகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

2) தலைவலி மருந்துகள் போதையாக மாறுமா? (Can headache medications cause addiction in Tamil?)

இல்லை, தலைவலி மருந்துகள் போதையாக மாறி ஒரு நபரை அடிமையாக்காது.

3) சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தலைவலி மருந்துகளை உட்கொள்வது பாதுகாப்பானதா? (Is it safe to take headache medicines for patients suffering from kidney and liver diseases in Tamil?)

கல்லீரல் அல்லது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தலைவலி மருந்துகளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

4) வலியைக் குறைத்த பிறகு தலைவலி மருந்து உட்கொள்வதை நிறுத்த முடியுமா? (Can I stop taking headache medicines after relieving pain in Tamil?)

நீங்கள் தலைவலி மருந்துகளை குறுகிய கால வலி நிவாரணத்திற்காகப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், தலைவலி மருந்துகளை பயன்படுத்தாமல் நிறுத்துவதால் எந்த வித சிக்கல்களும் ஏற்படாது.  நாள்பட்ட வலி நிவாரணியாக நீங்கள் தலைவலி  மருந்துகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்தை நிறுத்த வேண்டும்.

5) தலைவலி மருந்துகளை உட்கொள்வது பாதுகாப்பானதா? (Is it safe to take headache medicines in Tamil?)

மருத்துவர்களின் ஆலோசனையைப் பின்பற்றி தலைவலி மருந்துகளை உட்கொள்வது பாதுகாப்பானதாகும்.

உணவு மற்றும் ஆல்கஹால் உடன் தலைவலி மருந்துகளின் எதிர்வினை (Reaction of headache tablets with food and alcohol in Tamil)

 • தலைவலி மருந்துகளை உணவுடன் எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதாகும்.
 • தலைவலி மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது ஆல்கஹால் உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனெனில், அவை அதிக மயக்கம் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். சில தலைவலி மருந்துகளான இப்யூபுரூஃபன், கெட்டோபிரோஃபென், நபுமெட்டோன், நாப்ராக்ஸன் மற்றும் கெட்டோரோலாக் போன்றவை ஆல்கஹால் உடன் எடுத்துக் கொள்ளும் போது வயிற்றுப் பிரச்சினைகளை அதிகரிக்கிறது.

தலைவலி மருந்துகளுக்கு மற்ற மருந்துகளுடன் உண்டாகும் இடைவினைகள் (Interaction of headache medicines with other drugs in Tamil)

ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் ஒன்றோடு ஒன்று வினைபுரியும் போது மருந்துகளில் இடைவினைகள் (Interactions) ஏற்படுகின்றன. இந்த இடைவினைகள் நீங்கள் உட்கொள்ளும் மருந்ததகளை செயல்திறன் குறைந்த ஆற்றல் மிக்கதாக மாற்றலாம். மேலும், எதிர்பாராத சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு மருந்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. சில மருந்து இடைவினைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. நீங்கள் பரிந்துரைக்காத அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், அதிலுள்ள லேபிள்களைப் படித்து அதில் உபயோகிக்கப்பட்டுள்ள மருந்துகளின் இடைவினைகளைப் பற்றி அறிந்து கொள்வதே உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் செயலாகும்.  

உயிருக்கு ஆபத்தானவை (Life threatening)

 • Oxyphenbutazone (Sioril, Oxyphenbutazone) 
 • Metamizole (Novalgin Rc, Bral, Andep (Ravian) 

கடுமையான விளைவுகளை கொண்டவை (Severe)

 • Methotrexate (Folitrax, Folic Acid + Methotrexate, Mexate, Imotrax, Mxte) 
 • Apixaban (Eliquis, Apixaban) 
 • Celecoxib (Celecoxib, Celedol, Celecoxib + Diacerein, Celact, Celetop) 
 • Amlodipine (Amlokind AT, Amlodac Tablet, Amtas Tablet, Amchek Tablet, Angicam Tablet)
 • Ramipril (Polycapa, Ramistar, Hopace H, Hopace, Cardace) 
 • Bleomycin (Bleocip, Bleocel, Bleocin, Bleomycin 15 Mg Injection, Bleochem)
 • Leflunomide (Lefra, Arava, Cleft, DM Lef, Lefno) 
 • Pilocarpine (Pilagan, Pilocarpin, Carpinol, Pilocarpine, Carpine) 
 • Lamotrigine (Lamiace, Lamitor, Lamez, Lamepil, Lametec) 
 • Warfarin (Warfarin, Sofarin, Uniwarn, Warf) 
 • Ketorolac (Centagesic, Ketorol, Ket, Ketanov, Cadolac) 

மிதமான விளைவுகளை கொண்டவை (Moderate) 

 • Ramipril (Hopace H, Ramistar, Cardace, Polycap, Hopace) 
 • Adefovir (Adesera, Adheb, Adefovir, Adfovir) 
 • Sirolimus (Emtor, Genxtor, Sirolimus, Limus, Rapacan) 
 • Dalteparin (Daltehep, Daltepin, Dalpin, Fragmin, Dalteparin) 
 • Captopril (Aceten, Angiopril, Captopril) 
 • Busulfan (Bucelon, Busulmax, Busulfan) 
 • Phenytoin (Phen Phen, Phenobarbital + Phenytoin, Episol Plus, Barbitoin, Epiphen) 
 • Cholestyramine (Inacure C, Choltran, Cholestyramine, Cholestyramine + Diclofenac) 

தலைவலி மாத்திரைகளின் மாற்றீடுகள் (Substitutes of headache tablets in Tamil)

 • குளிர் பொதியை (cold pack) பயன்படுத்தவும்

தலைவலி ஏற்பட்டால் உங்கள் நெற்றியில் ஒரு குளிர் பொதியைப் பயன்படுத்துங்கள்.

 • மங்களான விளக்குகளைப் பயன்படுத்தவும்

உங்கள் கணினித் திரையிலுள்ள பிரகாசமான அல்லது மின்னும் விளக்குகள் தலைவலியை ஏற்படுத்தும். எனவே, விளக்குகளை மங்களாக வைத்திருக்க வேண்டும்.

 • சூயிங் கம் உட்கொள்ள வேண்டாம்

சூயிங் கம் உட்கொள்வது தலைவலியை ஏற்படுத்தும், எனவே அதைத் தவிர்க்கவும்.

 • நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்

உடலின் நீரிழப்பு தலைவலியை ஏற்படுத்தும், எனவே மருத்துவர்களால் நிறைய தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

 • போதிய தூக்கம் கொள்ள வேண்டும்

தூக்கமின்மை சிலருக்கு தலைவலியை ஏற்படுத்தும், எனவே நன்றாக தூங்குவது நன்மை பயக்கிறது.

 • அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்

உங்களுக்கு தலைவலி வரும்போது மிளகுக்கீரை மற்றும் லாவெண்டர் எண்ணெய் போன்ற அத்தியாவசிய எண்ணெய்கள் மிகவும் உதவியாக இருக்கிறது.

 • காஃபினேட் டீ அல்லது காபி குடிக்கவும்

தேநீர் அல்லது காபி போன்ற காஃபின் நிறைந்த பானங்களை குடிப்பதால் தலைவலி நீங்கும்.

 • யோகா பயிற்சி

மன அழுத்தத்தை குறைக்க, நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க, வலியைக் குறைக்க மற்றும் உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த யோகா ஒரு சிறந்த வழி முறையாகும்.

 • இஞ்சி தேநீர்

இஞ்சி வேரில் தலைவலியை போக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் உட்பட பல நன்மை பயக்கும் பொருட்கள் உள்ளன.

 • உடற்பயிற்சி

தலைவலியின் தீவிரத்தை குறைப்பதற்கான எளிய வழிகளில் ஒன்று உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதாகும்.

 • தலை மசாஜ்

உரிமைதுறப்பு (Disclaimer): 

இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் எங்கள் அறிவு மற்றும் அனுபவத்தில் மிகச் சிறந்தவை, மேலும் அதை முடிந்தவரை சரியான  மற்றும் துல்லியமானதாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம், எனினும், இதை ஒரு தொழில்முறை நிபுணரின் (மருத்துவர்கள்) பரிந்துரைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. ஆலோசனை, நோயறிதல் அல்லது வீட்டு  சிகிச்சை போன்றவற்றையே நாங்கள் வழங்குகின்றோம். 

Logintohealth இன் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு தேவையான சில பொதுவான தகவல்களை  வழங்குவதே எங்கள் நோக்கமாகும். மேலும், இதில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களின் துல்லியம் குறித்து எந்த  உத்தரவாதமும் நாங்கள் அளிக்கவில்லை. எந்தவொரு  மருந்து அல்லது சிகிச்சைக்கான எச்சரிக்கையைப் பற்றி குறிப்பிடுகிறோம் என்றாலும், நாங்கள் அந்த மருந்தை செய்கிறோம் என்று அர்த்தமில்லை. மேலும், ஒரு நிபுணரின் முறையான ஆலோசனை இல்லாமல் அதை உட்கொள்ளுதல் பாதுகாப்பு அளிக்காது. மருந்துகள் அல்லது சிகிச்சையின் எந்தவொரு விளைவிக்கும் Logintohealth பொறுப்பேற்காது. நீங்கள் உட்கொள்ளும் மருந்து குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க பரிந்துரைக்கிறோம்


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox