குடலிறக்கம் என்றால் என்ன | Hernia meaning in Tamil

டிசம்பர் 3, 2020 Lifestyle Diseases 5684 Views

हिन्दी Bengali Tamil

ஹெர்னியா என்பது குடலில் உண்டாகும் ஒரு வகை சிக்கலாகும். குடலிறக்கம் காரணமாக, வயிற்றில் துளைகள் ஏற்படுகின்றது  மற்றும் அவை வீங்கிய வடிவத்தில் வெளியே தெரிகின்றன. இதனால் இடுப்பின் தசைகள் பலவீனமடைகின்றன. ஹெர்னியா நோய் ஆண்கள், பெண்கள் என இருபாலினரிடத்திலும் காணப்படுகிறது. எனினும், இந்த நோய் பெரும்பாலும் ஆண்களில் அதிகமாக காணப்படுகிறது. இன்றையப் பதிவில் குடலிறக்கம் என்றால் என்ன, என்பது குறித்த தகவல்களை விரிவாக அறிந்து கொள்வோம்.

  • குடலிறக்கம் என்றால் என்ன ? (What is hernia in Tamil?)
  • குடலிறக்கத்தின் வகைகள் யாவை? (What are the types of hernia in Tamil?) 
  • குடலிறக்கத்திற்கான காரணம் என்ன? (What are the causes of hernia in Tamil?)
  • குடலிறக்கத்தின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of hernia in Tamil?)
  • குடலிறக்கத்திற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for hernia in Tamil?)
  • குடலிறக்கத்தை எவ்வாறு தடுப்பது? (How to prevent hernia in Tamil?)

குடலிறக்கம் என்றால் என்ன ?  (What is hernia in Tamil?)

குடலிறக்கம் காரணமாக, வயிற்றின் தசைகள் பலவீனமடைகின்றன மற்றும் இந்தத் தசைகள்  வீக்கம் அடைகின்றன. குறிப்பாக ஆண்களில் குடலிறக்கத்தின் சிக்கல்  அதிகமாக  உள்ளது. சிலருக்கு குடலிறக்கத்தின் பிரச்சினை பிறவியிலிருந்தே இருக்கின்றது. குடலிறக்கம் தோன்றுவதால் இரத்த நாளங்களில் தசைகள் அழுத்தத்தை செலுத்துகின்றது. மேலும், இது இரத்த ஓட்டத்தை நிறுத்தி அதிக சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

குடலிறக்கத்தின் வகைகள் யாவை? (What are the types of hernia in Tamil?) 

குடலிறக்கம் ஐந்து வகைப்படும், அவை :

  • ஆம்ப்ளிக்கள் ஹெர்னியா (Umbilical hernia) – சிறு குழந்தைகளுக்கு தொப்புள் குடலிறக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக ஆறு மாதங்களுக்குள் உள்ள சிறு குழந்தைகளுக்குஇந்த வகை ஹெர்னியா அதிகமாக ஏற்படுகின்றது.
  • ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா (Sports hernia) இந்த வகை குடலிறக்கம் அடிவயிற்றின் கீழ் மற்றும் தொடையின் நடுப்பகுதியில் ஏற்படுகிறது
  • இன்ஸிஜனல் ஹெர்னியா (Incisional hernia)  இந்த வகை  குடலிறக்கம் வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு நபருக்கு வர வாய்ப்பு உள்ளது
  • ஹாயிட்டல்  ஹெர்னியா (Hiatal hernia) –  இந்த வகை ஹெர்னியா வயிற்றுப் பகுதியில் உள்ள டாயஃப்ரம் வழியாக மார்பு வரையுள்ள தசைகளையும் மற்றும் வயிற்று தசைகளையும் பாதிக்கிறது.

குடலிறக்கத்திற்கான காரணம் என்ன? (What are the causes of hernia in Tamil?)

  • அதிக எடையை தூக்குவதன் மூலம்.
  • இடுப்பு தசைகளில் காயம் ஏற்பட்டதன் காரணமாகவும்.
  • சில அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டதன் விளைவாகவும் ஏற்படுகின்றது.
  • அதிக உடல் பருமன் காரணமாகவும் உண்டாகிறது.
  • மலச்சிக்கல் சிக்கல்களாலும் ஏற்படுகின்றது
  • பெண்களுக்கு  கர்ப்பக்காலத்தில் தசைகள்  விரிவடைவதினாலும் ஹெர்னியா ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
  • வயதாவதினால் தசைகள் பலவீனமாக இருக்கின்றன, இதுவும் ஒரு  காரணமாகிறது
  • நாள்பட்ட இருமல் காரணமாகவும்  ஏற்படுகின்றது.

குடலிறக்கத்தின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of hernia in Tamil?)

  • வயிற்று கொழுப்பை விலக்குதல்.
  • மலத்தை வெளியேற்றுவதில் சிக்கல்.  
  • அடிவயிற்றில் வீக்கம்
  • நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது அல்லது நிற்கும்போது வலி உண்டாகும்.

குடலிறக்கத்திற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for hernia in Tamil?)

  • ஹெர்னியாவுக்கு மருத்துவர்களால் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையிலும் இரண்டு வகையான அறுவை சிகிச்சைகள் உள்ளன. திறந்த அறுவை சிகிச்சை மற்றும் லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சை
  • திறந்த அறுவை சிகிச்சைக்கு  பின்னர்  நோயாளி ஆறு மாதங்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு, அந்த நபர் நடக்கவோ, உடற்பயிற்சி செய்யவோ கூடாது
  • லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் பொது மயக்க மருந்து கொடுத்து, உள்புற அறுவை சிகிச்சை செய்கின்றனர். லேபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் உடலில் ஒரு சிறிய கீறல் மட்டுமே  செய்யப்படுகிறது. இது திசுவைச் சுற்றி நிகழ்கிறது. இதனால் தீங்கு விளைவதில்லை
  • இதய பிரச்சினைகள் உள்ள ஒருவருக்கு குடலிறக்கம்  உண்டானால் லேபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்

குடலிறக்கத்தை எவ்வாறு தடுப்பது? (How to prevent hernia in Tamil?) 

  • உடல் எடையைக் கட்டுப்படுத்து வேண்டும்.
  • ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • மலச்சிக்கலை ஏற்படுத்தாத வகையில்  யோகாவையும் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  • எடையை தூக்கும் போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.
  • புகைப்பதை நிறுத்துங்கள்.
  • உங்களுக்கு தொடர்ந்து இருமல் இருந்தால், அதை ஒரு மருத்துவரிடம் பரிசோதித்து இருமலுக்கான சிகிச்சையைத் தொடங்குங்கள்
  • மலம் கழித்தல் மற்றும் வெளியேற்றத்தில் அதிக அழுத்தம் தருவதைத் தவிர்க்கவும்.

குடலிறக்கத்தின் ஆரம்ப அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக மருத்துவரைத் தொடர்புகொண்டு குடலிறக்கத்திற்கு சிகிச்சையளிக்கவும். குடலிறக்கம் நோய் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற  விரும்பினால், பொது அறுவை சிகிச்சை மருத்துவரைத் (General Surgeon) தொடர்பு கொள்ளுங்கள். 


மும்பையில் சிறந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவர் (Best General Surgeon in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவர் (Best General Surgeon in Delhi)

பெங்களூருவில் சிறந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவர் (Best General Surgeon in Bangalore)

சென்னையில் சிறந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவர் (Best General Surgeon in Chennai)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha