உடல் வலிக்கான வீட்டு வைத்தியம் | Home remedies for body ache
டிசம்பர் 4, 2020 Lifestyle Diseases 3026 Viewsஉடல் வலியின் சிக்கல் அனைவரையும் ஏதோ ஒரு வழியில் பாதிக்கிறது, இதற்கு முக்கிய காரணம் உணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாததே ஆகும். நீங்கள் உட்கொள்ளும் உணவில் புரதச்சத்து இருக்க வேண்டும். வயது அதிகரிப்பதன் விளைவாக மூட்டுகள் மற்றும் கால்களில் வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனை, வீட்டு வைத்தியத்தின் உதவியுடன் குணமாக்க இயலும். ஏதேனும் கடுமையான காயம் காரணமாக உடலில் வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். இது தவிர, அடிக்கடி வலி நிவாரண மருந்துகளை எடுத்துக் கொள்வதன் விளைவாக மனித உடலுக்கு தீங்கு விளைகிறது. அதனால் இது போன்ற உடல் உவாதிகளுக்கு சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்த வேண்டும். இவை உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிப்பதில்லை. இந்தக் கட்டுரையில், உடல் வலிக்கான வீட்டு வைத்தியம் குறித்த தகவல்களை விரிவாகக் கூறுகிறோம்.
உடல் வலிக்கான வீட்டு வைத்தியங்கள் யாவை? (What are the home remedies for body pain in Tamil?)
உடல் வலியைப் போக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள் பின்வருமாறு,
- உடல் வலியைப் போக்க செர்ரி பயன்படுத்தப்படுகிறது – செர்ரி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஓர் உணவாகும், இதில் அதிக அளவில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது மூட்டு மற்றும் தசை வலியை நீக்குகிறது. மூட்டுவலி பிரச்சினை உள்ளவர்கள் செர்ரி ஜூஸ் குடிக்க வேண்டும். இது தவிர, நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 செர்ரிகளை மென்று சாப்பிடுங்கள். இதன் மூலம் மூட்டு பிரச்சினைகள் குறையத் தொடங்குகின்றன.
- உடல் வலியைப் போக்க வாழைப்பழங்களைப் பயன்படுத்துதல் – தினமும் வாழைப்பழங்களை உட்கொள்வதன் மூலம் உடல் இறுக்கமாகவும் பொருத்தமாகவும் இருக்கும். வாழைப்பழங்களில் தசைகளை வலுப்படுத்த உதவும் பொட்டாசியங்கள் அதிக அளவில் உள்ளன. இது சோர்வு, தசைப் பிடிப்புகள், ஒரு நபரின் பலவீனம் ஆகியவற்றை நீக்குகிறது. உடல் வலி பிரச்சனைகளை நீக்க, வாழைப்பழத்தை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். வாழைப்பழ பால், வாழை பழ சாலட் போன்று பல வழிகளில் நீங்கள் வாழைப்பழங்களைப் பயன்படுத்தலாம். இதனால் நீங்கள் பொட்டாசியம் மற்றும் கால்சியம் இரண்டையும் பெறமுடிகிறது. (மேலும் படிக்க – மூல வாழைப்பழத்தின் நன்மைகள்)
- கல் உப்பின் நன்மைகள் – கல் உப்பு இயற்கையாகவே மெக்னீசியத்தைக் கொண்டுள்ளது. இவை திசுக்கள் மற்றும் தசைகளின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. உடல் வலி பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் அளிக்கிறது. பழங்காலத்திலிருந்து உடல் வலியைப் போக்க கல் உப்பு பயன்படுகிறது. நீங்கள் கல் உப்பைப் உடல் வலி நிவாரணத்திற்கு பயன்படுத்த விரும்பினால், சிறிது கல் உப்பை சூடான நீரில் சேர்த்து, அந்த நீரில் குளிப்பதன் மூலம் உடல் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. இது தசை பிடிப்பு மற்றும் உடல் வலியை நீக்குகிறது.
- கடுகு எண்ணெயின் பயன்பாடு – கடுகு எண்ணெயைப் பழங்காலத்திலிருந்தே மசாஜ் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. உடல் வலியின் சிக்கலைக் குணப்படுத்த, கடுகு எண்ணெயை சூடாக்கி மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெயுடன் மசாஜ் செய்யும்போது, தசைகள் தளர்வாகின்றன. இரத்த ஓட்டம் சீராகின்றது. கடுகு எண்ணெயைப் பயன்படுத்த, ஒரு பாத்திரத்தில் பத்து பூண்டு பற்களை வைத்து நான்கு தேக்கரண்டி கடுகு எண்ணெயைச் சேர்த்து சூடாகி குளிர்ந்த பிறகு மசாஜ் செய்யுங்கள். இதில் கற்பூரத்தையும் சேர்த்து மசாஜ் செய்யலாம். (மேலும் படிக்க – ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்)
- இலவங்கப்பட்டையின் பயன்பாடு – இலவங்கப்பட்டை ஒரு நல்ல வீட்டு மருந்தாக கருதப்படுகிறது. இது வயிறு தொடர்பான பிரச்சினையை குறைக்க உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு நன்மை பயக்கிறது. இது தவிர, உடல் வலி பிரச்சினைக்கு நிவாரணம் அளிக்க மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. இதில் இயற்கையாகவே ஆன்ட்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்ட்டி செப்டிக் பண்புகள் உள்ளன. இவை மூட்டு வலி மற்றும் தசை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. உங்களுக்கு மூட்டு வலி இருந்தால், இலவங்கப்பட்டையை பயன்படுத்தவும். இதைப் பயன்படுத்த, ஒரு கிளாஸில் சூடான பால் ஊற்றி தேன் மற்றும் இலவங்கப்பட்டை தூளை சேர்த்து பருகவும். இந்த பாலை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்ளலாம். இது தவிர, இலவங்கப்பட்டையை பேஸ்ட் செய்து மூட்டுகளில் மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
- இஞ்சியின் நன்மைகள் – இஞ்சியில் இயற்கையாகவே ஆன்ட்டி செப்டிக், ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை உள்ளன. இது ஆன்ட்டி அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளது. இது இரத்த ஓட்டம் மற்றும் உடலில் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. இஞ்சி டீ குடிப்பதன் மூலம் உடல் வலியை குறைக்க இயலும். இஞ்சி தசை வலி மற்றும் தசைப் பிடிப்பைக் குறைக்கிறது. ஒரு துணியில் இஞ்சி பேஸ்டைக் கட்டி, வலிக்கும் இடத்தில் அதைக் கட்டுங்கள். சிறிது நேரம் கழித்து அதைத் திறக்கவும். இது வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. உங்களுக்கு மூட்டு வலி இருந்தால், இந்த செயல்முறையை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை செய்யவும். (மேலும் படிக்க – இஞ்சியின் நன்மைகள் மற்றும் தீமைகள்)
- ஆப்பிள் வினிகர் – ஆப்பிள் வினிகரில் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தசை வலியைக் குறைக்க உதவுகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. மூட்டு வல பிரச்சினைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பில் வினிகர் கலந்து குடிக்க வேண்டும். மேலும் ஒரு வாளி தண்ணீரில் சிறிது ஆப்பிள் வினிகரை சேர்த்து குளிக்கவும். இது உங்கள் உடல் வலி பிரச்சினையை குறைக்கிறது. (மேலும் படிக்க – ஆப்பிள் வினிகரின் நன்மை)
- மஞ்சள் பயன்பாடு – மஞ்சள் இயற்கையாகவே ஆன்ட்டி செப்டிக் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் (Antibacterial) பண்புகளைக் கொண்டுள்ளது. மற்றும் இது ஆன்ட்டி அழற்சி பண்புகளைக் கொண்டிருப்பதால் வலி மற்றும் காயத்தின் சிக்கலை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. இது ஒரு வகையில் வலி நிவாரணியாக செயல்படுகிறது. மஞ்சளை இரண்டு வழிகளில் பயன்படுத்தப்படலாம். ஒரு கிளாஸ் பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சள் கலந்து குடிக்கவும். மஞ்சள் பால், வலியைக் குறைக்க நன்மை பயக்கிறது. இது தவிர, மஞ்சள் பேஸ்டை வலி நிறைந்த பகுதியில் தடவலாம். இது (மற்றும் படிக்க – யோனியில் வலி )
நீங்கள் பல நாட்களாக உடல் வலியால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் அருகிலுள்ள பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூருவில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)