பல் சொத்தைக்கான வீட்டு வைத்தியம் | Home remedies for cavity in Tamil
மே 1, 2021 Lifestyle Diseases 968 ViewsEnglish हिन्दी Bengali Tamil العربية
சொத்தை என்பது பல்லில் ஏற்படும் ஒரு சிறிய துளையாகும், நாளடைவில் இது பெரியதாகவும் ஆழமாகவும் வளர்கிறது. பல் சொத்தைக்கு சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியமானதாகும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம், இந்த சிக்கலைக் கட்டுப்படுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். பல் சொத்தையைத் தடுக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இன்றையப் பதிவில், பல் சொத்தைக்கான வீட்டு வைத்தியம் குறித்து தெரிந்து கொள்வோம்.
பல் சொத்தைக்கு சிகிச்சையளிப்பதற்கான வீட்டு வைத்தியம் (Home remedies to treat cavity in Tamil):
பல் சொத்தை என்பது, மிகவும் பொதுவான வாய்வழி சுகாதார பிரச்சினையாகும். சொத்தைப் பற்களுக்கு சிகிச்சையளிக்க சில வீட்டு வைத்தியம் உள்ளன, அவை:
- ஃவுளூரைடு மவுத்வாஷ் ( Fluoride mouthwash): தாதுக்களின் குறைபாடு காரணமாக பல் சிதைவு ஏற்படுகின்றது. ஃவுளூரைடு பற்களுக்கு நன்மை பயக்கிறது மற்றும் ஃவுளூரைடு மவுத்வாஷைப் பயன்படுத்துவது பல் சொத்தையிலிருந்து விடுபட உதவும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாகும்.
- கிராம்பு (Cloves): கிராம்பில் உள்ள ஆன்ட்டி அழற்சி மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளின் காரணமாக, கிராம்பு பல் வலியைக் குறைத்து, பல் சொத்தை பரவாமல் தடுக்கிறது.
- பூண்டு (Garlic): பூண்டு பல வகையான ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கிறது. பூண்டு வாய்வழி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இதன் ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி ஃப்பன்ங்கள் பண்புகள் வலி நிவாரணியாக செயல்படுகின்றன. (மேலும் வாசிக்க- பூண்டின் நன்மைகள்)
- எலும்பு குழம்பு (Bone broth): எலும்பு குழம்பு என்பது ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் விலங்கு எலும்புகளை வேகவைத்து தயாரிக்கப்படும் சூப் ஆகும். இதில் நல்ல அளவில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளன, அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் பல் சிதைவைத் தடுக்கிறது.
- உப்பு நீர் (Salt water): வாய்வழி சுகாதாரப் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உப்பு நீர் மிகவும் பொதுவான ஓர் வீட்டு வைத்தியம். இது பாக்டீரியாக்களை அழிக்கிறது மற்றும் வாயின் pH அளவை நடுநிலையாக்குகிறது.
- கிராம்பு எண்ணெய் (Clove oil): கிராம்பில் உள்ள யூஜெனோல் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது. கிராம்பு எண்ணெய் பல் சொத்தையினால் ஏற்படும் வலிக்கு விரைவான நிவாரணம் அளிக்கிறது.
- எண்ணெய் (Oil): வாயை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் எண்ணெயால் கொப்புளிப்பதன் மூலம், வாயிலிருந்து பாக்டீரியாக்களை நீக்க இயலும். இது பல் சொத்தை மற்றும் பல் சிதைவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
- எலுமிச்சை (Lemon): எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் கிருமிகளைக் கொன்று, பல் சொத்தையினால் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. வலியை குறைக்க எலுமிச்சை துண்டுகளை மென்று, சுத்தமான தண்ணீரில் வாய் கொப்புளிக்க வேண்டும். (மேலும் வாசிக்க- எலுமிச்சையின் நன்மைகள்)
- தேயிலை மர எண்ணெய் (Tee tree oil): தேயிலை மர எண்ணெயில் ஆன்ட்டி அழற்சி மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, இது பல் சொத்தையை எதிர்த்துப் போராட உதவுகிறது. தேயிலை மர எண்ணெயைக் கொண்டு உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளை மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்புளிக்க வேண்டும்.
வீட்டு வைத்தியங்களின் மூலம், பல் சொத்தைக்கு நிவாரணம் அளிக்க முடியவில்லை எனில், உடனடியாக ஒரு பல் மருத்துவரைத் (Dentist) தொடர்பு கொள்ளுங்கள்.
பெங்களூரில் சிறந்த பல் மருத்துவர்
குர்கானில் சிறந்த பல் மருத்துவர்