தொண்டையை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் | How to clean the throat in Tamil 

ஏப்ரல் 22, 2021 Lifestyle Diseases 408 Views

English हिन्दी Tamil

தொண்டையை எதற்காக சுத்தம் செய்ய வேண்டும்? சுத்தமான தொண்டையுடன் இனிமையான மற்றும் தெளிவான குரலை பராமரிக்க நாம் அனைவரும் விரும்புகிறோம். தொண்டை சுத்தமாக இருந்தால் குரல் தெளிவாகிறது. தொண்டை உடலின் மிக முக்கியமான பகுதியாகும். பல வகையான இன்னல்களைத் தடுக்க நாம் அனைவரும் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க முயற்சிக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் தொண்டை தொடர்பான சிக்கல்களைக் குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்களைக் கண்டறிய விரும்புகிறார்கள். இன்றையப் பதிவில், தொண்டையை எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்தும் தொண்டையை சுத்தம் செய்ய உதவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள், தொண்டையை சுத்திகரிக்கும் முறை குறித்தும் பார்ப்போம். 

  • தொண்டையை சுத்தம் செய்வது என்றால் என்ன? (What is cleaning the throat in Tamil?) 
  • தொண்டையை எவ்வாறு சுத்தம் செய்வது?  (How to clean the throat in Tamil?) 
  • தொண்டையை சுத்தம் செய்ய எதை சாப்பிட வேண்டும்? (What to eat in order to clean the throat in Tamil?) 

தொண்டையை சுத்தம் செய்வது என்றால் என்ன? (What is cleaning the throat in Tamil?) 

தொண்டையை சுத்தம் செய்வது என்பது குரலை அழகாகவும், இனிமையாகவும் மாற்ற தொண்டையை சுத்திகரிக்கும் செயல்முறையாகும். தொண்டை தொடர்பான பிரச்சினைகள் உண்டானால் பேசுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக தொண்டையில் புண் மற்றும் சளி உருவாகிறது. மேலும், கீழ் சுவாசக் குழாயில் இருமல் ஏற்படுகின்றது. ஒரு நபர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தால் இருமல் உருவாகிறது. சில சமயங்களில் ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கும் இருமல் உருவாகிறது. தொண்டையை சுத்திகரிக்கும் முறை என்பது, உறுப்புகளை பாதுகாக்கும் ஒரு வகையான செயல்முறையாகும். இது தொண்டையில் உண்டாகும் வீக்கத்தைத் தடுக்கிறது மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுகளைத் தடுக்கிறது. 

தொண்டையை எவ்வாறு சுத்தம் செய்வது? (How to clean the throat in Tamil?) 

பின்வரும் வீட்டு வைத்தியங்கள் தொண்டையை சுத்திகரிக்க பயனுள்ளதாக இருக்கிறது, அவை: 

  • எலுமிச்சை மற்றும் தேன் கொண்டு தொண்டையை சுத்தம் செய்யுங்கள் (Cleanse the throat with lemon and honey):  தொண்டையை சுத்தம் செய்ய சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். எலுமிச்சை மற்றும் தேன் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது. தொண்டை நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பதாலும் தொண்டை பாதிப்பைத் தடுப்பதாலும் இவை நன்மை பயக்கிறது. இது கபத்தை நீக்குகிறது மற்றும் குரலை தெளிவாக்குகிறது. தொண்டை புண்ணால் பாதிக்கப்பட்ட நபர்கள் இதை குடிப்பதன் மூலம் நிவாரணம் பெற இயலும். 
  • வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும் (Drink warm water):  தொண்டையை பராமரிக்க வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். கபம் மற்றும் தொற்றுநோயை அகற்றவும் இது பயன்படுகிறது. இது குரலை மேம்படுத்துகிறது. மேலும், சூடான நீர் மற்றும் சூடான சூப் போன்ற பிற சூடான திரவங்களை குடித்த பிறகு இருமல் வெளியே வரத் தொடங்குகிறது. தொண்டையில் வலி இருந்தால் சூடான திரவங்களை குடிக்கவும். 
  • உப்பு நீரில் வாய் கொப்புளிக்கவும் (Gargle with salt water): தொண்டை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் ஓர் எளிதான வீட்டு வைத்தியம் உப்பு நீரில் வாய் கொப்புளிப்பாதாகும். இது தொண்டையில் திரண்டு உள்ள கபத்தை தளர்த்துவதற்கு உதவுகிறது. மற்றும் இருமும்போது கபம் எளிதாக அகற்றப்படுகிறது. பெரும்பாலும் குளிர்காலத்தில், மக்கள் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இது தொண்டையை சுத்திகரிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து, அந்த நீரைக் கொண்டு கொப்புளிக்கவும். சரியான அளவில் உப்பை உபயோகிக்க வேண்டும், ஏனெனில் அதிகப்படியான உப்பு தொண்டையை வறட்சி செய்யக்கூடும். 
  • நீரேற்றமாக இருங்கள் (Be hydrated): தொண்டையை சுத்திகரிக்க அதிகளவில் தண்ணீர் குடிக்கவும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. மக்கள் அனைவரும் குளிர்காலத்திலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வானிலை மாற்றங்கள் காரணமாக ஒவ்வாமை மற்றும் தொண்டையில்  புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், தொண்டை வலி இருந்தால் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். (மேலும் வாசிக்க- நீரிழப்புக்கான காரணங்கள்

தொண்டையை சுத்தம் செய்ய எதை சாப்பிட வேண்டும்? (What to eat in order to clean the throat in Tamil?) 

தொண்டை சுத்தமாக வைத்திருக்க பின்வரும் சில உணவுப் பொருட்களை உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில், இவை தொண்டையை சுத்திகரித்து குரலை மேம்படுத்துகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, தானியங்கள் மற்றும் பச்சை காய்கறிகளின் உட்கொள்ளல் தொண்டையை பராமரிக்கப் பயன்படுகிறது. தொண்டையில் வலி இருந்தால் மென்மையான உணவை உண்ணுங்கள். மற்றும் குளிர்ச்சியான உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை தொண்டைக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் மற்றும் தொண்டை வலிக்கும் வழிவகுக்கிறது. (மேலும் வாசிக்க-  இருமலின் போது என்ன சாப்பிட வேண்டும்

தொண்டை வலி பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox