பாலின் நன்மைகள் | Benefits of milk in Tamil

ஏப்ரல் 13, 2021 Bone Health 1449 Views

English हिन्दी Tamil العربية

இந்தியாவில், பழங்காலத்திலிருந்தே பால் பருகுவது வழக்கமாக உள்ளது. பால் மனிதர்களுக்கான வரம் என வேதங்களில் முனிவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இதில், உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன. இந்தப் பதிவின் மூலம், பாலின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்துக் காண்போம். 

 • பாலில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What nutrients are found in milk in Tamil?)
 • பாலின் நன்மைகள் யாவை? (What are the benefits of milk in Tamil?)
 • பாலின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of milk in Tamil?)
 • பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் யாவை? (What are milk made products in Tamil?) 

பாலில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What nutrients are found in milk in Tamil?) 

பாலில் கால்சியம், வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ், 0.94 அளவு புரதம், 1.08 அளவு கொழுப்பு மற்றும் 1.36 அளவில் கார்போஸ் ஆகியவை உள்ளன.

பாலின் நன்மைகள் யாவை? (What are the benefits of milk in Tamil?) 

பால், பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது: 

 • தினசரி காலையில் சூடான பாலை உட்கொள்ள வேண்டும். எலும்புகளை வலிமையாக்க பால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில், இதில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. கால்சியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்கிறது மற்றும் கீல்வாத நோயின் தாக்கத்தை தடுக்கிறது. 
 • நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தினசரி காலையில் பாலை உட்கொள்ளத் தொடங்குங்கள். (மேலும் வாசிக்க- உடல் எடையைக் குறைப்பதில் அவுரிநெல்லிக்காயின் நன்மைகள்
 • நீங்கள் மன அழுத்தத்தை உணர்ந்தால், காலையில் சூடான பாலை உட்கொள்ள வேண்டும். பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இவை மன அழுத்தத்தை நீக்க உதவுகின்றன. தினசரி காலையில் பால் உட்கொள்வதன் மூலம் பலவீனத்தைத் தவிர்க்க இயலும். மேலும், உடலை உற்சாகப்படுத்துகிறது. 
 • பெண்கள் மாதவிடாய் காலத்தில் காலையில் சூடான பாலைக் குடிக்க வேண்டும். பாலில் கால்சியம் மற்றும்  ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன, இவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. (மேலும் வாசிக்க – மாதவிடாய் பிரச்சினைகள்
 • தூக்கமின்மையால் அவதிப்படும் நபர்கள் இரவில் பால் பருக வேண்டும். தூக்கம் தொடர்பான கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்க பால் உதவுகிறது. இரவில் பால் உட்கொள்வதன் மூலம், செரிமானப் பிரச்சினைகளுக்கும் சிகிச்சையளிக்க முடிகிறது. (மேலும் வாசிக்க – வளர்சிதை மாற்றம் என்றால் என்ன
 • பெண்கள் தங்கள், முகத்தை பொழிவுடன் வைத்திருக்க தினசரி இரவில் பால் உட்கொள்ள வேண்டும். 

பாலின் பக்க விளைவுகள் யாவை? (What are the side effects of milk in Tamil?) 

பாலில் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் எதுவுமில்லை, எனினும் அதிக அளவில் பால் குடிப்பதால் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. தினசரி சரியான அளவில் பால் பருக வேண்டும்.

பால் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் யாவை? (What are milk made products in Tamil?) 

 • பாலை பயன்படுத்தி பல்வேறு வகையான உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 
 • மல்புவா, ரப்ரி மற்றும் பல வகையான இனிப்புகள் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. 
 • சீஸ், கோவா, கீர், பன்னீர் போன்றவையும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. 

பால் உட்கொள்வதினால் உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள். 


டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்

மும்பையில் சிறந்த பொது மருத்துவர்

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர்

சென்னையில் சிறந்த பொது மருத்துவர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox