மார்பக வலிக்கான வீட்டு வைத்தியம் | Home remedies for breast pain in Tamil
ஏப்ரல் 22, 2021 Lifestyle Diseases 4440 Viewsமார்பக வலி என்பது பெண்களுக்கு உண்டாகும் ஒரு பொதுவான பிரச்சினையாகும், குறிப்பாக மாதவிடாய் காலத்தில் பலரும் மார்பக வலியை அனுபவிக்கின்றனர். மார்பக வலி ஏக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. 40% முதல் 50% பெண்கள் மார்பக வலியால் பாதிக்கப்படுகின்றனர். மார்பகங்களில் வீக்கம் மற்றும் மார்பகங்களின் கனத்தன்மை ஆகியவை மார்பக வலியின் பொதுவான அறிகுறிகளாகும். சில பெண்கள் தீவிரமான மார்பக வலியை அனுபவிக்கிறார்கள். மாதவிடாயின் போது ஏற்படும் மார்பக வலியை சுழற்சி வலி மற்றும் சுழற்சியற்ற வலி என இரண்டு வகைகளாக வகைப்படுத்தலாம். சுழற்சி வலியின் போது மாதவிடாயில் மார்பக வலி உண்டாகிறது, சுழற்சியற்ற வலியின் போது மாதவிடாயில் வலி விலகுகிறது. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக மாதவிடாய் காலத்தில் மார்பக வலி ஏற்படுகின்றது. மேலும், வேறு பல காரணிகளும் மார்பக வலிக்கு வழிவகுக்கிறது. தவறான அல்லது பொருத்தமற்ற ப்ரா அணிவது, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் சில சமயங்களில் தாய்ப்பால் கொடுப்பதாலும் மார்பக வலி ஏற்படக்கூடும். இந்த பிரச்சினைக்கு நிவாரணம் அளிக்க சில வீட்டு வைத்தியங்கள் உதவுகிறது. இருப்பினும், மார்பக வலி தொடர்ந்தால் ஒரு நல்ல மகப்பேறு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்தப் பதிவின் மூலம், மார்பக வலிக்கான வீட்டு வைத்தியம் குறித்து காண்போம்.
மார்பக வலிக்கான வீட்டு வைத்தியம் என்ன? (What are the home remedies for breast pain in Tamil?)
மார்பக வலி பிரச்சினை பெண்களிடையே மிகவும் பொதுவானதாகும், எனினும் வலியின் தீவிரம் அதிகரிக்கும் போது சிகிச்சை அவசியமாகிறது. பின்வருவன, மார்பக வலியை போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்களாகும்:
- ப்ரிம்ரோஸ் எண்ணெய் (Primrose oil): ப்ரிம்ரோஸ் எண்ணெயைப் பயன்படுத்துவது மார்பக வலிக்கு சிகிச்சையளிக்க உதவும் ஓர் சிறந்த வீட்டு வைத்தியமாகும். இதில் நிறைந்துள்ள காமோலெனிக் அமிலம் உடலில் உள்ள ஹார்மோன் அளவை சமன் செய்யும் கொழுப்பு அமிலத்தை உருவாக்கி மார்பக வலியைத் தடுக்கிறது. ப்ரிம்ரோஸ் எண்ணெயைக் கொண்டு மார்பகங்களில் சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். இந்த செயல்முறையை இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து செய்யுங்கள். ஆயினும் வலி தொடர்ந்தால் ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
- செஸ்ட் பெர்ரி (Chest berry): செஸ்ட் பெர்ரி உட்கொள்வது மாதவிடாயின் போது உண்டாகும் சுழற்சி மார்பக வலியின் அறிகுறிகளைக் குறைக்கிறது. பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் புரோலேக்ட்டின் ஹார்மோன் மார்பக வலியைக் குறைக்கிறது. இதன் சாற்றை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உட்கொள்ளுங்கள். மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து செஸ்ட் பெர்ரியை உட்கொள்ள திட்டமிடுகிறீர்கள் எனில், அதனை உட்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
- மெக்னீசியம் (Magnesium): மெக்னீசியம் மார்பக வலியைக் குறைக்க உதவும் பயனுள்ள ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது மார்பகங்களின் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. உலர் பழங்கள், பச்சை காய்கறிகள், வாழைப்பழங்கள் மற்றும் சோயா பீன்ஸ் போன்ற மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். ஏனெனில், அவை மாதவிடாய் காலத்தில் உண்டாகும் மார்பக வலியைக் குறைக்கின்றன. மற்றும் டார்க் சாக்லேட்டிலும் நல்ல அளவில் மெக்னீசியமும் உள்ளது. (மேலும் படிக்க- மாதவிடாய் பிரச்சினைகள்)
- ஆப்பிள் வினிகர் (Apple vinegar): ஆப்பிள் வினிகர் உடல் ஆரோக்கியத்திற்கு பயனளிப்பதோடு மார்பக வலியையும் குறைக்க உதவுகிறது. இது ஆண்டிசெப்டிக் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டு பண்புகளைக் கொண்டுள்ளது, இவை மார்பக வலியைக் குறைக்க உதவுகின்றன. ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு சொட்டு ஆப்பிள் வினிகர் சேர்த்து அல்லது தண்ணீரில் சம அளவு ஆப்பிள் வினிகர் சேர்த்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளுங்கள். இந்த கலவையை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை குடிக்கவும். (மேலும் படிக்க- ஆப்பிள் வினிகரின் நன்மைகள்)
- வைட்டமின் ஈ (Vitamin E): வைட்டமின் ஈ தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. மேலும், ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துகிறது, இதனால் மார்பக வலி மற்றும் மாதவிடாய் வலி குறைகிறது. மாதவிடாய் வலியின் பிற அறிகுறிகளைக் குறைப்பதிலும், இது பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியின் கூற்றுப்படி, வைட்டமின் ஈயைப் பெற 200 முதல் 400 வைட்டமின்களை உட்கொள்ள வேண்டும், மேலும் இது குறித்து மருத்துவரிடம் ஆலோசியுங்கள். வைட்டமின் ஈ நிறைந்த உணவு வகைகளான சூரியகாந்தி விதைகள், பாதாம், கீரை, டர்னிப், கடுகு கீரைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை உட்கொள்ளுங்கள். மேலும், மார்பக வலியைக் குறைக்க மார்பகங்களில் வைட்டமின் ஈ எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யுங்கள்.
- பெருஞ்சீரக விதைகள் (Fennel seeds): பெருஞ்சீரக விதைகளில் அதிகளவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன, அவை நோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. மற்றும் மார்பக வலியைக் குறைத்து உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. பெருஞ்சீரகம் விதைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, நாள் ஒன்றுக்கு பல முறை உட்கொள்ளவதன் மூலம் மார்பக வலியைக் குறைக்க இயலும். மேலும், பி.எம்.எஸ் வலியைக் குறைக்க வறுக்கப்பட்ட பெருஞ்சீரகம் விதைகளை சாப்பிடுங்கள்.
- ஆமணக்கு எண்ணெய் (Castor oil): ஆமணக்கு எண்ணெயில் பல வகையான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன மற்றும் மாதவிடாய் வலியைக் குறைக்கிறது. மார்பக வலியைக் குறைக்க ஒரு ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு மார்பகங்களில் மசாஜ் செய்யவும்.
மார்பகங்கள் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், ஒரு மகளிர் மருத்துவ நிபுணரைத் (Gynecologist) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
மும்பையில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள்
பெங்களூரில் சிறந்த மகப்பேறு மருத்துவர்கள்