மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் | Meftal Spas tablet in Tamil
டிசம்பர் 29, 2020 Lifestyle Diseases 3780 Viewsமெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் என்பது உடலில் ஏற்படும் எந்தவொரு வலிக்கும் நிவாரணத்தைப் பெற உபயோகிக்கப்படும் மாத்திரையாகும். இது வீக்கம் மற்றும் தசை வலி போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணத்தை அளிக்கிறது. பெண்களுக்கு கடுமையான மாதவிடாய் நேரத்தில் உண்டாகும் இடுப்பு வலி, எரிச்சல் உணர்வுடன் கூடிய குடல் வலி, தசைப்பிடிப்பு, தசை வலிகள், வயிற்று வலி மற்றும் இது போன்ற நிலைமைகளின் போது உண்டாகும் பிற வலிகளிலிருந்து நிவாரணம் பெறுவதற்கும் இந்த மாத்திரை பயன்படுகிறது. மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெடின் முக்கிய காரணிகள் டிசைக்ளோமைன் உப்பு (Dicyclomine salts) மற்றும் மெஃபெனாமிக் அமிலம் (Mefenamic acids) ஆகும். இன்றையப் பதிவில் மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்கள் பற்றிய விரிவான தகவல்களைப் பெறுவோம்.
- மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டின் பயன்கள் மற்றும் நன்மைகள் (Uses and benefits of Meftal Spas tablet in Tamil)
- மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் எப்போது பரிந்துரைக்கப்படுகிறது? (When is Meftal Spas tablet prescribed in Tamil?)
- மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் எவ்வாறு செயல்படுகிறது? (How does Meftal Spas tablet work in Tamil?)
- மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டின் பக்க விளைவுகள் (Side effects of Meftal Spas tablet in Tamil)
மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டின் பயன்கள் மற்றும் நன்மைகள் (Uses and benefits of Meftal Spas tablet in Tamil)
பல வகையான உடல் வலியிலிருந்து நிவாரணம் பெற மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் பயன்படுத்தப்படுகிறது, அவை:
- மாதவிடாய் பிடிப்புகள் அல்லது டைஸ்மெனோரியா (Dysmenorrhea) – மாதவிடாய் பிடிப்புகள் என்பது பெண்களுக்கு மாதவிடாயின் போது அடிவயிற்றின் கீழ் பகுதியில் ஏற்படும் வலியாகும். பல பெண்கள் மாதவிடாய் பிடிப்பை அனுபவிக்கிறார்கள். இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் மாதவிடாய் பிடிப்பை போக்க உதவுகிறது.
- மாதவிடாயில் அதிக இரத்தப்போக்கு – மாதவிடாயின் போது சில பெண்களுக்கு அதிகப்படியான இரத்தப்போக்கு உள்ளது, சிலருக்கு பெரியளவில் இரத்தப்போக்கு இருப்பதில்லை. கருப்பைச் சுவரின் தடிமனான பண்பே இரத்தப்போக்குக்கின் அளவை தீர்மானமாகின்றது. மாதவிடாயின் போது அதிகப்படியான இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தவும் இந்த மருந்து உதவுகிறது.
- தசை பிடிப்பு, மூட்டுவலி, முடக்கு வாதம், தலைவலி, பல் வலி, மியால்கியா போன்ற எந்தவொரு உடல் பாகத்தில் வலியெற்பட்டாலும் மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டை நிவாரணி மருந்தாக பயன்படுத்தலாம்.
உரிமைதுறப்பு (Disclaimer):
இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் எங்கள் அறிவு மற்றும் அனுபவத்தில் மிகச் சிறந்தவை, மேலும் அதை முடிந்தவரை சரியான மற்றும் துல்லியமானதாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம், எனினும், இதை ஒரு தொழில்முறை நிபுணரின் (மருத்துவர்கள்) பரிந்துரைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. ஆலோசனை, நோயறிதல் அல்லது வீட்டு சிகிச்சை போன்றவற்றையே நாங்கள் வழங்குகின்றோம்.
Logintohealth இன் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு தேவையான சில பொதுவான தகவல்களை வழங்குவதே எங்கள் நோக்கமாகும். மேலும், இதில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களின் துல்லியம் குறித்து எந்த உத்தரவாதமும் நாங்கள் அளிக்கவில்லை. எந்தவொரு மருந்து அல்லது சிகிச்சைக்கான எச்சரிக்கையைப் பற்றி குறிப்பிடுகிறோம் என்றாலும், நாங்கள் அந்த மருந்தை செய்கிறோம் என்று அர்த்தமில்லை. மேலும், ஒரு நிபுணரின் முறையான ஆலோசனை இல்லாமல் அதை உட்கொள்ளுதல் பாதுகாப்பு அளிக்காது. மருந்துகள் அல்லது சிகிச்சையின் எந்தவொரு விளைவிக்கும் Logintohealth பொறுப்பேற்காது. நீங்கள் உட்கொள்ளும் மருந்து குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க பரிந்துரைக்கிறோம்.
மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் எப்போது பரிந்துரைக்கப்படுகிறது? (When is Meftal Spas tablet prescribed in Tamil?)
பெரும்பாலும் நாள்பட்ட கோளாறுகள் மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்து காய்ச்சலைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் சில அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் (anti inflammatory properties) கொண்டுள்ளது. மேலும், இரைப்பைக் குழாயில் உண்டாகும் மென்மையான தசைப்பிடிப்புகளை நீக்கவும் இந்த மருந்து பயனுள்ளதாக அமைகிறது. மேலும், இது பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் அதிக இரத்த இழப்பு மற்றும் வலியைக் குறைக்கிறது.
மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் எவ்வாறு செயல்படுகிறது? (How does Meftal spas tablet work in Tamil?)
மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டில் உள்ள டிசைக்ளோமைன் உப்பில் ஆன்டிகோலினெர்ஜிக் உள்ளது, இது திடீரென உண்டாகும் வலியைத் தடுக்கிறது, இதனால் குடல் மற்றும் உள்ளுறுப்பு தசைகளை தளர்ந்து மாதவிடாய் வலியை நீக்குகிறது. டேப்லெட்டில் உள்ள மற்றொரு மூலப்பொருளான மெஃபெனாமிக் அமிலம் மிதமான வலியைக் குறைக்கும் ஒரு NSAID ஆகும். வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்ற உடலின் சில வேதியியல் எதிர்வினைகளின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் செயல்படுகிறது.
மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டின் பக்க விளைவுகள் (Side effects of Meftal Spas tablet in Tamil)
மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டிலும் சில குறைபாடுகள் உள்ளன. எனினும், அதன் பக்க விளைவுகள் கடுமையானதாக இருப்பதில்லை ஆனால் சில சந்தர்ப்பங்களில் சிலர் கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது, அவை:
- மலச்சிக்கல்.
- மயக்கம் உணர்வு.
- வாந்தி.
- வயிற்று வலி.
- சருமம் சிவப்பு நிறமாக மாறுதல் அல்லது சருமத்தில் சிவப்பு புள்ளிகள்.
- அரிப்பு.
- உடலில் அதிகப்படியான வியர்வை சுரக்கும்.
- பிபி அதிகரித்தல் மற்றும் பிற மோசமான விளைவுகள்.
- முன்னெச்சரிக்கை – ஆஸ்துமா நோயாளிகள் மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டை உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டில் பல பயன்கள் மற்றும் நன்மைகள் உள்ளன, பெரும்பாலும் உடல் வலி நிவாரணத்திற்காக மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் பரிந்துரைக்கப்படுகிறது. மற்றும், மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட் எவ்வாறு செயல்படுகிறது, மெஃப்டல் ஸ்பாஸ் டேப்லெட்டின் பக்க விளைவுகள் போன்றவற்றையும் அறிந்திருப்பீர்கள். மேலும், இதனை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் போது மட்டுமே பயன்படுத்தவும்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)