நரம்பு வலிக்கான இயற்கை வைத்தியம் | Natural remedies for nerve pain in Tamil

டிசம்பர் 20, 2020 Lifestyle Diseases 2782 Views

हिन्दी Bengali Tamil

நரம்பு வலி என்றால் என்ன (Nerve pain meaning in Tamil)

தற்போதைய சூழலில், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் வளையாது வாழ்க்கை முறையின் (sedentary lifestyle) காரணமாக, நம் உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் உண்டாகிறது. இதனால், எலும்புகள் பலவீனமடைவதுடன் பிற உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இது தவிர, உடல் செயல்பாடுகள் குறைவதால் தசை பலவீனம் மற்றும் தசை வலி ஏற்படுகிறது. மேலும், இதன் காரணமாய் உடலில் உண்டாகும் மிகவும் பொதுவான மற்றொரு சிக்கல் நரம்பு வலியாகும். இன்றையப் பதிவில், சில இயற்கை வைத்தியங்களைப் பயன்படுத்தி லேசான நரம்பு வலிக்கான வைத்தியம் குறித்து விரிவாக கூறுகிறோம்.

நரம்பு வலி சிக்கல் அனைவருக்கும் ஏற்படுகின்றதா? (Can anyone have nerve pain problem in Tamil?)

அனைவருக்கும் நரம்பு வலி சிக்கல் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த சிக்கல் மிகவும் தீவிரமானதில்லை, எனினும் சில காரணங்களால் நரம்பு வலி பிரச்சினை அதிகரிக்கிறது. நரம்பு வலி கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியமாகும். அல்லது நீங்கள்  பொதுவான நரம்பு வலியை அனுபவிக்கிறீர்கள் என்றால், சில இயற்கை வைத்தியங்களின் உதவியுடன் இதற்கு சிகிச்சையளிக்க முடியும்

நரம்பு வலிக்கான இயற்கை வைத்தியங்கள்: (Natural remedies for nerve pain)

பின்வருவன, நரம்பு வலியிலிருந்து விடுபட உதவும்  வீட்டு வைத்தியங்களாகும்.

  • கல் உப்பு (Rock salt) கல் உப்பில் அதிக அளவில் மெக்னீசியம் சல்பேட் உள்ளதால் இது வலியைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது. கல் உப்பை பயன்படுத்த, ஒரு மூட்டை கல் உப்பை வெதுவெதுபான தண்ணீர் உள்ள தொட்டியில் கொட்டவும். பின்னர், உப்பு கலந்து  இந்த தண்ணீரில் குளித்துவிட்டு அதே தொட்டியில் அரை மணி நேரம் உட்கார்ந்து கொள்ளுவதன் மூலம் நரம்பு வலியிலிருந்து எளிதில் விடுபட முடியும். இந்த செயல்முறையை நரம்பு வலி குறையும் வரை தினமும் பின்பற்றுங்கள்.
  • முள்ளங்கி (Radish) முள்ளங்கியில் இயற்கையாகவே பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. முள்ளங்கி பேஸ்ட்டைப் பயன்படுத்துவதன் மூலம் நரம்பு வலியை நீக்க இயலும். மேலும், இது சியாட்டிகா காரணமாக உண்டாகும் வலியையும் குறைக்கிறது. முள்ளங்கியில் வலியினால் உண்டாகும் அழற்சியைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் (anti inflammatory) நிறைந்துள்ளது. முள்ளங்கியைப் பயன்படுத்த, மிக்சியில் ஒரு முள்ளங்கியை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த முள்ளங்கி பேஸ்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும், வாரத்திற்கு இரண்டு முறை இந்த செயல்முறையை செய்வதன் மூலம் நன்மை பயக்கிறது.
  • வெள்ளை வில்லோ தேநீர் (White willow tea) வெள்ளை வில்லோ சாறு அனைத்து வகையான நரம்பு வலியையும் குறைக்க உதவுகிறது. இடுப்பு வலியைக் குறைக்க இது மிகவும்  நன்மை பயக்கிறது. வெள்ளை வில்லோவை உட்கொள்வதன் மூலம் உடலில் ஏற்படும் அமிலத்தின் (acidity) தாக்கத்தை தடுக்க இயலும். வெள்ளை வில்லோ சாறு வெள்ளை வில்லோ பட்டைகளிலிருந்து   பெறப்படுகிறது. வெதுவெதுப்பான நீரில், இரண்டு டீஸ்பூன் வெள்ளை வில்லோ சாறு மற்றும் தேன் சேர்த்து உட்கொள்ளுங்கள்.
  • ஆப்பிள் வினிகர் (Apple vinegar) ஆப்பிள் வினிகரை உட்கொள்வதன் மூலம் எண்ணற்ற நோய்களிலிருந்து உடலைப் பாதுகாதுக்கொள்ள இயலும். இதில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை நரம்பு வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. ஆப்பிள் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன, இது சியாட்டிகாவால் ஏற்படும் நரம்பு வலியைக் குறைக்க உதவுகிறது. நரம்பு வலியிலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியங்களில் ஆப்பிள் வினிகர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிள் வினிகரைப் பயன்படுத்த, வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை கலந்து வாரத்திற்கு இரண்டு முறை குடிக்கவும்.
  • வெந்தயம் (Fenugreek seeds) வெந்தயம் பல நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. இது நரம்பு வலி பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கவும், சியாட்டிகா வலியை நீக்கவும் உதவுகிறது. வெந்தயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன, இவை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. வெந்தயத்தை இரண்டு மணி நேரம் தண்ணீரில்  ஊறவைத்து அரைத்து வெந்தய பேஸ்ட் செய்து கொள்ளவும். பின்னர், இந்த பேஸ்ட்டில் தண்ணீரைச் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். வலி நீங்கும் வரை இந்த செயல்முறையை மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
  • யோகா ஆசனங்கள் (Yoga asanas) – யோகாசனங்கள் செய்வதன் மூலம் பல நோய்களைக் குணப்படுத்தவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இயலும். தசைகளை வலுப்படுத்தும், நரம்பு வலியிலிருந்து விடுபடவும் பல்வேறு யோகாசனங்கள் உதவுகின்றன. கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் முதுகுவலி ஆகியவற்றிலிருந்து விடுபட புஜங்கசனாம் உதவுகிறது. கோமுகசனா செய்வதன் மூலம் முதுகெலும்பை பலப்படுத்து இயலும். எனவே, நரம்பு வலியிலிருந்து நிவாரணம் பெற நீங்கள் தினமும் காலையில் யோகா ஆசனங்களை பயிற்சி செய்ய வேண்டும். ஆசனங்களில் கோமுகசனா, வீரசனா, புஜங்காசனா போன்றவற்றை செய்யுங்கள்
  • மஞ்சள் பயன்பாடு நரம்பு வலியிலிருந்து பாதுகாக்கிறது (Use of turmeric protects nerve pain) – மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது, பெரும்பாலும்  இது உணவின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் உடலை பலப்படுத்துகிறது. மேலும், மஞ்சளில் சியாட்டிகா நோயால் உண்டாகும்  வலியைப் போக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருக்கின்றன. மஞ்சளைப் பயன்படுத்த, சூடான பாலில் மஞ்சள் தூளை கலந்து குடிக்கவும். இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்வதன் மூலம் உடலுக்கு நன்மை பயக்கிறது.
  • குளிர்ந்த அல்லது சூடான ஒத்தடம் கொடுத்தல் (Cold or hot Fomentation) – பெரும்பாலும் மக்கள் நரம்புகளில் வலி உண்டாகும் போது சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தனம் கொடுக்கிறார்கள். சூடான அல்லது குளிர்ச்சியான ஒத்தனம் கொடுப்பதன் மூலம் நரம்புகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. எனினும், சூடான ஒத்தடத்தை நேரடியாக சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் காயங்கள் உண்டாகும் அபாயங்கள் உள்ளன. எனவே, சூடான ஒத்தடத்தை  நேரடியாக சருமத்தில் பயன்படுத்த வேண்டாம். குளிர்ச்சியான ஒத்தடம் கொடுக்கும் போதும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நரம்பு வலி குறித்த கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால் எலும்பியல் நிபுணரை (Orthopedist) அணுகவும்.

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.

இந்தக் கட்டுரையில் நரம்பு வலிக்கான வீட்டு வைத்தியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும், நரம்பு வலியை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள், சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.


மும்பையில் சிறந்த நரம்பியல் நிபுணர்

டெல்லியில் சிறந்த நரம்பியல் நிபுணர்

சென்னையில் சிறந்த நரம்பியல் நிபுணர்

பெங்களூரில் சிறந்த நரம்பியல் நிபுணர்


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha