பாராசிட்டமாலின் பயன்கள் | Uses and benefits of Paracetamol in Tamil

ஜனவரி 7, 2021 Lifestyle Diseases 10107 Views

English हिन्दी Bengali Tamil

பாராசிட்டமாலின் விளக்கம் (Description of Paracetamol in Tamil)

பாராசிட்டமால் என்பது அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு வலி நிவாரணியாகும். இது பொதுவாக லேசான மற்றும் மிதமின உடல் வலிகள் மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற பொதுவான சிக்கல்களுக்கு சிகிச்சையளிக்க மற்ற மருந்துகளுடன் பெரும்பாலும் இது பயன்படுத்தப்படுகிறது. பாராசிட்டமாலில் அனல்ஜெசிக் (வழி நிவாரணி) மற்றும் ஆண்டிபிரைடிக் (காய்ச்சலைக் குறைக்கும் மருந்து) பண்புகள் உள்ளன. வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் சில வேதியல் கூறுகளின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது. உடலில் புரோஸ்டாக்லாண்டின்ஸ் எனப்படும் சில ரசாயனங்கள் உள்ளன, இவை காய்ச்சல் அல்லது உடல் வலிக்களை ஏற்படுத்துகிறதுபராசிட்டமால் இந்த புரோஸ்டாக்லாண்டின்களின் உற்பத்தியைத் தடுப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் உகல் வலியைக் குறைக்கிறது. மேலும், இது வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதியில் செயல்படுகிறது. இதனால், இது உடலில் உண்டாகும் அதிக வெப்பத்தை குறைத்து, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. இன்றையப் பதிவில், பாராசிட்டமாலின் பயன்கள் மற்றும் நன்மைகள் குறித்து விளக்குகிறோம்.

பராசிட்டமாலைக் கொண்டிருக்கும் மருந்துகள் (Available medicines that contains Paracetamol in Tamil)

(ஆங்கில மருந்துகள் என்பதால் மருந்துகளின் பெயர்கள் ஆங்கிலத்திலும் குறிப்பிடப்ட்டுள்ளன)

 • கல்பால் (கிளாசோ ஸ்மித்க்லைன் மருந்துகள்) Calpol (Glaxo SmithKline Pharmaceuticals) 
 • டோலோ (மைக்ரோ லேப்ஸ் லிமிடெட்) Dolo (Micro Labs Ltd) 
 • சுமோ எல் (அல்கெம் லேபரேட்டரீஸ் லிமிடெட்)  Sumo L (Alkem Laboratories Ltd)  
 • கபிமோல் (ஃப்ரெசினியஸ் கபி இந்தியா பிரைவேட் லிமிடெட்) Kabimol (Fresenius Kabi India Pvt Ltd)  
 • ஃபெபனில் (வெரிடாஸ் ஹெல்த்கேர் லிமிடெட்) Fepanil (Veritaz Healthcare Ltd)  
 • பைரிஜெசிக் (ஈஸ்ட் இந்தியா பார்மாசூட்டிகல் ஒர்க்ஸ் லிமிடெட்)  Pyrigesic (East India Pharmaceutical Works Ltd) 
 • மாலிடென்ஸ் (அபோட்)  Malidens (Abbott) 
 • ஃபெப்ரினில் (மனீஷ் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்)  Febrinil (Maneesh Pharmaceuticals Ltd) 
 • பாசிமால் (இப்கா ​​லேபரேட்டரீஸ் லிமிடெட்)  Pacimol (Ipca Laboratories Ltd)
 • டி -98 (மேன்கைண்ட் பார்மா லிமிடெட்) T-98 (Mankind Pharma Ltd)  

பாராசிட்டமாலின் பயன்கள் மற்றும் நன்மைகள் (Uses and benefits of Paracetamol in Tamil)

 • காய்ச்சல்
 • வலி
 • முதுகின் கீழ்பகுதியில் வலி
 • தலைவலி
 • பல் வலி
 • ஒற்றைத் தலைவலி
 • நாள்பட்ட சளி
 • அறுவை சிகிச்சைக்கு பிறகு உடலில் ஏற்படும்  வலி.
 • போன்ற சிக்கல்களுக்கு பாராசிட்டமால் நன்மை பயக்கிறது.

பாராசிட்டமால் அளவு மற்றும் அதை எப்படி எடுத்துக்கொள்வது? (Dosage of Paracetamol and how to take it in Tamil?)

உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி பாராசிட்டமாலை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், இந்த மாத்திரையை உடைத்து மெல்லாமல், மாத்திரையை ஒரேடியாக விழுங்கவும்

பராசிட்டமால் கலவை (Composition of Paracetamol in Tamil):

பராசிட்டமால் (அசிடமினோபன்

பராசிட்டமாலின் பக்க விளைவுகள் (side effects of Paracetamol in Tamil):

 • கல்லீரல் பாதிப்பு
 • தோலில் எதிர்வினைகள்
 • ஆஸ்துமா உண்டாகும் ஆபத்து அதிகமாகிறது.
 • லுகோபீனியா (குறைந்த வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை)
 • குறைந்த பிளேட்லெட்ஸ் எண்ணிக்கை
 • வயிற்றில் இருந்து இரத்தப்போக்கு

பாராசிட்டமால் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் (Precautions related to Paracetamol in Tamil)

 • பாராசிட்டமால் எடுத்துக் கொண்ட 2 மணி நேரத்திற்குள் ஆன்டாசிட் மருந்துகளை உட்கொள்ள கூடாது.
 • பராசிட்டமால் எடுத்துக் கொள்ளும்போது மது அருந்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வயிற்று பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
 • கர்பகாலத்தில் பெண்கள் பராசிட்டமாலை  எடுத்துக் கொள்ளலாம். எனினும், இந்த மருந்தை எடுப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனெனில், பாராசிட்டமாலின் அளவு மற்றும் அதன் கால அளவை மருத்துவரே தீர்மானிக்க வேண்டும்
 • தாய்ப்பால் கொடுக்கும் போது பாராசிட்டமாலைப் பயன்படுத்தலாம். ஏனெனில், சிறிய அளவிலான  பாராசிட்டமால் மட்டுமே தாய்ப்பாலுக்குள் செல்கிறது.  
 • நீங்கள் நீண்டகால சிகிச்சைக்காக அசிடமினோபன் மருந்துகளை (பாராசிட்டமால்) எடுத்துக்கொண்டிருந்தால், உங்கள் சிறுநீரக செயல்பாடு, கல்லீரல் செயல்பாடு மற்றும் இரத்தக் கூறுகளின் அளவை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். ஏனெனில், அதிக அளவில் பாராசிட்டமாலல எடுத்துக் கொள்வதினால், இது கல்லீரலை சேதப்படுத்துகிறது.

பாராசிட்டமால் எப்போது உட்கொள்ளக்கூடாது? (When Paracetamol should not be consumed in Tamil?)

 • மருந்துகளினால் ஒவ்வாமை ஏற்படும் போது.
 • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்கள் இருக்கும் போது.
 • ஆல்கஹால் எடுத்துக் கொள்பவர்கள்
 • குறைந்த இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையின் போது
 • லுகோபீனியாவில் (குறைந்த வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை)

பிற மருந்துகளுடன் பராசிட்டமாலின்  தொடர்பு (Interaction of Paracetamol with other drugs in Tamil)

ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் ஒன்றோடு ஒன்று வினைபுரியும் போது மருந்துகளில் இடைவினைகள் (Interactions) ஏற்படுகின்றன. இந்த இடைவினைகள் நீங்கள் உட்கொள்ளும் மருந்ததகளின் செயல்திறன் குறைந்த ஆற்றல் மிக்கதாக மாற்றலாம். மேலும், எதிர்பாராத சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட ஒரு மருந்தின் செயல்திறனை அதிகரிக்கிறது. சில மருந்து இடைவினைகள் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. நீங்கள் பரிந்துரைக்காத அல்லது பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், அதிலுள்ள லேபிள்களைப் படித்து அதில் உபயோகிக்கப்பட்டுள்ள மருந்துகளின் இடைவினைகளைப் பற்றி அறிந்து கொள்வதே உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் செயலாகும்

உயிருக்கு ஆபத்தை விளைவிப்பன (Life threatening): 

 • ஆக்ஸிபென்பூட்டாசோன்(சியோரில்,ஆக்ஸிபென்பூட்டசோன்)  Oxyphenbutazone (Sioril, Oxyphenbutazone) 
 •  மெட்டமிசோல் (நோவல்ஜின் ஆர்.சி, ப்ரால், ஆண்டெப் (ரவியன்))  Metamizole (Novalgin Rc, Bral, Andep (Ravian)) 

கடுமையான விளைவுகளை கொண்டவை (Severe):

 • ஐசோனியாசிட் (ரிஃபாக்ட் கிட், ரிசோரின், ஆர் சினெக்ஸ், ஆர்எஃப் கிட் பி 6, ரிஃபாகன்) Isoniazid (Rifact Kid, Risorine, R Cinex, RF Kid B6, Rifacon) 
 • லாமோட்ரிஜின் (லாமியாஸ், லேமிட்டர், லமேஸ், லமேபில், லாமெடெக்) Lamotrigine (Lamiace, Lamitor, Lamez, Lamepil, Lametec) 
 • பைலோகார்பைன் (பிலகன், பைலோகார்பின், கார்பினோல், பைலோகார்பைன், கார்பைன்) Pilocarpine (Pilagan, Pilocarpin, Carpinol, Pilocarpine, Carpine) 
 • லெஃப்ளூனோமைடு (லெஃப்ரா, அரவா, பிளவு, டி.எம். லெஃப், லெஃப்னோ)  Leflunomide (Lefra, Arava, Cleft, DM Lef, Lefno) 
 • இமாடினிப் மெசிலேட் (மெசிலோனிப், வீனாட், செலோனிப், கிளைவேக், இமாடினிப் மெசிலேட்) Imatinib Mesylate (Mesylonib, Veenat, Celonib, Glivec, Imatinib Mesylate) 

மிதமான விளைவுகளை கொண்டவை (Moderate):

 • ஃபெனிடோயின் (ஃபென் ஃபென், ஃபெனோபார்பிட்டல் + ஃபெனிடோயின், எபிசோல் பிளஸ், பார்பிடோயின், எபிஃபென்)  Phenytoin (Phen Phen, Phenobarbital + Phenytoin, Episol Plus, Barbitoin, Epiphen) 
 • கொலஸ்டிரமைன் (இன்ப்ளாகூர் சி, சோல்ட்ரான், கொலஸ்டிரமைன்கொலஸ்டிரமைன் + டிக்லோஃபெனாக்)   Cholestyramine (Inflacure C, Choltran, Cholestyramine, Cholestyramine + Diclofenac) 
 • புசல்பான் (புசெலோன், புசுல்மேக்ஸ், புசல்பான்)  Busulfan (Bucelon, Busulmax, Busulfan) 

பாராசிட்டமால் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (Frequently asked questions about Paracetamol in Tamil)

1) பாராசிட்டமால் வேலை செய்ய எவ்வளவு நேரம் ஆகிறது? (How long does Paracetamol take to work in Tamil?)

பராசிட்டமால் வேலை செய்யத் தொடங்க 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஆகிறது

2) பாராசிட்டமாலை எத்தனை முறை எடுத்துக் கொள்ளலாம்? (How often can you take Paracetamol in Tamil?)

24 மணி நேரத்திற்குள் நான்கு அளவு (dosage) பராசிட்டமால் மட்டுமே எடுக்க வேண்டும். இரண்டு அளவுகளுக்கு இடையில் குறைந்தது 4 மணிநேர இடைவேலை இருக்க வேண்டும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் 3 நாட்களுக்கு மேல் பாராசிட்டமாலை எடுத்துக் கொள்ளக்கூடாது.

3) நான் பாராசிட்டமால் / அசிட்டமினோபன் உட்கொண்ட பின்  வாகனம் ஓட்ட முடியுமா? (Can I drive if I consumed Paracetamol/ acetaminophen in Tamil?)

பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளும் போது, தாராளமாக வாகனம் ஓட்டலாம்.

4) பாராசிட்டமால் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதா? (Is Paracetamol safe for children in Tamil?)

பராசிட்டமாலை ஒரு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே குழந்தைகளுக்கு வழங்கவேண்டும், இதுவே பாதுகாப்பாக கருதப்படுகிறது.

உணவு மற்றும் ஆல்கஹால் உடன் பராசிட்டமாலின் எதிர்வினை (Paracetamol reaction with food and alcohol in Tamil)

பாராசிட்டமாலுடன் உணவை உட்கொள்வது பாதுகாப்பானதாகும். எனினும், பராசிட்டமால் எடுத்துக் கொள்ளும்போது மது அருந்துவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வயிற்று பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

பராசிட்டமாலின்  மாற்றீடுகள் (Substitutes of Paracetamol)

 • கல்பால் (கிளாசோ ஸ்மித்க்லைன் மருந்துகள்)
 • டோலோ (மைக்ரோ லேப்ஸ் லிமிடெட்)
 • சுமோ எல் (அல்கெம் லேபரேட்டரீஸ் லிமிடெட்)
 • கபிமோல் (ஃப்ரெசினியஸ் கபி இந்தியா பிரைவேட் லிமிடெட்)
 • ஃபெபனில் (வெரிடாஸ் ஹெல்த்கேர் லிமிடெட்)
 • பைரிஜெசிக் (ஈஸ்ட் இந்தியா பார்மாசூட்டிகல் ஒர்க்ஸ் லிமிடெட்)
 • மாலிடென்ஸ் (அபோட்)
 • ஃபெப்ரினில் (மனீஷ் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட்)
 • பாசிமால் (இப்கா ​​லேபரேட்டரீஸ் லிமிடெட்)
 • டி -98 (மேன்கைண்ட் பார்மா லிமிடெட்)

தேவையான பொருட்கள் / உப்பு (Ingredients/ salt):

பராசிட்டமால்; மருத்துவ பரிந்துரைக் கட்டாயமாகும்.

உரிமைதுறப்பு (Disclaimer):

இங்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள் எங்கள் அறிவு மற்றும் அனுபவத்தில் மிகச் சிறந்தவை, மேலும் அதை முடிந்தவரை சரியான  மற்றும் துல்லியமானதாக மாற்ற நாங்கள் எங்களால் முடிந்தவற்றை செய்துள்ளோம், எனினும், இதை ஒரு தொழில்முறை நிபுணரின் (மருத்துவர்கள்) பரிந்துரைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. ஆலோசனை, நோயறிதல் அல்லது வீட்டு  சிகிச்சை போன்றவற்றையே நாங்கள் வழங்குகின்றோம். 

Logintohealth இன் மூலம் எங்கள் பார்வையாளர்களுக்கு தேவையான சில பொதுவான தகவல்களை  வழங்குவதே எங்கள் நோக்கமாகும். மேலும், இதில் விவரிக்கப்பட்டுள்ள தகவல்களின் துல்லியம் குறித்து எந்த  உத்தரவாதமும் நாங்கள்  அளிக்கவில்லை. எந்தவொரு  மருந்து அல்லது சிகிச்சைக்கான எச்சரிக்கையைப் பற்றி  குறிப்பிடுகிறோம் என்றாலும், நாங்கள் அந்த மருந்தை செய்கிறோம் என்று அர்த்தமில்லை. மேலும், ஒரு நிபுணரின் முறையான ஆலோசனை இல்லாமல் அதை உட்கொள்ளுதல் பாதுகாப்பு அளிக்காது. மருந்துகள் அல்லது சிகிச்சையின் எந்தவொரு விளைவிக்கும் Logintohealth பொறுப்பேற்காது. நீங்கள் உட்கொள்ளும் மருந்து குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க பரிந்துரைக்கிறோம். 


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


  captcha