மிளகுக்கீரை (புதினா) எண்ணெயின் நன்மைகள் மற்றும் தீமைகள் | Benefits and side effects of Pepper mint oil in Tamil
டிசம்பர் 13, 2020 Lifestyle Diseases 1813 Viewsமிளகுக்கீரையில் பல ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன, அதுபோல மிளகுக்கீரை (புதினா) எண்ணெயும் ஆரோக்கியத்தைக் கொண்டுள்ளது இது நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. கூடுதலாக, மிளகுக்கீரை எண்ணெய் மற்ற எண்ணங்களை காட்டிலும் சுவையானதாகும். மிளகுக்கீரை எண்ணெயிலிருந்து செய்யப்படும் மாத்திரைகள் சந்தையில் கிடைக்கின்றன. எனினும் மிளகுக்கீரை எண்ணெயில் சில தீமைகளும் உள்ளன. இந்தக் கட்டுரையில் மிளகுக்கீரை (புதினா) எண்ணெயின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்த சில தகவல்களை விரிவாக காண்போம்.
- மிளகுக்கீரை (புதினா) எண்ணெயின் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients present in peppermint oil in Tamil?)
- மிளகுக்கீரை (புதினா) எண்ணெயின் நன்மைகள் என்ன? (What are the benefits of peppermint oil in Tamil?)
- மிளகுக்கீரை (புதினா) எண்ணெயின் தீமைகள் என்ன? (What are the side effects of peppermint oil in Tamil?)
மிளகுக்கீரை (புதினா) எண்ணெயின் ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What are the nutrients present in peppermint oil in Tamil?)
மிளகுக்கீரையில் பல ஊட்டச்சத்து கூறுகளும் தாதுக்களும் நிறைந்துள்ளது. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஃபைபர்கள், கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, இரும்பு, வைட்டமின் ஏ போன்றவை நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயப்பன. (மேலும் படிக்க- கால்சியம் குறைபாடு)
மிளகுக்கீரை (புதினா) எண்ணெயின் நன்மைகள் என்ன? (What are the benefits of peppermint oil in Tamil?)
- நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் – மிளகுக்கீரை எண்ணெயில் நல்ல அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் பயனளிக்கிறது. மேலும், இதிலுள்ள ஆன்ட்டி ஃப்பன்ங்கள் மற்றும் ஆன்ட்டி பாக்டீரியா பண்புகள் சிலவகை நோய்த்தொற்றுகளிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. (மேலும் வாசிக்க – நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன)
- இரத்தத்தை சுத்திகரிப்பதில் மிளகுக்கீரை எண்ணெயின் நன்மைகள் – மிளகுக்கீரை எண்ணெயில் இரத்த சுத்திகரிப்பு பண்புகள் உள்ளது. மேலும் இது இரத்த சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. மிளகுக்கீரை எண்ணெய் வளர்சிதை மாற்றத்தில் (metabolism) உதவுகிறது. மேலும், இது அல்சைமர், டிமென்ஷியா போன்ற நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. (டிமென்ஷியா ஏன் ஏற்படுகிறது என்பதைப் படியுங்கள்)
- வாய்வழி சிக்கல்களுக்கான தீர்வையளிக்க – வாயின் துர்நாற்றத்தை நீக்க மிளகுக்கீரை எண்ணெய் உதவுகிறது. சந்தையில் தற்போது மின்ட் பேஸ்ட்டுகள் கிடைக்கிறது, இது வாயை சுத்தம் செய்வதோடு பற்களையும் சுத்தம் செய்கிறது. மிளகுக்கீரை எண்ணெய் பல் புழுக்களைக் கொல்ல உதவுகிறது. சில ஆய்வுகள் மிளகுக்கீரை எண்ணெயை ஒரு நல்ல வாய்வழி சிக்கல்களுக்கான சுகாதார தீர்வாகக் கண்டறியப்பட்டுள்ளது.
- மன அழுத்தத்திலிருந்து விடுபட – அதிக பணிச்சுமை அல்லது குடும்ப பிரச்சினைகள் போன்ற காரணங்களால் மனச்சோர்வு உண்டாகும் இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். நம் உடலின் நன்மைக்காக மனதை நிம்மதியாக வைத்திருக்க வேண்டும். மிளகுக்கீரை எண்ணெய் மன அழுத்தத்தை குறைக்கும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. மிளகுக்கீரை எண்ணெயின் சில துளிகளை தண்ணீரில் இட்டு குளிப்பதன் மூலம் மனச்சோர்வு குறைந்து புத்துணர்ச்சியாக உணர முடிகிறது.
- செரிமானத்தை வலுப்படுத்துவதில் – மிளகுக்கீரை எண்ணெய் உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. எனினும், இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இதனால் அஜீரண கோளாறு குறைக்கிறது. சில துளிகள் மிளகுக்கீரை எண்ணெயை சேர்த்த தண்ணீரைக் குடிப்பதால் வயிற்றில் உண்டாகும் பிரச்சினைகள் அனைத்தும் குணமாகத் தொடங்குகின்றன. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஃபைபர்கள் வாயுவு சிக்கலை சரிசெய்ய உதவுகிறது. பசியின்மை உள்ளவர்களுக்கு மிளகுக்கீரை எண்ணெய் ஒரு மருந்தாக செயல்படுகிறது. இந்த எண்ணெய் வாந்தி, வெளியேற்றம், வயிற்று வலி மற்றும் மார்பு வலியை குணப்படுத்த உதவுகிறது.
- பருக்கள் பிரச்சினையை சரிசெய்வதில் – மிளகுக்கீரை எண்ணெய் முக பருக்களை அகற்ற உதவுகிறது, மேலும் முக நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. மிளகுக்கீரை எண்ணெயை முகத்தில் தடவுவதன் மூலம் முகப்பரு பிரச்சினை நீக்குகிறது.
மிளகுக்கீரை (புதினா) எண்ணெயின் தீமைகள் என்ன? (What are the side effects of peppermint oil in Tamil?)
- மிளகுக்கீரை எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, எனினும் இதை அதிக அளவில் பயன்படுத்துவதால் சில தீங்குகள் விளைகிறது.
- மிளகுக்கீரை எண்ணெயின் ஒவ்வாமை காரணமாக வாய் கொப்புளங்கள் மற்றும் நாக்கு விறைப்பு ஏற்படலாம்.
- இந்த எண்ணெயை அதிகமாக உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் மார்பில் எரியும் உணர்வு ஏற்படலாம்.
- மிளகுக்கீரை எண்ணெயைப் பயன்படுத்துவதினால் சிலருக்கு தலைவலி உண்டாகிறது. (மேலும் படிக்க – ஒற்றைத் தலைவலி என்றால் என்ன)
மிளகுக்கீரை எண்ணெயில் மருத்துவ குணங்கள் உள்ளன, ஆனால் அதை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்துங்கள்.
மிளகுக்கீரை எண்ணெயைப் பயன்படுத்தி ஏதேனும் உடல்நலப் பிரச்சினைகளை நீங்கள் சந்தித்தால் உங்கள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி, உடனடியாக உங்கள் அருகிலுள்ள பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)
சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)
பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)