பாதாமி பழத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் | Pros and cons of Apricot in Tamil
பிப்ரவரி 21, 2021 Lifestyle Diseases 1870 Viewsஉலகின் மிக ஆரோக்கியமான பழங்களில் பாதாமி பழமும் ஒன்றாகும். இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு–காஷ்மீரில் பரவலாக பயிரிடப்படும் ஆப்ரிகாட் உடல் ஆரோக்கியத்திற்கு அற்புதமான பல நன்மைகளை பயக்கிறது. பாதாமி பழம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றது, மென்மையான தோல் கொண்டது. பாதாமி மரம் 7 முதல் 10 மீட்டர் உயரம் கொண்டதாகும். பாதாமி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றை, பிற பழங்களை உட்கொள்வது போல பச்சையாகவே சாப்பிடலாம். இவை ஜாம் மற்றும் ஜல்லிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இன்றையப் பதிவில் பாதாமி பழத்தின் நன்மைகள், பாதாமி பழத்திலுள்ள ஊட்டச்சத்து கூறுகளை ஆராய்வோம்.
- பாதாமி பழத்தில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What is the nutritional content of Apricot in Tamil?)
- பாதாமி பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of Apricot in Tamil?)
- பாதாமி பழத்தின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of Apricot in Tamil?)
பாதாமி பழத்திலுள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What is the nutritional content of Apricot in Tamil?)
அப்ரிகாட் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் நியாசின் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான பழமாகும். இதில், அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களும் நிறைந்துள்ளன. பாதாமி பழம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பாதாமி பழத்தின் நன்மைகள் என்ன? (What are the benefits of Apricot in Tamil?)
பின்வருவன, பாதாமி பழத்தின் நன்மைகளாகும். அவை:
- சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது (Enhances the skin quality): பாதாமி எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் தோல் தொடர்பான நோய்களைத் தடுக்க முடிகிறது. பாதாமி பழத்திலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களே இதற்கு முக்கிய காரணமாகும்.
- கண்களுக்கு நன்மை பயக்கும் (Beneficial for eyes ): பாதாமி பழத்தில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் நோய்களைத் தடுக்கிறது.
- இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்கிறது (Treats anaemia): பாதாமி பழத்தில் இரும்பு மற்றும் தாமிரம் ஆகிய கூறுகள் உள்ளன, இவை இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. மேலும், இரத்தத்தில் அதிக சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது மற்றும் சோர்வு, பலவீனத்தை குறைக்கிறது.
- காய்ச்சலைக் குணப்படுத்துகிறது (Cures fever): பாதாமி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.
- புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer): அப்ரிகாட்டில் கரோட்டின் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகின்றன.
- ஆஸ்துமாவுக்கு பயனுள்ளதாக இருக்கும் (Useful for asthma): பாதாமி எண்ணெயுடன் மசாஜ் செய்வது ஆஸ்துமாவுக்கு நன்மை பயக்கிறது மற்றும் நிவாரணம் அளிக்கிறது.
- செவிக்கு நன்மை பயக்கிறது (Beneficial for ear ache): காது வலியை குணபடுத்த இரண்டு சொட்டு பாதாமி எண்ணெய் போதுமானதாகும். அப்ரிகாட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களே இதற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
- இதயத்தை பராமரிக்கிறது (Nourishes the heart): அப்ரிகாட்டில் பொட்டாசியம், ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை, ஏராளமான இதய நோய்களின் தாக்கத்தை தடுப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- எலும்புகளை பலப்படுத்துகிறது (Nourishes the heart): பாதாமி பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவுகிறது.
- உடல் எடை குறைக்க உதவுகிறது (Helps to reduce body weight): பாதாமி பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உடலில் சேரும் கொழுப்பை அகற்ற உதவுகிறது. மேலும், உடல் எடையை குறைக்கிறது.
- கர்ப்ப காலத்தில் பயனுள்ளதாக இருக்கிறது (Useful for pregnancy): கருவுறாமை, இரத்தப்போக்கு மற்றும் தசைப்பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க பாதாமி பழம் துணை புரிகின்றது. பாதாமி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, சிலிக்கான், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த அப்ரிகாட் இரத்த சோகையைத் தடுக்கிறது மற்றும் இதிலுள்ள பொட்டாசியம் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கிறது.
- மலச்சிக்கலைக் குணப்படுத்துகிறது (Cures constipation): மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதாமி பழம் பயனுள்ளதாக அமைகிறது. தினசரி ஒரு பாதாமி பழத்தை உட்கொள்வதன் மூலம், இந்த பிரச்சினைக்கு சிகிச்சையளிக்க இயலும். (மேலும் வாசிக்க- மலச்சிக்கலுக்கான சிகிச்சைகள் என்ன)
பாதாமி பழத்தின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of Apricot in Tamil?)
பாதாமி பழங்களை அதிகமாக உட்கொள்ளும் போது, இவை சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறன. அவை:
- ஒவ்வாமை (Allergy): பாதாமி பழத்தை உட்கொள்வதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால், அதை உட்கொள்ள வேண்டும். ஏனெனில், இது தோல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
- நீரிழிவு நோய் (Diabetes): நீரிழிவு நோயாளிகள் உலர்ந்த பாதாமி பழங்களை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனெனில், பாதாமி பழம் சாப்பிடுவதன் மூலம் அவர்களின் உடல் ஆரோக்கியம் குறைகிறது.
- குறைந்த இரத்த அழுத்தம் (Lowers blood pressure): குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாதாமி பழத்தை சாப்பிடக்கூடாது. ஏனெனில், இவை இரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கிறது.
- பாதாமி விதைகளில் சயனைடு இருப்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால்,பாதாமி பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. நாள் ஒன்றுக்கு 30 பாதாமி விதைகளுக்கு மேல் உட்கொள்ள கூடாது.
பாதாமி பழங்களின் நுகர்வு காரணமாக ஏதேனும் உடல்நலம் தொடர்பான சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician)தொடர்பு கொள்ளுங்கள்.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
சென்னையில் சிறந்த பொது மருத்துவர்