கனோலா எண்ணெயின் நன்மைகள் மற்றும் தீமைகள் | Pros and cons of canola oil in Tamil
பிப்ரவரி 17, 2021 Lifestyle Diseases 2329 Viewsஉணவை சமைக்கும் போது, பல்வேறு வகையான எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான மக்கள் தாங்கள் பயன்படுத்தும் எண்ணெய்களைப் பற்றி ஆராய்வதில்லை. இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதினால், உண்டாகும் உடல்நல பாதிப்புகள் குறித்து எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள். சமையலுக்கு ஆரோக்கியமற்ற எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உடல்நலனில் பல்வேறு சிக்கல்களை இந்த எண்ணெய்கள் ஏற்படுத்தக்கூடும். எனவே, சமையலுக்கு நாம் பயன்படுத்த விரும்பும் எண்ணெயின் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகளை குறித்து அறிந்து கொள்ள வேண்டும். கனோலா எண்ணெய், சமையலுக்கு உபயோகிக்க தகுந்த ஆரோக்கியமான எண்ணெயாகும். ஊட்டச்சத்து நிறைந்த, கனோலா எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. இன்றையப் பதிவில் கனோலா எண்ணெயின் ஊட்டச்சத்து மதிப்பு, நன்மைகள் மற்றும் அதன் பக்க விளைவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
- கனோலா எண்ணெய் என்றால் என்ன? (What is canola oil in Tamil?)
- கனோலா எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What is the nutritional importance of canola oil in Tamil?)
- கனோலா எண்ணெயின் நன்மைகள் யாவை? (What are the benefits of canola oil in Tamil?)
- கனோலா எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of canola oil in Tamil?)
கனோலா எண்ணெய் என்றால் என்ன? (What is canola oil in Tamil?)
கனோலா என்பது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு தாவரமாகும். உயரிய தொழில்நுட்பங்களின் பயன்கொண்டு கனோலா செடியிலிருந்து, கனோலா எண்ணெய் எடுக்கப்படுகின்றது. கனோலா எண்ணெய் சமையல் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. எனினும் சில சந்தர்ப்பங்களில், இது ஆரோக்கியத்தில் சில எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
கனோலா எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் யாவை? (What is the nutritional importance of canola oil in Tamil?)
கனோலா எண்ணெயில் பல ஊட்டச்சத்து கூறுகள் மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில், வைட்டமின் ஈ (ஆல்பா டோகோபெரோல்), வைட்டமின் கே (பைலோகுவினோன்) மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
கனோலா எண்ணெயின் நன்மைகள் என்ன? (What are the benefits of canola oil in Tamil?)
- புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer): கனோலா எண்ணெயை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயைத் தடுக்க முடிகிறது. இது புற்றுநோய் செல்கள் மற்றும் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. புற்றுநோய் நோயாளிகள் கனோலா எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும். (மேலும் படிக்க- நுரையீரல் புற்றுநோய்)
- நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது (Treats Diabetes): நீரிழிவு நோயை முழுமையாக குணப்படுத்த இயலாது. எனவே, நீரிழிவு நோயாளிகள் அவர்கள் உண்ணும் உணவில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க கனோலா எண்ணெய் பயனுள்ளதாக இருக்கிறது மற்றும் இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. (மேலும் வாசிக்க – நீரிழிவு நோயின் அறிகுறிகள்?)
- சருமத்தின் தரத்தை மேம்படுத்துகிறது (Enhances the skin quality): கனோலா எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இவை சரும அமைப்பை மேம்படுத்த உதவுகின்றன. இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிடமிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. வெயிலில் வெளியே செல்வதற்கு முன் சருமத்தில் கனோலா எண்ணெயைப் பயன்படுத்துவது நன்மை பயக்கிறது. (மேலும் வாசிக்க- சருமத்திற்கு ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்)
- முடியை வளர்க்கிறது (Nourishes the hair): முடி உதிர்தல் பிரச்சினை தற்போது பொதுவான சிக்கலாக மாறிவருகிறது. பொருத்தமற்ற எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதே முடி உதிர்தலுக்கு காரணமாக கருதப்படுகிறது. கனோலா எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. தலைமுடியில் கனோலா எண்ணெயைப் பயன்படுத்துவது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. (மேலும் வாசிக்க- முடி உதிர்தல் என்றால் என்ன)
- அழற்சியைக் குறைக்கிறது (Reduces allergy): கனோலா எண்ணெயில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் காயம் காரணமாக உண்டாகும் வலியைக் குறைக்கிறது.
கனோலா எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of canola oil in Tamil?)
கனோலா எண்ணெயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. எனினும் சில சமயங்களில், இதன் பயன்பாடு சில கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது, அவை :
- கனோலா எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவது இதய தொடர்பான நோய்களின் அச்சுறுத்தலை அதிகரிக்கிறது. இதனால், கனோலா எண்ணெயைக் குறைந்த அளவுகளில் பயன்படுத்தப்பட வேண்டும்.
- கனோலா எண்ணெய் மூளையை பாதிக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இது மூளையின் நினைவாற்றல் திறனைக் குறைக்கிறது. (மேலும் வாசிக்க– பைபோலார் டிஸாடர் என்றால் என்ன)
- கனோலா எண்ணெய் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த விளைவுகள் ஏற்பட எண்ணெயைப் பிரித்தெடுக்கப் பயன்படும் உயிரி தொழில்நுட்ப செயல்முறைகளில் உண்டாகும் தவறுகளே காரணமாக கருதப்படுகிறது.
- கனோலா எண்ணெயில் தோல் தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும் கூறுகள் உள்ளன. எனவே, கனோலா எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்.
கனோலா எண்ணெயை பயன்படுத்துவதன் காரணமாக உடல்நலம் தொடர்பான ஏதேனும் சிக்கலை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
சென்னையில் சிறந்த பொது மருத்துவர்