முகப்பருக்களுக்கான சிகிச்சைகள் | Treatment for Pimples in Tamil

Login to Health டிசம்பர் 4, 2020 Lifestyle Diseases 38 Views

English हिन्दी Tamil

மக்கள் அனைவரும் முகப்பருக்களைப் பற்றி நன்கு அறிந்திருக்கின்றனர். குறிப்பாக முகப்பருக்கள் இளம்வயதினருக்கு அதிகமாக தோன்றுகிறது.ஆண்கள் பெண்கள் என இருபாலினரும்  முகப்பரு சிக்கலை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலும், பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இன்றையப் பதிவில் முகப்பருக்களுக்கான சிகிச்சைகள் குறித்த சில முக்கிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

 • முகப்பரு என்றால் என்ன? (What is pimple in Tamil?)
 • முகப்பரு எத்தனை வகைப்படும்? (What are the types of pimples in Tamil?) 
 • முகப்பரு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of pimples in Tamil?)
 • முகப்பருக்களுக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for pimples in Tamil?)
 • முகப்பருவை அகற்ற உதவும் வீட்டு வைத்தியங்கள் யாவை? (What are the home remedies to avoid pimples in Tamil?)

முகப்பரு என்றால் என்ன? (What is pimple in Tamil?)

சருமத்தின் கீழ் பகுதியில் சில எண்ணெய் சுரப்பி உள்ளன, இந்த சுரப்பிகளில் நிறைய எண்ணெய் சுரக்கும்போது பருக்கள் தோன்றுகிறது. பெரும்பாலும் , எண்ணெய் சருமம் (oily skin) உள்ளவர்களுக்கு முகப்பருக்கள் அதிகமாக தோன்றுகின்றன. சிலர் முகப்பருக்களைக் குறித்து குறை கூறுவதில்லை  ஏனெனில், அவர்களின்  சருமத்தில் அதிக எண்ணெய் சுரப்பிகள் இருப்பதில்லை. குறிப்பாக  உடலில் எண்ணெய் சுரப்பிகள் தொடர்பான சிக்கல்கள் உள்ளவர்களுக்கும் அல்லது  ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகும் போதும்  முகப்பருக்கள் தோன்றுகின்றன.

முகப்பரு எத்தனை வகைப்படும்? (What are the types of pimples in Tamil?)

முகப்பருக்கள் ஆறு வகைப்படும், அவை :

 • பரு (Pimples): இவை தோலின் மேற்பரப்பில் வளரும்  சிவப்பு நிற பருக்களாகும். தோலில் தோன்றும் இந்த வகைப்  பருக்களில் சீழ் நிறைந்திருக்கிறது, மேலும், இது தீவிர வலியை ஏற்படுத்துகின்றது.
 • வைட்ஹெட்ஸ் (whiteheads): வைட்ஹெட்ஸ் தோலின் கீழ் வளரும் சிறிய சதையாகும். இவை பருக்கள் போல இருக்கின்றன.
 • பிளாக்ஹெட்ஸ் (blackheads): பிளாக்ஹெட்ஸ் தோலின் மேற்பரப்பில் தோன்றுகிறது, இவை கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தில் இருக்கின்றன.
 • பாபுயூல்ஸ் (papules): சருமத்தில் சிறிய மற்றும் வட்ட விதைகளைப் போல வளரும் இவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கின்றன.
 • நீர்க்கட்டி: தோலில் வளரும் இந்த வகைப் பருக்களில் சீழ் நிறைந்திருக்கிறது மற்றும் இவை மிகுந்த வலியைத் தருகிறது. சீழ் மிக்குந்த பருக்கள் உடைந்த பின்னர் சருமத்தில் வடுவாக மாறுகிறது.
 • நோடியூல்: சருமத்தின் ஆழத்தில் வளர்கின்ற இவை பருக்களைப் போல மிக பெரிதாக இருக்கிறது. மேலும், இவை மிகுந்த வேதனையை அளிக்கின்றன.

முகப்பரு ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை? (What are the causes of pimples in Tamil?)

 • கிரீம்கள், லோஷன்கள், காலாவதியான கிரீம்கள் ஆகியவற்றை பயன்படுத்துவதனால்  முகப்பரு ஏற்படுகின்றது. 
 • தூக்கமின்மை காரணமாகவும் முகத்தில் பருக்கள் ஏற்படுகின்றன.
 • செரிமான அமைப்பில் ஏற்படும் பிரச்சினைகள் காரணமாகவும் முகத்தில் பருக்கள் ஏற்படுகின்றன. 
 •  ஹார்மோன்களில் உண்டாகும் ஏற்ற தாழ்வுகள் காரணமாகவும், சிறுவர் சிறுமிகளுக்கு பருக்கள் தோன்றுகிறது.
 • மன அழுத்தம் காரணமாக பருக்களின் நிலை மோசமடைகின்றது.

முகப்பருக்களுக்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for pimples in Tamil?)

 • தோல் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் முகப்பருவுக்கு பல வழிகளில் சிகிச்சை அளிக்கின்றனர். 
 • முதலில், மருத்துவர் தோலில் பயன்படுத்தக்கூடிய ரெட்டினாய்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துகின்றனர். அதைப் பயன்படுத்துவதன் மூலம், காயங்கள் மெதுவாக குணமடைந்து முகப்பருக்கள் நீங்கத் தொடங்குகிறது.
 • கடுமையான பருக்களை குணப்படுத்த, மருத்துவர்கள் உணவில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை (antibiotics)  உட்கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். மேலும், இந்த மருந்துகள் உடலில் உண்டாகும்  தொற்றுநோயையும் குறைக்கின்றன.
 • நுண்ணுயிர் எதிர்ப்பிகளை வழங்குவதன் மூலம் முகப்பருவை குணப்படுத்த முடியாத நிலையில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஸ்பைரோனோலாக்டோன் (spironolactone) போன்ற மருந்துகளைப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 
 • முகப்பரு வடுக்களை அகற்ற, மருத்துவர்கள் முதலில் வடுக்களை ஆராய்கின்றனர், அதன் பின்னரே சிகிச்சை அளிக்கிப்படுகின்றது.
 • கருமையான வடுக்களைக் குறைக்க, சருமத்தின் மேல் அடுக்கு அமைக்கப்பட்டு, சருமத்தில் ஆற்றல் அமிலம் செலுத்தப்படுகின்றது.
 • மிகவும் இருண்ட மற்றும் காயமடைந்த தோலை அறுவை சிகிச்சை மூலம் நிபுணர்கள்  அகற்றுகின்றனர். 

முகப்பருவை அகற்ற உதவும் வீட்டு வைத்தியங்கள் யாவை? (What are the home remedies to avoid pimples in Tamil?)

 • முல்தானி மிட்டியுடன்  ரோஸ் பேஸ்ட், சந்தன பேஸ்ட் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவவும். நன்கு உலர்த்திய பின், முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும், இது பருக்களைக் குறைத்து முகத்தின் அழகை அதிகரிக்கிறது.
 • வேப்பத்தின் பேஸ்ட் சருமத்தில் பருக்களால் உண்டான வீக்கத்தை தளர்த்துகிறது. வேப்ப இலையுடன் மஞ்சளைச் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
 • எலுமிச்சையிலுள்ள அமில கூறுகள் முகப்பருவை விரைவாக குணப்படுத்துகிறது. எலுமிச்சையை முகத்தில் தேய்த்து, சிறிது நேரத்திற்கு பிறகு முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.
 • வெந்தயத்தில் ஆன்ட்டி  ஆக்ஸிஜனேற்றம் மற்றும் ஆன்ட்டி  செப்டிக்  பண்புகளைக் கொண்டுள்ளது, இவை பருக்களை அகற்ற  உதவுகிறது.  வெந்தய பேஸ்டை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 • கற்றாழை ஜெலில் வீக்கத்தைக் குறைத்து பருக்களை அகற்றும் பண்புகள் உள்ளது. கற்றாழை ஜெல்லை நாள் ஒன்றுக்கு இரண்டு முறை முகத்தில் தடவவுவதன் மூலம்  முகப்பரு வடுக்கள் குறைக்கின்றன.
 • ஆரஞ்சில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது முகப்பருவைக் குறைக்க மிகவும் உதவுகிறது. முகத்தில் ஆரஞ்சு சாறு  மற்றும்  ஆரஞ்சு தோல்களை பேஸ்டாகி தடவவும், இவ்வாறு செய்வதன் மூலம்  முகப்பரு பிரச்சினைகள் நீக்குகிறது.

முகப்பரு பருக்கள் பிரச்சினையால் நீங்கள் மிகவும் வருத்தப்படுகிறீர்கள் என்றால் அது குறித்து  கூடுதல் தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், ஒரு நல்ல தோல் மருத்துவரைத் (Dermatologist) தொடர்பு கொள்ளுங்கள். 


மும்பையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

டெல்லியில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

சென்னையில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்

பெங்களூருவில் சிறந்த டெர்மடோலோஜிஸ்ட்