வெர்டிகோ என்றால் என்ன | Vertigo meaning in Tamil

டிசம்பர் 18, 2020 Brain Diseases 4264 Views

English हिन्दी Bengali Tamil

வெட்டிகோ (Vertigo) என்னும் ஆங்கிலச்சொல் ‘வெர்டோ’ என்னும்  லத்தீன் சொல்லிருந்து நிறுவப்பட்டதாகும். வெர்டிகோ என்னும் சொல் தலைச்சுற்றல், உடல் வலி, சோர்வு மற்றும் உடலின் நிலையற்ற தன்மை (Imbalanced body) போன்ற உணர்வுகளை குறிக்கிறதுஇது ஒரு வகையான சிக்கலாகும். வெர்டிகோ நோயால் பாதிக்கப்பட்டவர்களிடத்தில் அதிக வியர்வை சுரப்பது, குமட்டல், வாந்தி மற்றும் உடல் பலவீனம் அடைதல்  போன்ற அறிகுறிகள் காணப்படுன்றன. அக்ரோபோபியா உள்ள மக்களுக்கு வெர்டிகோ சிக்கலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்ரோபோபியா என்பது அதிக உயரமான இடங்களில் இருந்து கீழ் நோக்கி பார்க்கும் போது மயக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிக்கலாகும். இதனால், அக்ரோபோபியா உள்ளவர்களுக்கு உயரமான இடங்களில் நிற்கும் போது  பயம் அதிகரிக்கிறது. ஒரு நபரின் காது, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் எதாவது ஒரு  அடைப்பு ஏற்படும்போது வெர்டிகோ பிரச்சினை எழுகிறது. பெரும்பாலும் அனைத்து வயதினருக்கும் வெர்டிகோ பிரச்சினை ஏற்படுகின்றது. எனினும்இந்தச் சிக்கல் முதியவர்களிடயே அதிகமாக உள்ளது. சுமார் 15 % முதல் 40% மக்கள் தங்கள் ஆயுட்காலத்தில் வெர்டிகோ பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். இன்றையக் கட்டுரையில் வெர்டிகோ என்றால் என்ன, என்பது குறித்த தகவல்களை விரிவாக்க காண்போம்.

 • வெர்டிகோ என்றால் என்ன? (What is meant by vertigo in Tamil?)
 • வெர்டிகோவுக்கு என்ன காரணம்? (What are the causes of vertigo in Tamil?)
 • வெர்டிகோவின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of vertigo in Tamil?) 
 • வெர்டிகோவிற்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for vertigo in Tamil?)

வெர்டிகோ என்றால் என்ன? (What is meant by vertigo in Tamil?)

வெர்டிகோ சிக்கல் உண்டாகும் நபர்களுக்கு தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் தலைச்சுற்றலினால் கண்கள் இருட்டடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இரத்த அழுத்தம் தீடிரென அதிகரிப்பதும் வெர்டிகோ சிக்கலின் விளைவாகும். பணிச்சுமையின் காரணமாய் உண்டாகும் மன அழுத்தம் மூளையை நேரடியாக பாதிக்கிறது, மேலும் இதனால்  வெர்டிகோ அச்சுறுத்தல் அதிகரிக்கிறது. மூளை தொடர்பான வியாதிகள் உள்ளவர்களை வெர்டிகோ பெரிதும் பாதிக்கிறது. சிலருக்கு  வெர்டிகோ சிக்கலின்  தாக்கம் குறைந்தக் காலத்தில் நீக்குகிறது. ஆனால், சிலருக்கு இந்தச் சிக்கல் நெடுங்காலம் நீடிக்கிறது, மேலும் அவர்களிடத்தில் இந்த நோயின் தாக்கம்  தீவிரமடையகிறது. 

வெர்டிகோவுக்கு என்ன காரணம்? (What are the causes of vertigo in Tamil?)

வெர்டிகோ சிக்கல் பல நோய்கள் ஏற்படுவதற்கான அச்சுறுத்தலை அதிகரிக்கிறது. வெர்டிகோ காதுகளில் உள்ள திரவதின் ஏற்றத்தாழ்வுகள் உண்டாவதற்கு (Imbalance in ear liquid) வழிவகுக்கிறது மற்றும் இது மூளை தொடர்பான சில நோய்களையும் ஏற்படுத்துகிறது. பின்வருவன வெர்டிகோ சிக்கலை ஏற்படுத்தும் காரணிகள், அவை:

 • பிபிபிவி (BPPV): பெரும்பாலும் பிபிபிவி தூக்கத்தில் உடல் சுயநினைவின்றி இயங்குவதால் ஏற்படுகின்றது, பொதுவாக முதியவர்களுடைய காது நரம்புகளில் கால்சியம் கார்பனேட் கழிவுகள் தேங்கும் போது அவர்களுக்கு பிபிபிவி உண்டாகிறது.
 • மெனியர்ஸ் நோய் (Meniere’s disease): இது செவிப்புலன் திறனை பாதிக்கும் ஒரு வகை உள்புற காதுகளின் வியாதியாகும். மேலும், இந்த நோய் தலைச்சுற்றலுக்கு வழிவகுக்கிறது. 
 • வெஸ்டிபுலர் ஒற்றைத் தலைவலி (Vestibular migraine): தலைச்சுற்றல் மற்றும் தலைவலி ஏற்படுவது வெஸ்டிபுலர் ஒற்றைத் தலைவலியின் பொதுவான அறிகுறிகளாகும், இது அனைத்து வயதினருக்கும் பொதுவானதாக அமைகிறது. வெஸ்டிபுலர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் அதிக பிரகாசமான வெளிச்சம் மற்றும் அதிக  சத்தத்தை விரும்புவதில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செவிப்புலன் பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதில்லை. 
 • லாபிரிந்திடிஸ் (Labyrinthitis): இது ஒரு வகை பாக்டீரியா தொற்று காரணமாக ஏற்படும் சிக்கலாகும், இது உடலின் சமநிலை நரம்பை பாதிக்கிறது. மேலும், இது பாதிக்கப்பட்டவரின் கேட்கும் திறனைக் குறைக்கிறது.

வெர்டிகோவின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of vertigo in Tamil?)

 • உடல் நிலையற்றதாக அல்லது சமநிலையற்றதாக இருப்பது போன்ற உணர்வு.
 • உயரமான இடங்களுக்கு செல்வதில் பயம் கொள்ளுதல்.
 • செவிப்புலன் திறன் குறைவது.
 • மயக்கம் உண்டாகி கீழே விழும் பயம் அதிகரிக்கும்.
 • அதிக சத்தம் காரணமாக தலைவலி உண்டாவது.

வெர்டிகோவிற்கான சிகிச்சைகள் என்ன? (What are the treatments for vertigo in Tamil?)

 • வெர்டிகோ சிக்கல் சாதாரண நிலையில் இருந்தால் அதற்கு  மருத்துவச் சிகிச்சையளிக்க வேண்டியதில்லை. ஏனெனில், இதன் தாக்கம் சில காலத்தில் நீக்குகிறது. 
 • இருப்பினும், வெர்டிகோவின் தாக்கம் கடுமையாக மாறும்போது, பாக்டீரியா தொற்றை குறைக்க மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கின்றனர்.   
 • குமட்டல் மற்றும் நோயின் தாக்கத்தைக் குறைக்க மருத்துவர்கள் ஆண்டிமெடிக்ஸ் மற்றும் ஆன்ட்டி  ஹிஸ்டமைன்  மருந்துகளை எடுத்துக் கொள்ளப் பரிந்துரைக்கின்றனர்.
 • வெர்டிகோவின் முக்கிய காரணம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பதிப்புக்களை நீக்க  மருத்துவர்கள் மனநல சிகிச்சையை (Psychotherapy) மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கின்றனர். 

வெர்டிகோ தொடர்பான சிக்கல்களை நீங்கள் எதிர்கொண்டால், ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள். 

 இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்,  அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox