எபோலா வைரஸ் என்றால் என்ன | What is Ebola Virus in Tamil

ஜனவரி 8, 2021 Lifestyle Diseases 1241 Views

English हिन्दी Tamil

எபோலா வைரஸ் என்பது ஒரு அரிய வகை ஆபத்தான வைரஸாகும். எபோலா வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை மிகவும் மோசமாக மாறுகிறது. இந்த வகை வைரஸ் தொற்றினால் மனிதர்களுக்கு  ரத்தக்கசிவு மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. மற்றும் உடல் பாகங்களின் செயல்பாடுகள் தடுக்க படுகின்றன. மேலும்,  கடுமையான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கவும் நேரிடுகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், இந்த நோய்த்தொற்றுக்கான மருந்துகளை உருவாக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். இந்த கட்டுரையில் எபோலா வைரஸ் என்றால் என்ன மற்றும்  எபோலா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான  காரணங்கள், அதன் அறிகுறிகள், தடுப்பு ஆகியவற்றை விரிவாகக் கூறுகிறோம்.

  • எபோலா வைரஸ் என்றால் என்ன? (What is Ebola virus in Tamil?)
  • எபோலா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான  காரணங்கள் யாவை? (What are the causes of Ebola virus in Tamil?)
  • எபோலா வைரஸின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Ebola virus in Tamil?)
  • எபோலா வைரஸிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for Ebola virus in Tamil?)
  • எபோலா வைரஸை எவ்வாறு தடுப்பது? (How to prevent Ebola virus in Tamil?)

எபோலா வைரஸ் என்றால் என்ன? (What is Ebola virus in Tamil?)

எபோலா வைரஸ் தொற்று முதன்முதலில் வெளவால்களில் கண்டறியப்பட்டது. விலங்குகளில் மலம், வைரஸ் தொற்றினால்  பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளின் உடல், விலங்குகளின் இரத்தம் போன்றவற்றுடன் மனிதர்களுக்கு உண்டாகும் தொடர்பின் காரணமாக இந்த வைரஸ் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வைரஸ் தொற்று, முதலில் மனித இரத்ததில் கலந்து இரத்தத்தை மாசுபடுத்துகிறது மற்றும் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் பாதிக்கிறது. இது தவிர, ஆரோக்கியமானவர்கள் பாதிக்கப்பட்ட நபரின் வியர்வை படிந்த ஆடைகளை அணிவதன் மூலமும் இந்த தொற்று பரவுகிறது.

எபோலா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான  காரணங்கள் யாவை? (What are the causes of Ebola virus in Tamil?)

  • எபோலா வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் ஆப்பிரிக்க குரங்குகள், சிம்பன்சிகள், பன்றிகள் மற்றும் பழந்தின்னி வெளவால்கள் ஆகும். சில நிபுணர்களின் கூற்றுப்படி, விலங்குகளின் இரத்தத்தின் மூலமும் எபோலா மனிதர்களுக்கு பரவுகிறது. ஆராய்ச்சியின் போது, குறிப்பிட்ட ஒரு சில விலங்குகளை ஆய்வு செய்ததன் விளைவாக  ஆராய்ச்சியாளர்களுக்கும் எபோலாவின் தாக்கம் உண்டாயிற்று. ஆப்பிரிக்க காடுகளில், சில சுற்றுலாப் பயணிகளுக்கு சில விலங்குகளின் தாக்கத்தினால் இந்த வைரஸ் தொற்று உண்டாயிற்று. 
  • ஒரு ஆரோக்கியமான நபர் பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு கொள்வதினாலும்  இந்த வைரஸ் தொற்று பரவுகிறது. எபோலா வைரஸ் மற்றும் மார்பர்க் வைரஸ் பூச்சி கடிப்பதன் விளைவாகவும் பரவுகின்றன.
  • எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்த பின்னும், அவர்களின் உடல்களிலுள்ள வைரஸ் தொற்று பரவும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
  • எபோலா வைரஸ் தொற்று ஆப்பிரிக்காவிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. எபோலாவின் தாக்கம் இன்றளவும் பதிவாகியுள்ளது.
  • உங்கள் வீட்டில் யாராவது எபோலா வைரஸ் நோய் தொற்றினால்  பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் முகக்கவசம் அணிந்து, சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இருக்க வேண்டும். இல்லையெனில், உங்களுக்கும் தொற்றுநோய் ஏற்படலாம்.

எபோலா வைரஸின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Ebola virus in Tamil?)

எபோலா வைரஸின் அறிகுறிகள் நோய் தொற்று உண்டான ஐந்து முதல் ஏழு நாட்களில்  தோன்றுகிறது, அவை: 

  • அதிக காய்ச்சல்
  • உடல் பலவீனம்
  • தசை வலி
  • மூட்டு வலி
  • சளி
  • தாங்க முடியாத கடுமையான உடல் வலி
  • இன்னும் சில கடுமையான சமயங்களில், வேறு சில அறிகுறிகள் தோன்றக்கூடும்.
  • வயிற்று வலி
  • நெஞ்சு வலி
  • உட்புற இரத்தப்போக்கு
  • திடீர் எடை இழப்பு
  • கண்கள் நீல நிறமாக மாறுதல் 
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு

எபோலா வைரஸிற்கான சிகிச்சைகள் யாவை? (What are the treatments for Ebola virus in Tamil?)

எபோலா வைரஸ் சிகிச்சைக்கு குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை. இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

  • இந்த நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க ஆன்ட்டி வைரஸ்  மருந்துகள் பயன் அளிப்பதில்லை. இந்த நோய்த்தொற்றுக்கு எந்தவித ஆண்டிபயாடிக் மருந்துகளுமில்லை. எனினும், பின்வரும் வழிகளில் நோயாளிக்கு நோய் தடுப்பு பராமரிப்பு சிகிச்சை வழங்கப்படுகிறது. அவை :
  • உடலில் இருந்து இரத்த இழப்பைத் தடுப்பது.
  • திரவ உணவுகளை அளிப்பது.
  • நோய் தொற்றின் விளைவு தீவிரம் அடையாமல் இருக்க, மற்ற நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாத வகையில் சிகிச்சையளிக்கப் படுகின்றது.
  • இரத்த அழுத்தத்தின் அளவைப் பராமரிப்பது.
  • கடுமையான சூழலில் ஆக்சிஜனை தேவையான அளவில் வழங்குவது.

எபோலா வைரஸை எவ்வாறு தடுப்பது? (How to prevent Ebola virus in Tamil?)

  • எபோலா வைரஸைத் தடுப்பதற்கு, நோயைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது மிகவும் முக்கியமாகும். மிகவும் எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க இயலும்.
  • நீங்கள் ஆப்பிரிக்காவுக்குச் செல்ல விரும்பினால், முதலில் அங்கே தொற்றுநோயின் நிலை என்ன என்பது குறித்து ஆராய்ச்சி செய்யுங்கள். பின்னர் உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள்.
  • எபோலா நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்க மற்ற நோய்களிலிருந்தும்  உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ​​உங்கள் கைகளை அடிக்கடி  கழுவுங்கள், அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்புகளைப் பயன்படுத்துங்கள்.
  • நீங்கள் ஒரு எபோலா நோயாளியை கவனித்துக்கொண்டிருந்தால், நோயாளிகளின் வியர்வை, மலம், இரத்தம், உமிழ்நீர் போன்றவற்றுடன் நேரடியாக தொடர்பு கொள்ளாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எபோலாவின் இறுதி கட்டங்கள் நோயாளிக்கு மிகவும்  ஆபத்தானதாகும். 
  • நீங்கள் ஆப்பிரிக்காவுக்குப் போகிறீர்கள் என்றால், அங்கே விலங்கு மாமிசம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
  • தொற்றுநோயைத் தடுக்க, கையுறைகள், முகக்கவசம் போன்றவற்றை பயன்படுத்துங்கள், முழு உடலையும் மறைக்கும் வண்ணம் முழுக்கை முழுக்கால் ஆடைகளை அணியுங்கள். பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியே இருங்கள்.
  • எபோலா அல்லது மார்பர்க் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்களினாலும் தொற்று ஏற்படும் அபாயங்கள் உள்ளது. எனவே, இந்த சடலங்களின்  தகனம் சில சிறப்பு உபகரணங்களுடன் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்  சடங்குகளைச் செய்யும் நபருக்கு தொற்று பரவாமல் தடுக்க இயலும்

எபோலா வைரஸ் தொற்று குறித்து கூடுதல் தகவல்களையும் சிகிச்சையையும் நீங்கள் பெற விரும்பினால், ஒரு ஹீமாட்டாலஜிஸ்ட்டைத் (Hematologist) தொடர்பு கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha