பசியின்மை சிக்கல் என்றால் என்ன | What loss of appetite in Tamil

டிசம்பர் 12, 2020 Lifestyle Diseases 1451 Views

English हिन्दी Bengali Tamil العربية

தற்போதைய சூழலில்  பசியின்மை சிக்கல் குழந்தைகளிடத்தில் அதிகமாகி பரவிவருகிறது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பசியின்மை பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாதலே ஆகும். பசியின்மை  உண்டாவதற்கு சில நோய்களும் காரணமாக அமைகின்றன. மலச்சிக்கல் அல்லது வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு பசி ஏற்படுவதில்லை. உடல் எடையை திடீரென குறைப்பதும் பசியின்மைக்கு காரணமாகிறது. பசியின்மையாக இருக்கும் போது, நீங்கள் வேண்டாவெருப்பாக உணவு உட்கொண்டால், உடல்  வாந்தி அல்லது குமட்டல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்துகிறது. ஒரு நபர் அதிக நாட்கள் பசியின்மையால் அவதிப்படுகிறார் என்றால்,  மருத்துவ மொழியில் அந்நிலையை அனோரெக்ஸியா என்று அழைக்கின்றனர். உணவு  உண்ட பிறகுசிறிது நேரம் நடக்க வேண்டும், இவ்வாறு செய்வதன் மூலம்  நம் உடலால் காற்றை நிதானமாக சுவாசிக்க இயலும். மேலும், இது உணவை சரியாக ஜீரணிக்க உதவுகிறது. இது தவிர, உணவுக்கு முன் சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டும் இதனால் பசி அதிகரிக்கும். பசியின்மை பிரச்சினைக்கு சிகிச்சையளிக்க, மருத்துவர் சில இரத்த பரிசோதனைகளை செய்கின்றனர், அதோடு  வயிற்றில் எக்ஸ்ரே மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் போன்றவற்றையும் செய்கின்றனர். இந்த கட்டுரையில் பசியின்மை சிக்கல் என்றால் என்ன என்பது குறித்து சில தகவல்களை விளக்குவோம்

  • பசியின்மைக்கு என்ன காரணம்? (What are the causes of Loss of Appetite in Tamil?)
  • பசியின்மையின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of Loss of Appetite in Tamil?)
  • பசியின்மைக்கான பரிசோதனைகள். (Diagnosis of Loss of Appetite in Tamil.)
  • பசியின்மைக்கான  சிகிச்சை என்ன? (What are the treatments for Loss of Appetite in Tamil?)

பசியின்மைக்கு என்ன காரணம்? (What are the causes of loss of Appetite in Tamil?)

பசியின்மை உணர்வு ஒருவித நோயைக் குறிக்கிறது. தொற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கும் பசியின்மை ஏற்படுகிறது. உங்கள்  உடலில் பசியின்மை  பிரச்சினை இருந்தால்அதற்கு சிகிச்சையளிப்பதன் மூலம் தடுக்க முயற்சி செய்யுங்கள். சில நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான  அறிகுறியாகவும்  பசியின்மை உண்டாகிறது, அவை:  

  • ஹெபடைடிஸ் (மேலும் ஹெபடைடிஸ் பி என்றால் என்ன என்பதைப் படியுங்கள்
  • சிறுநீரக நோய்த்தொற்று
  • கல்லீரல் அழற்சி
  • நிமோனியா
  • எச்..வி தொற்று
  • சில நோய்களும் பசியின்மைக்கு காரணமாகின்றன, அவை:
  • கிரோன் நோய்
  • பெருங்குடல் புற்றுநோய்
  • செலியாக் நோய்
  • சில மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாகவும்  பசியின்மை உண்டாகிறது
  • ஒரு நபர் மன அழுத்தத்தில் இருக்கும்போது பசியின்மையை உணர்கிறார்.
  • பசியின்மை சிக்கலை அதிகரிக்கும் சில ஆபத்து காரணிகள் யாதெனில்,
  • இதய செயலிழப்பு 
  • உடல் வலி
  • இரத்த சோகை (மேலும்  படிக்க- இரத்த சோகையின் சிகிச்சை என்ன
  • சுவாசிப்பதில் சிரமம்
  • முதுமை நோய்
  • கர்ப்பத்தின் முதல் மாதம்
  • வயிறு வீக்கம்.

பசியின்மையின் அறிகுறிகள் யாவை? (What are the symptoms of loss of Appetite in Tamil?)

சில குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து குறைபாட்டினால் பசியின்மை உணர்வு  உண்டாகிறது. பசியின்மை காரணமாக சரியாக  உணவு உட்கொள்ளாததால் சிலருக்கு தசை இழப்பும் ஏற்படுகிறது. சிலருக்கு பசியின்மை உணர்வு சிறிது நேரமே இருக்கிறது மற்றும் சிலருக்கு  நீண்ட நேரமானாலும் பசி  ஏற்படுவதில்லை. (மேலும் படியுங்கள் – அனோரெக்ஸியா என்றால் என்ன)

பின்வருவன பசியின்மையின் அறிகுறிகளாகும், அவை:

  • ஒரு உணவின் வாசனையை வாசம் செய்த பிறகு, அந்த உணவை உட்கொள்ள விரும்பாமல் இருப்பது.
  • உணவை உட்கொள்ளாது இருத்தல்.
  • உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பது.
  • சிறிதளவு  உணவுகளை உட்கொண்டு  வயிற்றை விரைவாக நிரப்புதல்
  • ஒரு வகை  குறிப்பிட்ட உணவியினை மட்டும்  உண்ணுதல்
  • பிடிக்காத  உணவை சாப்பிட முயற்சிப்பது
  • மேலும், திடீரென உடல் எடையில் குறைவு ஏற்படுகின்றது  என்றால், நீங்கள் மருத்துவரைத் தொடர்பு கொண்டு சிகிச்சை பெற வேண்டும்

பசியின்மைக்கான  பரிசோதனைகள் (Diagnosis of loss of Appetite in Tamil)

பசியின்மை இருக்கும்போது,  மருத்துவர் அந்த ​​நோயாளியின்  உடல்  எடை, அவரின் நீளம் போன்றவற்றை அளவிட்டு, முந்தைய அளவுகளோடு ஒப்பிடுகிறார். மேலும், அந்த  நோயாளியின்  நாள்பட்ட மருத்துவ  வரலாறு பற்றியும்  மருத்துவர் நோயாளியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார். மேலும்நோயறிதல் தொடர்பான தகவல்களை  எளிதாகப்பெறுவதற்காக மருத்துவர்கள் நோயாளிகள் முன்பு எடுத்துக் கொண்ட மருந்துகள்பற்றி விரிவாகக் கேட்கின்றனர். நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் தொடர்பான கேள்விகளையும் கேட்கின்றனர். இன்னும் சில நிபுணர்கள் இதுபோன்ற கேள்விகளை  கேட்கலாம்: பசியின்மை தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் அறிகுறி என்ன? மற்றும் உங்களின் தற்போதைய எடை எவ்வளவு? போன்ற கேள்விகளையும் கேட்கின்றனர்.

இது தவிர, நோயாளிக்கு சில பரிசோதனைகளையும் செய்கின்றனர்.

  • மார்பில்  எக்ஸ்ரே எடுத்தல்.
  • வயிற்றில் அல்ட்ராசவுண்ட்  ஸ்கேன் செய்தல். 
  • இரத்த பரிசோதனை செய்தல்
  • கல்லீரல் மற்றும் தைராய்டு பரிசோதனை செய்தல். 
  • மன அழுத்திற்கான  பரிசோதனை
  • மார்பு மற்றும் தலையில் சீடி ஸ்கேன் செய்தல்.
  • ஆல்கஹால் பழக்கத்தை மாற்ற அறிவுறுத்துதல்
  • கர்ப்பிணிப் பெண்களிடத்தில் எச்..வி பரிசோதனை.

பசியின்மைக்கான சிகிச்சை என்ன? (What are the treatments for loss of Appetite in Tamil?)

பசியின்மைக்கு சிகிச்சையளிக்க, மருத்துவப் பயிற்சியாளர்கள்  முதலில் நோயாளிகளுக்கு பசியின்மை ஏற்படுவதற்கான  காரணங்களை புரிந்துகொள்கிறார்கள். பின்னர், பசியின்மை  சிக்கலை சரிசெய்ய சிகிச்சை அளிக்கின்றனர். நோய்த்தொற்று காரணமாக பசியின்மை ஏற்பட்டால், நோய்த்தொற்றைக் குறைக்கும் சில மருந்துகளை வழங்குகின்றனர். பசியின்மை பெரும்பாலும் உடலின் உள்புற  காரணிகளால் ஏற்படுகிறது, இதற்கு விரைவாக சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியமானதாகும். மிகவும்  சிக்கலான நிலையில் வல்லுநர்கள் பல்வேறு சிகிச்சைகள் மூலம் பசியின்மை  சிக்கலை சரிசெய்ய முயற்சிக்கின்றனர்.

  • பசியின்மையைக் குறைக்க, மருத்துவர் பின்வரும் சிலவற்றை  பரிந்துரைக்கின்றனர், இதனை பின்பற்றி  நீங்கள் பசியின்மை பிரச்சினையிலிருந்து விடுபடலாம்
  • நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உங்கள் பசியை அதிகரிக்கும்.
  • குடலை குணப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினையை நீங்கள் குணப்படுத்த முடியும்.
  • பசியின்மையால் நீங்கள் பலவீனமாக இருந்தால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ளத் தொடங்குங்கள்
  • பதட்டம் மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகளை மனதிலிருந்து விலக்கி வைக்க முயற்சி செய்யுங்கள்
  • மலச்சிக்கல், சோர்வு, வயிற்றுப் பிடிப்பு போன்ற சிக்கல்கள் இருந்தால், எலக்ட்ரோலைட் சப்லிமென்ட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • மிகவும்  கடுமையான  நிலையில், நோயாளிகளுக்கு  மருத்துவர்கள் ஊட்டச்சத்து மருந்துகளை ஒரு குழாயின் மூலம் செலுத்துகின்றனர்.

பசியின்மை பிரச்சினையால் நீங்கள் பாதிப்புக்கு உள்ளானால், ஒரு பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.  

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள்  நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில்,  அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


மும்பையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Mumbai)

டெல்லியில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Delhi)

சென்னையில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Chennai)

பெங்களூரில் சிறந்த பொது மருத்துவர் (Best General Physician in Bangalore)


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox