ஜாதிக்காய் எண்ணெய் என்றால் என்ன | What is nutmeg oil in Tamil
மார்ச் 11, 2021 Lifestyle Diseases 1393 Viewsஜாதிக்காய் எண்ணெய் பிற எண்ணெய்களிலிருந்து வேறுபட்டதாகும். ஏனெனில், இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. மற்றும் இது பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஜாதிக்காய் எண்ணெய் மிகவும் பிரபலமாக இல்லாததால், இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்தத் தகவல்களை மிகச் சிலரே அறிந்துள்ளனர். இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. பெண்களை பொறுத்தவரை, ஜாதிக்காய் எண்ணெய் ஒரு வரமாகும், ஏனெனில் இது மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது. இது தவிர, ஜாதிக்காய் எண்ணெய் மன அழுத்தம், இருதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் பிற பாலியல் பிரச்சினைகள் குறைக்க உதவுகிறது. ஜாதிக்காய் எண்ணெய் என்றால் என்ன? என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
- ஜாதிக்காய் எண்ணெய் என்றால் என்ன? (What is nutmeg oil in Tamil?)
- ஜாதிக்காய் எண்ணெயில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் மற்றும் தாதுக்கள் யாவை? (What are the nutrients and minerals found in nutmeg oil in Tamil?)
- ஜாதிக்காய் எண்ணெயின் நன்மைகள் யாவை? (What are the benefits of nutmeg oil in Tamil?)
- ஜாதிக்காய் எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of nutmeg oil in Tamil?)
ஜாதிக்காய் எண்ணெய் என்றால் என்ன? (What is nutmeg oil in Tamil?)
ஜாதிக்காய் விதைகளிலிருந்து ஜாதிக்காய் எண்ணெய் பெறப்படுகிறது. பெரும்பாலும், ஜாதிக்காய் உணவின் சுவையை அதிகரிக்கும் ஓர் மசாலாப் பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. மேலும், பழங்காலங்களிலிருந்தே இதன் மருத்துவ குணங்களினால், இது பல்வேறு சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஜாதிக்காயிலுள்ள மருத்துவ குணங்கள் காரணமாக, இது பல்வேறு வகையான சோப்புகள் மற்றும் முகம் கிரீம் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது. ஜாதிக்காய் எண்ணெய் பல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
ஜாதிக்காய் எண்ணெயில் காணப்படும் ஊட்டச்சத்து கூறுகள் மற்றும் தாதுக்கள் யாவை? (What are the nutrients and minerals found in nutmeg oil in Tamil?)
ஜாதிக்காய் எண்ணெய் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. இதில் கணிசமான அளவில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், ஃபைபர் மற்றும் லுடீன்–ஜீயாக்சாண்டின் (lutein zeaxanthin) ஆகியவை உள்ளன. மேலும், இவை ஆன்ட்டிஆக்ஸிடன்டுகளாக செயல்படுகின்றன. இது தவிர, இதில் ஃபோலேட்ஸ், நியாசின், பைரிடாக்சின், ரைபோஃப்ளேவின், தியாமின், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், துத்தநாகம், கரோட்டின், கிரிப்டோ–சாந்தைன் போன்ற பல்வேறு ஊட்டச்சத்து கூறுகளும் உள்ளன.
ஜாதிக்காய் எண்ணெயின் நன்மைகள் யாவை? (What are the benefits of nutmeg oil in Tamil?)
- சிறுநீர்ப்பை தொற்றுநோயைத் தடுக்கிறது (Prevents bladder infection): ஜாதிக்காய் எண்ணெயில் பல மருத்துவ குணங்கள் உள்ளன, இது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைத் தாக்கும் தொற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது. இதில் ஏராளமான ஆன்ட்டிஆக்ஸிடன்டுகள் உள்ளன, இவை உடலுக்குள் பாக்டீரியா பரவாமல் தடுக்கிறது. இது சிறுநீர் பாதையைத் தாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மற்றும் சிறந்த சுகாதாரத்தை மேம்படுத்துகிறது. ஜாதிக்காய் எண்ணெயில் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன, எனவே இந்த எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவது பாக்டீரியா மற்றும் வைரஸ்களின் தாக்குதல்களைக் குறைக்கிறது.
- சிறுநீரகக் கற்களுக்கான தீர்வு (Remedies for kidney stones): ஜாதிக்காய் எண்ணெய் சிறுநீரகத்தை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. ஜாதிக்காய் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்களின் அளவைக் குறைக்க இயலும், என சில ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன. இதன் உட்கொள்ளல், சிறுநீரக கற்கள் சிறுநீருடன் வெளியேறும் போது வலியற்றதாக அகற்ற அனுமதிக்கிறது. தினசரி ஜாதிக்காய் எண்ணெயை தவறாமல் பயன்படுத்துவது சிறுநீரக கற்களின் சிக்கலைக் குறைத்து வலியைக் குறைக்க உதவுகிறது.
- வலியைப் போக்கும் (Relieves pain): மூட்டில் வீக்கம் மற்றும் மூட்டு வலி பிரச்சினையைக் குணப்படுத்த ஜாதிக்காய் எண்ணெய் நன்மை பயக்கிறது. பலவீனமான நரம்பு மண்டலம் மற்றும் வயது அதிகரிப்பதன் விளைவாக மூட்டு வலி ஏற்படுகின்றது. மூட்டு வலியின் சிக்கல்கள், வயதுவரம்பின்றி அனைத்து வயதினருக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. ஜாதிக்காய் எண்ணெயில் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்ட்டி அழற்சி பண்புகள் உள்ளன. தினசரி உணவில் ஜாதிக்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் மூட்டு வலி, வீக்கம் மற்றும் தொண்டை அழற்சியுடன் தொடர்புடைய சிக்கல்களைக் குறைக்க இயலும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜாதிக்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், வலியைக் குறைக்க முடிகிறது.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது (Improves digestion): அஜீரணக்கோளாறு போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய ஜாதிக்காய் எண்ணெய் நன்மை பயக்கிறது. இந்த எண்ணெய் பலவீனமான செரிமான முறையை பலப்படுத்துகிறது. தினசரி, உணவில் ஜாதிக்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம் மலச்சிக்கலைக் குணப்படுத்த இயலும். வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு ஏற்பட்டால், ஜாதிக்காய் எண்ணெயைக் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மசாஜ் செய்வதன் மூலம், வலியின் தீவிரத்தை குறைக்க முடிகிறது. (மேலும் படிக்க – வாழ்க்கை முறை தொடர்பான நோய்கள்)
- ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது (Cures asthma): ஆஸ்துமா என்பது ஒரு வகை சுவாசக் கோளாறு ஆகும், இதற்கான சிகிச்சையில் ஜாதிக்காய் எண்ணெய் பயன்படுகின்றது. இந்த எண்ணெய் வீக்கத்தைக் குறைத்து தசைகளை தளர்த்துகிறது. மேலும், ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கவும், வாயிலிருந்து வெளியேறும் துர்நாற்றத்தை குறைக்கவும் இது உதவுகிறது, என சில ஆராய்ச்சிகள் முடிவுகள் கூறுகின்றன. இந்த எண்ணெயை தினசரி பயன்படுத்துவதன் மூலம், நுரையீரல் நிவாரணம் பெறுகிறது மற்றும் சுவாசக் கோளாறு குணமாகிறது. ஆஸ்துமா உள்ளவர்கள் ஜாதிக்காய் எண்ணெயைத் தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
ஜாதிக்காய் எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of nutmeg oil in Tamil?)
ஜாதிக்காய் எண்ணெயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. எனினும், இது சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது, அவை:
- இதன், அதிகப்படியான பயன்பாடு சில நபர்களுக்கு மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தக்கூடும்
- ஜாதிக்காய் நறுமணத்தின் காரணமாக சிலருக்கு ஹாலோசினேஸன் ஏற்படுகிறது. இது தவிர, சிலருக்கு பார்வை குறைபாடுகளும் ஏற்படுகின்றது.
- ஜாதிக்காய் எண்ணெய்க்கு ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அரிப்பு, வாந்தி, வெளியேற்றம் அல்லது சொறி போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இத்தகைய அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக ஜாதிக்காயின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். இத்தகைய ஒவ்வாமை உள்ள நபர்கள் அதனைப் பயன்படுத்தக் கூடாது.
- ஜாதிக்காய் எண்ணெயை அதிகமாகப் பயன்படுத்துவதால் தூக்கப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும், இது முழுமையற்ற தூக்கம் மற்றும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. (மேலும் வாசிக்க – தூக்கமின்மை என்றால் என்ன)
- முதன்முறையாக ஜாதிக்காய் எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், இதனைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒருவர் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
ஜாதிக்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதால் உடல்நலம் தொடர்பான ஏதேனும் முறைகேடுகளை நீங்கள் சந்திக்கிறீர்கள் எனில், உடனடியாக உங்கள் அருகிலுள்ள பொது மருத்துவரைத் (General Physician) தொடர்பு கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.
டெல்லியில் சிறந்த பொது மருத்துவர்
சென்னையில் சிறந்த பொது மருத்துவர்