பாலியல் சிகிச்சை என்றால் என்ன | What is sex therapy in Tamil 

ஏப்ரல் 8, 2021 Lifestyle Diseases 1674 Views

हिन्दी Tamil

பெரும்பாலும், மக்கள் செக்ஸ் தொடர்பான உரையாடல்களைத் தவிர்க்கிறார்கள். அதிலும், இந்தியாவில் பாலியல் ரீதியான பேச்சுக்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. மேலும், பாலியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்கள், அதற்கான சிகிச்சையைப் பெற வெட்கப்படுகிறார்கள். உடலுறவின் போது உண்டாகும் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பாலியல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு மருத்துவ முறையாகும், இதில் ஒரு நபரின் மன பிரச்சினைகள் மற்றும் பாலியல் பிரச்சினைகளுக்கான பொருத்தமான சிகிச்சையைக் கண்டறிய பாதிக்கப்பட்ட நபர்களிடம் மருத்துவர்கள் விவாதிக்கின்றனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட நபர் எந்தவித உடல் நோய்களின் தாக்குதலுக்கும் உள்ளாகாத போதுதான் பாலியல் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. இன்றையப் பதிவில், பாலியல் சிகிச்சை முறையைக்பாலியல் சிகிச்சை என்றால் என்ன, என்பது குறித்தத் தகவல்களை பெறுவோம். 

  • பாலியல் சிகிச்சையின் பயன்கள் யாவை? (What are the uses of sex therapy in Tamil?) 
  • பாலியல் சிகிச்சை ஏன் தேவைப்படுகிறது? (Why is sex therapy needed in Tamil?)
  • பாலியல் சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது? (How does sex therapy work in Tamil?) 
  • பாலியல் சிகிச்சையின் நன்மைகள் யாவை? (What are the benefits of sex therapy in Tamil?) 

பாலியல் சிகிச்சையின் பயன்கள் என்ன? (What are the uses of sex therapy in Tamil?) 

பாலியல் நடவடிக்கைகள் மற்றும் பாலியல் உணர்வுகள் குறித்த நெருக்கம், பதற்றம் மற்றும் கவலை தொடர்பான பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க பாலியல் சிகிச்சை பயனுள்ளதாக அமைகிறது. இந்த சிகிச்சை முறையில், பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரின் பங்குதாரர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மருத்துவர் விவாதிக்கிறார் மற்றும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கிறார். பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு பாலியல் சிகிச்சை உதவுகிறது. மேலும், வெவ்வேறு வயதுக்குட்பட்டவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமைகிறது. (மேலும் படிக்க- பள்ளி குழந்தைகளுக்கான பாலியல் கல்வி

பாலியல் சிகிச்சை ஏன் தேவைப்படுகிறது? (Why is sex therapy needed in Tamil?) 

எந்தவொரு நபருக்கும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய பிரச்சினைகளிலிருந்து விடுபட பாலியல் சிகிச்சை தேவைப்படுகிறது. பாலியல் சிகிச்சையின் மூலம் பலரும் உடலுறவு பற்றி விரிவாக  அறிகிறார்கள். பாலியல் பிரச்சினையின் மூல காரணத்தைக் கண்டறிய இது பயன்படுத்துகிறது. இந்த சிகிச்சை முறையில் பாலியல் ரீதியான பிரச்சினைகளை பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவர்களுடன் வெளிப்படையாக விவாதிக்கின்றனர். மேலும், பாலியல் ஆரோக்கியம் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க இந்த சிகிச்சை முறை துணைப்புரிக்கின்றது. (மேலும் படிக்க – பாலியல் ஆற்றலை அதிகரிக்க உதவும் வீட்டு வைத்தியங்கள்)

பாலியல் சிகிச்சை எவ்வாறு செயல்படுகிறது? (How does sex therapy works in Tamil?) 

பாலியல் சிகிச்சை என்பது ஒரு வகை மனநல சிகிச்சை முறையாகும், இதில் மக்கள் பாலியல் ரீதியான தங்களின் கவலை, உணர்வுகள் மற்றும் அனுபவங்களைப் பற்றி மருத்துவர்களுடன் வெளிப்படையாக விவாதிக்கிறார்கள், இதன் மூலம், பாலியல் ரீதியான தங்களின் பிரச்சினைகளுக்கான சரியான ஆலோசனைகளைப் பெற முடிகிறது. இந்த செயல்முறை பல அம்சங்களை உள்ளடக்கி உள்ளது மற்றும் பாலியல் தொடர்பான மக்களின் கேள்விகளுக்கு பதில்களை வழங்குகிறது. பாலியல் சிகிச்சை பயிற்சியாளர் பாலியல் ரீதியான பிரச்சினையைப் பற்றி பேசுகிறார், அவற்றை நீக்க உதவும் வழிகளைப் பற்றி விவாதிக்கிறார். தம்பதிகளுக்கு இடையிலான உறவைப் பற்றியும் மருத்துவர் கண்டறிகிறார். சிக்கல்களை அறிந்த பின், அதற்கேற்ப  சில வீட்டு வைத்தியங்களையும் மருத்துவர் பரிந்துரைக்கிறார். பாலியல் சிகிச்சை பல வகையான பாலியல் பிரச்சினைகளை தீர்க்க நன்மை பயக்கிறது. (மேலும்  படிக்க- உளவியல் சிகிச்சை என்றால் என்ன)

பாலியல் சிகிச்சையின் நன்மைகள் என்ன? (What are the benefits of sex therapy in Tamil?) 

பின்வருவன, பாலியல் சிகிச்சையின் நன்மைகளாகும்: 

  • திருமணமான தம்பதிகளுக்கு இடையிலான பரஸ்பர வேறுபாடுகளை சமாளிக்க பாலியல் சிகிச்சை பயனுள்ளதாக இருக்கிறது. 
  • உடலுறவுக்கு பொருத்தமற்ற இடங்களையே பலரும்  தேர்ந்தெடுகிறார்கள். பாலியல் சிகிச்சையின் மூலம், பொருத்தமான மாற்றீட்டைக் கண்டுபிடிக்க மருத்துவர் அவர்களுக்கு உதவுகிறார். 
  • பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நபர்கள், ஒரு பாலியல் சிகிச்சை பயிற்சியாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். (மேலும் படிக்க- பெண்களில் கருவுறாமை பிரச்சினைகள்
  • பெரும்பான்மையான மக்கள் பாலியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அசௌகரியமாக உணர்கிறார்கள். இது தவறான செயல் முறையாகும். மேலும், இந்த பிரச்சினைகள் குறித்து அவர்கள் மருத்துவர்களுடன் வெளிப்படையாக பேச வேண்டும். 
  • பெரும்பாலும், உடலுறவு கொள்ளாமல் இருப்பதன் மூலம், பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதில்லை . இதுபோன்ற பிரச்சினைகளை குறித்து விரிவாக அறிய வேண்டுமெனில் மக்கள் ஒரு பாலியல் சிகிச்சை பயிற்சியாளருடன் விவாதிக்க வேண்டும். 
  •  பெண்கள் மத்தியில் புணர்ச்சியின் பிரச்சினை மிகவும் பொதுவானதாகும். இதுபோன்ற சிக்கல்களைக் குறைக்க வாழ்க்கை முறை மாற்றங்களை பாலியல் சிகிச்சை பயிற்சியாளர் பரிந்துரைக்கிறார். (மேலும் படிக்க- ஆண்களில் லிபிடோ இல்லாததற்கான காரணங்கள்

இந்த கட்டுரையின் மூலம், பாலியல் சிகிச்சை தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் பதிலளிக்க முயன்றுள்ளோம். 

பாலியல் பிரச்சினைகள் தொடர்பான விரிவானத்  தகவல்களை நீங்கள் பெற விரும்பினால், சிறுநீரக மருத்துவரைத் (Urologist) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல.


Best Urologist in Delhi 

Best Urologist in Chennai 

Best Urologist in Mumbai

Best Urologist in Bangalore 


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox


    captcha