குளிர்காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் | What to eat in winter season in Tamil 

ஏப்ரல் 7, 2021 Lifestyle Diseases 153 Views

हिन्दी Tamil

பருவநிலை மாற்றத்தின் காரணமாக கோடை காலம் முடிந்து பின், குளிர்காலம் தொடங்குகிறது. குளிர்காலத்தின் தொடக்கத்தில் ​​மக்கள் அதிக குளிர்ச்சியை உணர்கிறார்கள், இதனால் குளிர்ச்சியைத் தடுக்க சூடான உடைகள் மற்றும் போர்வைகளைப் பயன்படுத்துகிறார்கள். குளிர்காலத்தில் சூடான உடைகள் உடுத்துவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதும் அவசியமாகிறது. ஏனெனில், குளிர்காலத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைகிறது. மேலும், மக்கள் சளி, இருமல், காய்ச்சல், தோல் வறட்சி போன்ற சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற, சிக்கல்களிலிருந்து நிவாரணம் பெற சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். எனவே, இன்றையக் கட்டுரையில் குளிர்காலத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்பது குறித்த தகவல்களை அறிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் என்ன சாப்பிட வேண்டும்? (What to eat in winter season in Tamil?) 

  • ப்ரோக்கோலி (Broccoli): ப்ரோக்கோலியில் ஏராளமான ஊட்டசத்துக்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன, இவை உடலை பொறுத்தமாகவும், ஆரோக்கியமாகவும்  வைத்திருக்க உதவுகின்றன. குளிர்காலத்தில் ப்ரோக்கோலியை உட்கொள்வதன் மூலம், ஐலதோஷப் பிரச்சினையை ஒழிக்க முடிகிறது. ப்ரோக்கோலி சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது. மேலும் இது உடலை கதகதப்பாக வைத்திருக்கிறது. (மேலும் வாசிக்க- ப்ரோக்கோலியின் நன்மைகள் மற்றும் தீமைகள்
  • வெண்ணெய் பழம் (Avocado): வெண்ணெய் பழம் ஓர் சிறந்த உணவாக கருதப்படுகிறது, ஏனெனில் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு பழமாகும். இது, பல்வேறு வகையான நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. வெண்ணெய் பழம் உடலுக்கு கதகதப்பை அளிக்கிறது மற்றும் நரம்பு மண்டலத்திற்கு பயனுள்ளதாக அமைகிறது. எனவே, மக்கள் வெண்ணெய் பழத்தை தங்கள் உணவில் கட்டாயமாக சேர்க்க வேண்டும். (மேலும் வாசிக்க- வெண்ணெய் பழத்தின் நன்மைகள்
  • மாதுளை (Pomegranate): இதில் அதிக அளவில் இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்கவும், புதிய இரத்தத்தை உருவாக்கவும் உதவுகின்றன. மேலும், இது இரத்த சோகையை குணப்படுத்துகிறது. மாதுளை உடலின் பலவீனத்தை குறைத்து உடலை குளிர்ச்சியிலிருந்து தடுக்கிறது. மாதுளையை உரித்து சாப்பிடுங்கள் அல்லது மாதுளை சாற்றை உட்கொள்ளலாம். மேலும், குளிர்காலத்தில் மாதுளையை உட்கொள்ள மறக்காதீர்கள். (மேலும் வாசிக்க- இரும்புச்சத்து குறைபாடு
  • பாதாம் (Almonds): பாதாம் உலர்ந்த பழ வகைகளுள் ஒன்றாகும்,இது உடலுக்கு நல்ல அளவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. மேலும், இவை உடலின் பலவீனத்தைக் குறைக்கும் சில சேர்மங்களைக் கொண்டிருக்கின்றன, மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. குளிர்காலத்தின் போது, உண்டாகும் குளிர்ச்சியைத் தடுக்க இரவில் ஊறவைத்த பாதாமை அதிகாலையில் சாப்பிடுங்கள். இருப்பினும், பாதாமை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும்.
  • மஞ்சள் (Turmeric): மஞ்சள் ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், பல்வேறு வகையான தோல் பிரச்சினைகளை குணப்படுத்துகிறது. குளிர்காலத்தில், குளிர்ச்சியைத் தவிர்க்க நல்ல அளவில் மஞ்சளை உணவில் பயன்படுத்தப்பட வேண்டும். உடல் வலி, காயங்கள், நோய்த்தொற்றுகள் போன்ற பல்வேறு வகையான வியாதிகளிலிருந்து மஞ்சள் நம்மைப் பாதுகாக்கிறது. (மேலும் வாசிக்க- மஞ்சளின் நன்மைகள் மற்றும் தீமைகள்
  • இஞ்சி தேநீர் (Ginger tea): இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கிருமி நாசினிகள் உள்ளன, இவை உடலின் பலவீனம் மற்றும் சோர்வைக் குறைக்கிறது. பெரும்பான்மையான  மக்கள் குளிர்காலத்தில் இஞ்சி தேநீரைக் குடிக்க விரும்புகிறார்கள். ஏனெனில், இஞ்சி குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. 
  • முட்டை (Egg): குளிர்காலத்தில் தினசரி வேகவைத்த முட்டைகளை சாப்பிட வேண்டும். ஏனெனில், இது உடலை பலப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களை நல்ல அளவில் கொண்டுள்ளது. குளிர் பிரதேசங்களில் வாழும் மக்கள் குளிர்ச்சியிலிருந்து நிவாரணம் பெற முட்டைகள் உட்கொள்வதை விரும்புகிறார்கள். 
  • ஆரஞ்சு (Orange): ஆரஞ்சுகளில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடலை பல்வேறு வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. எனவே, மக்கள் தினசரி ஆரஞ்சு பழங்களை உட்கொள்ள வேண்டும். (மேலும் வாசிக்க- ஆரஞ்சுகளின் நன்மைகள் மற்றும் தீமைகள்
  • கேரட் (Carrot): கேரட்டில் பல்வேறு வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இவை உடலின் பலவீனத்தை குறைத்து நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கேரட்டை சூப்பாகவும், பச்சையாகவும், சாலட்டில் சேர்த்தும், கேரட் ஜூஸ் ஆகவும் உட்கொள்ளலாம். 

நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் தொடர்பான தகவல்களை பெற விரும்பினால், ஊட்டச்சத்து நிபுணரைத் (Nutritionist) தொடர்பு கொள்ளுங்கள். 

இந்தக் கட்டுரையின் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கமாகும். எந்தவொரு மருந்தையும், சிகிச்சையையும், அறுவை சிகிச்சையையும்  நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஒரு மருத்துவர் மட்டுமே உங்களுக்கு நல்ல ஆலோசனையை வழங்க முடியும். ஏனெனில், அவர்களை விட வேறு யாரும் சிறந்தவர்கள் அல்ல


Login to Health

Login to Health

எங்கள் எழுத்தாளர்கள் குழு சுகாதாரத் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உடல்நலப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதற்கும், அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், சரியான மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதற்கும், அவர்களின் ஆரோக்கியத்திற்கான சரியான முடிவை எடுப்பதற்கும் சிறந்த பொருள் எங்கள் வாசகர்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

Over 1 Million Users Visit Us Monthly

Join our email list to get the exclusive unpublished health content right in your inbox